Saturday, November 5, 2022

வாசி வாசித்து பழகுவோம் வாங்க

 வாசி வாசித்து பழகுவோம் வாங்க


”வாசி வாசி என்று வாசித்த பொருள் ஒன்று- சிவா சிவா என்று சிந்தித்த பொருளும் ஒன்று” என்பது சித்தர் வழக்கம். சாதாரணமாக பிராணாயாமம் செய்வதை தான் நம்ம மக்கள் வாசி யோகம்ண்ணு சொல்லி கேட்டிருப்பீங்க, ஆனா உண்மையில் வாசி யோகம் என்பது சிவா சிவா என சிந்தித்திருப்பதேயாம் என்பதை வெகுசிலரே அறிவர்.


வாசிப்பது என்பது ஒன்று சிந்திப்பது மற்றொன்று, ஆக இரு வித நிலைகள் ஒன்று சேர்ந்து வருவது தான் வாசி யோக நுணுக்கம். ஆனால் உண்மையில் இது பிராணாயாமமும் அல்ல ஜெபமும் அல்ல, ஆனால் இரண்டையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட முறையாகும் என்பது அறிவார் அறிவர்.


‘வாமத்தே ஈரெட்டு மாத்திரை பூரித்து ஏமுற்ற முப்பத்திரண்டும் ரேசித்து காமுற்ற பிங்கலை கண்ணாக இவ்விரண்டோமத்தால் எட்டெட்டும் கும்பிக்க உண்மையே” என திருமூலர் சொல்வதை கவனிக்க இதன் நுணுக்கம் புரியும்.


பூரித்து ரேசித்து கும்பித்து என சொல்வதை பார்த்தல் மக்கள் உடனேயே இது பிராணாயாம முறை தான் என நிர்ணயித்து விடுகின்றனர். ஆனால் “பிங்கலை கண்ணாக” எதோ சொல்லி வருகிறாரே மூலர், அது என்னவாம் என சிந்திப்பது இல்லை.


அப்ப..டாட்டா பை பை...அடுத்த பதிவுல கொஞ்சம் அதிகமா பார்ப்போம்..சரியா

பெரிய வித்தை எது தெரியுமா?

 பெரிய வித்தை எது தெரியுமா?


ஆன்மீக வாழ்கையில் பல படிகள் கடந்து எங்குமே அடையாமல் வீணாக செத்து தொலையும் மக்களை அனேகம் காண்கிறோம். வள்ளலார் சில இடங்களில் சொல்லி வருகிறார், சின்ன ஒளியை கண்டு ஏமாந்து பெரிய ஞனிகளாக வலம் வருபவர்கள் ஏராளமாக காண்கிறோம்.ஆனால் பெரியதாக இருக்கிற வித்தையை நாம் நிச்சயம் கண்டிருக்க வேண்டும்.நிச்சயம் நமுக்கு அது பெருந்துணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


வித்தைகளுக்கு எல்லாம் ராஜ வித்தை என்பது தன்னை காப்பதுவாகும்.தன்னை காப்பது என்பது தன்னை வெளிக்காட்டாமல் இருப்பது ஆகும். தன்னை வெளிகாட்டாமல் இருப்பது என்பது தன்னடக்கம் ஆகும். தன்னடக்கம் என்பது வீண் கர்வம் கொள்ளாதிருத்தலே ஆகும்.


உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் ’வித்தை பெருமை’, அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம்.


யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம்.அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் ’தன் வித்தை தான் பிரம்மாண்டம்’, இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை.இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை.

ஆதி புள்ளியே துணை

 ஆதி புள்ளியே துணை


ஆதியில் புள்ளி இருந்தது,அந்த புள்ளி ஆதியோடு இருந்தது, அந்த புள்ளி ஆதியாகவும் இருந்தது, அந்த புள்ளியின் உள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்குள் ஒளியாக இருந்தது. அந்த ஒளி மனிதனுக்குள் பிரகாசிக்கின்றது, ஆனால் மனிதனோ அந்த புள்ளியை பற்றி கொள்ளாமல் இருக்கின்றான். அந்த புள்ளியே தனது தந்தையாகிய பிதாவினிடத்தில் இருந்து கன்னியாகிய தாயின் சூலில் தங்கிய குமாரனாகிய நீ

இறைவனும்= வேதமும்

 உண்மையான சீடனுக்கு தகுந்த குணநலன்கள் கொண்ட பிற்பாடு அல்லவா உண்மையான குருவை அடையாளம் காண்பது எவ்விதம் என விழையவேண்டும் அல்லவா


தூலமான உடலை கண்டு என்ன பிரயோசனம் ஐயா...அறிவான உருவை அல்லவா அறிதல் நலம்.அது எங்கிருந்தால் என்ன...விருந்து சாப்பிட்டால் போதும் அல்லவா?

 சாந்து உண்டாகட்டும் ஜீ..மனம் அமைதி பெறட்டும்....அதிக ஆவல் கொண்டால் மனம் அமிதியை இழந்துவிடும்...ஆவலே வினையாகி விடும்..காமம் தலைகேறினவனுக்கும் கோபம் கொண்டவனுக்கும் அதிக ஆவல் இருப்பவனுக்கும் அறிவு வேலை செய்யாது. நடுநிலையே ஞானத்துக்கு அடித்தளம்

குருவும் லித்தும்

 எந்த வித்தைகளும் ஞானத்தை நேரடியாக தராது.. அதுக்காக அவையெல்லாம் அர்த்தமற்றவை அல்ல... ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாலம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்....


ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வலவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்...ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை..குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பஹ்டில்லை...வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்..அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது...அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது...வித்தையே குருவாகின்றது...இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....

இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க , அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம்.

-- திரு. ரியான் ஐயா அவர்கள்

மெய்யறிவு

 மெய்யறிவு

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதே குரு மரபு. நாம் முதலில் அறிவது உயிரெழுத்தையே, பின்னர் மெய் எழுத்தும் நம் புலன்களை அடைகின்றன. இறைவன் எழுத்தை ஏன் அறிவித்தான் எனில் அது மெய்யறிவு பெற்றற்கண்ணே. சிறாபோது எழுத்தறியுமுன்னே நாம் உயிர் ஈது மெய் ஈதுவென அறிந்திலோம், அவ்விருட்கண்ணே அருட்திருவுருவாம் ஆசான் அமைந்து, நம் சூண்டாணி விரல் பிடித்து அரியென வரைதல் அருமை. உயிர் எழுத்தின்பால் அவ்வாசான் சூண்ட அவ்வகாரமான உயிரை இரீங்காரமான அருட்சக்தியின்கண்ணே பதிப்பித்தல் இனிதே அமைவுறுகிறது. உயிரின்றி மெய்யில்லை அம்மெய்யும் உயிரின்றி வெளிப்படுமாறில்லையெனவறிந்தே இறையறிவு மெய்யை உயிரின்கண் உடம்பில் அமைத்தான் அமைவுற. மெய்யென வகுப்ப அது விந்து நிலையதாம், ஆதலின் அகத்திய பெருந்தகை விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார். அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம். நாத நாதாந்த நிலையே இறையறிவு, அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும். மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம், அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும். உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே. அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும், அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம், ஆதலின் அதன்கண் விந்து பதிற்று. (விந்து-புள்ளி)

பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?

 பாத்திரங்களில் சிறந்தது எதுவாம்?



தலைப்பை பாத்துகிட்டு சிரிக்காதீக!!!!...பாத்திரம் என்றால் தீட்சை பெற்றுகொள்ள தகுந்தவன் என பொருள் சொல்றாங்க மகான்கள்.


பரமோன்னத குருவை அடைவது என்பது இப்பிறவியின் பயன் மட்டுமல்ல, பலபிறவிகளின் பலன். எண்ணற்ற பிறவிகளின் பலனே குரு வடிவமாக எழுந்தருளுகின்றது. அதை பயன்படுத்திகொள்வதும் அவனவன் செய்த புண்ணிய ஸுஹ்ருதமேயாம் என்பதில் ஐய்யமில்லை.


பிறப்பிலேயே உலக விஷயங்களில் வேட்க்கையற்று இவற்றை கடந்த எதையோ சாதிக்க வேண்டும் எனும் உந்துதலோடு பிறப்பவன், எதனையும் பொருட்படுத்தாது இளம் பிராயத்திலேயே மூகனாக ஏகனாக எதையோ தேடிகொண்டிருக்கும் தன்மை பொருந்தியவனாக ஒன்றிலும் பற்றில்லாதவனாக வேட்கை மிகுந்தவனாக திரிவான், காய்ந்த சருகு போல....குருவின் திருவுரு தரிசித்த மத்திரத்தாலேயே அவனில் ஆனந்தம் அணை உடைந்தாற்போல் குதூகலிக்கும்,ஏன் என்றோ எதற்க்கு என்றோ அவனையும் அறியாமல் எழும் எழுச்சி அது.அவனுக்கு கேள்வி என கேட்க்க ஒன்றுமில்லாமல் இருக்கும்...சந்தேகம் என ஒன்று அவன் மனதில் கூட துளிர் விடாதிருக்கும்..ஏதோ ஜென்மத்து உறவு போல குருவிடம் பழகுவான்.. ஒன்றையும் கேட்டு பெற்றுகொள்ள வேண்டும் எனும் சிந்தை கூட அவனிடம் இருக்காது... குருவுக்கு தெரியும், எப்போது எதை எவ்வண்ணம் கொடுக்கவேண்டும் என நிதர்சித்திருப்பான்...அவனுக்கு என தேவை ஒன்று இருக்காது, சேலையும் நூலும் போல குருவிடம் இருப்பான்...பூரண சரணாகதியுடையவனாயிருப்பான். குரு ஒன்றை சூசகமாக சொன்னால் கூட பஞ்சை போல பற்றிகொள்ளும் திறம் கொண்டவனாயிருப்பான். இவன் உத்தம பாத்திரம்

தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்

 தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம்



ஆதியே துணை.. குரு வாஅழ்க குருவே துணை.. தாயானவள் மகவை ஈனும் போதிலே உண்டாகும் ஆனந்தம் என்ன என்பதை உணரும் தருணம் வாய்த்த முகூர்தம் கிடைத்தது என்பது மகிழ்ச்சியான நிகழ்வே தான். சுத்தமான பாத்திரம் முன்னால் நீட்டப்படும் போது ஈயாது முகம்திருப்புதல் நன்றல்லவே..ஆதலின் ஈந்து விட்டேன்..ஈன்று விட்டேன்..அந்த ஆறாவது அறிவினை..பெற்றவர் பேறு கொண்டவர் என்பதில் மாற்று கருத்தில்லை....எண்ணிலிகோடி சென்மங்களின் பிறவி பலனென்பதில் ஐயமுமில்லை...நமசிவாயம் வாஅழ்க..நாதன் தாள் வாஅழ்க..இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாஅழ்க. வாஅழ்க குருவடி வாஅழ்க வாஅழ்கவே.

அலீஃப்

 ==அலீஃப்===

செம்மை னல னேர் வழியை ஒரு தேவேசரின் திருவாய் மூலம் வெளியாக்குவதுவே ‘வஹது’.உன் செவி வாயிலாக அத் தேவ ஆசரியர் உனக்கு ஒலி வீட்டமுதை ஊட்டுகின்றார்.சிபத்துக்கள்-வித்தியா தத்துவங்கள்-ஏழும் பிரயோஜன அளவில் ஏழு ஒலி வீடுகளாக இருக்கின்றன.அந்த அருந்தலத்திலிருந்து எடுத்து அளத்தலே அறிவாகார தேவ வர்ஷிப்பாகும். அவர்கள் அது னேரம் தன் சப்தமாகிய உயிரை உனக்கு செலவிடுகிறார்கள்.அப்போது அந்த தேவ அமுதை ஆர்வத்துடன் உண்ணாதுவிட்டால் னீ கெடுவதோடு,அவர்களை ஏமாற்றிய பாவமும் உன் தலையில் வந்து விழும்.உன் ஜீவனில் உள்ள சர்வ மாசுக்களையும் ஒழிப்பதே செவி உணவு.அருளமுதமாகிய தெய்வ மருந்து உண்டால் தான்,உன் ஜீவனில் கப்பியுள்ள அழிகரு வழிவரு பிறவிமாசு ஒழியும்.


-=சித்திரசபை வாழ் வள்ளல் சாலை ஆண்டவர் அவர்கள்

ஆதி அமலாண்மை

 ஆதி அமலாண்மை



மனுத்தூலத்தில் இவ்வளவு வல்லபங்கள் இருந்தும் இருந்தும் அவற்றை கைபோட்டவர்கள் நாம் ஒருவர் தாம். ”முகாரவிந்த பேத விந்து நாதாதி இன்பனுச் சூடாகர சப்த சப்தாதிய சாயல்களும்” என்று நாம் ஆதிமான்மியத்தில் கூறியிருக்கிறோமே. அதன்படி இந்த மனித குலம் ஒரே அச்சிலிருந்து உண்டாகியிருந்தாலும்-ஒருவருக்கு தரப்பெற்றுள்ள கருவிகளனைத்தும் மற்ற எல்லோருக்கும் தரபெற்றிருந்தாலும் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறார்கள்? ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறதே-கண் காது மூக்கு முதலியன எல்லாம் ஒன்று போலவே தேகத்தில் முகம் என்ற ஒரே எல்லையில் அமைக்கபெற்றிருந்தாலும், அந்த முகத்தில் எத்தனை சாயல்கள்,எத்தனை பேதங்கள் இருக்கின்றன. சப்த குறியை எடுத்துகொண்டால் எல்லோரிடமும் அதை உண்டாக்குவது ஒரே கருவி தான், ஒரே அமைப்புதாநப்படி இருந்தாலும் தொனி ஆளுக்கு ஆள் வேறு வேறாயிருக்கிறது-இத்தனை முகாரவிந்த பேதங்களும், சப்த சப்தாதிய சாயல்களும் மனித ரூபத்தின் உள்ளே அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டிருக்கிற அந்த தேவ சுவிட்சின் அகம் புற கிரண வீச்சுக்களே ஆகும். அத்தகைய அமலாண்மை ஆதியை, பிணை நிகரில்லா பெருவான் கடையை மனித உடல் பெற்ற ஒருவன்,இந்த உடல் இருக்கும் போதே கைபோடவில்லை என்றால் அவனை நாய் நரி என்று கூட வேதம் சொல்லும்-மலத்தில் புழுத்த ஒரு புழு என்று கூட சொல்ல ‘அது’ சம்மதிக்காது

==யுகவான் சாலை ஆண்டவர்கள்.