Thursday, November 10, 2022

கர்மம்

 கர்மம்




"கர்மம்" என்பது எல்லா செயல்களும் தான், நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி, அவையெல்லாம் கர்மம் எனும் கட்டுக்கள் வரும்.


"அகர்மம்" என்பது கர்மங்களை நிராகரிப்பது, செயலாற்றாமல் இருக்கும் தன்மை.


"விகர்மம்" என்பது ஞானம், எல்லா கர்மங்களையும் பந்தம் அற்று நிசங்கத்துடன் செயலாற்றும் அர்ப்பண செயல்.


கர்மம், மனத்தால் செய்யபடுவது உண்டு,
உடலால் செய்யபடுவதும் உண்டு
மனம் உடல் சேர்ந்து செய்யபடுவதும் உண்டு.


குறைபாடுள்ள மனம் கொண்டவர்கள் செய்யும் கர்மமும் பலனை கொடுப்பனவையே, குறைபாடுள்ள உடலை கொண்டவர்கள் செயலும் பலனை கொடுப்பவையே. ஆனால் குறைபாடின் தன்மைக்கு ஏற்ப குணநலன்களும் குறையாகவே இருக்க வாய்ப்பு அதிகம் அல்லவா?. ஆனால் கர்ம பிறவி என்பதும் கர்ம பூமி என்பதும் ஒன்றோடொன்று பந்தம் கொண்டவை. 80 ஆயிரம் கோடி கர்ம பூமிகள் இருக்கின்றனவாம். அவற்றில் ஒவ்வொன்றிலும் பிறப்பதும் கர்ம புண்ணியம் பாவம் நிமித்தமே தான்.


கர்ம பூமிகள் என சொல்லபடுவது இப்பூவுலகு போல, கர்ம பலன்கலால் பிரதிபலிக்ககூடிய உலகங்கள் தாம். இவ்வுலககமும் கூட ஒரு பிரதிபலிப்பு தான். கர்மங்களுக்கு ஏற்ற பிரதிபலிப்பு.


ஒருவன் ஒரு பாறாங்கல்லை உடைக்கின்றான் என கொள்ளுங்கள். அந்த உடைக்கும் செயலுக்கு பலன் அவன் கர்ம பந்தத்தில் பலனாக பரிணமிக்கும். அதேவேளை உடைக்கபட்ட பாறாங்கல் ஒருபோதும் பழையபடி ஆவதில்லை, உடைத்த பலனை தாங்கி எக்காலமும் நிற்கின்றது. அடுத்து வருபவனுக்கு உடைக்கும் வாய்ப்பு கிடையாமல் போய் விடுகின்றது, ஏனெனில் அது உடைபட்டு விட்டது. அப்படியிருக்க, உடைபட்ட கல்லை தரிசிக்க கர்மம் செய்தவன் மட்டுமே அதை தரிசிக்கிறான். முழு கல்லை தரிசிக்க கர்மம் உடையவன் உடைந்த கல் அருகாமையில் வருவதில்லை.

பிராணன் என்பது என்ன?

 ====பிராணன் என்பது என்ன?====


மண்ணாகி மரமாகி பல்லுயிர் அரக்கராய் தேவராகி என பிறவிகள் பல பலவாக ஆன்மா புகுந்து மனிதனாக பிறக்கின்றான் என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.ஒவ்வொரு பிறவியிலும் பிறந்து இளைத்து கர்ம பலன்களின் தொகுப்பால் மனித தூலம் கிடைக்கபெறுகின்றது என்பதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?.

ஒவ்வொரு பிறவிகளும் பிறக்கும்போதும் அப்பிறவிகளிலெல்லாம் பிராணன் நசித்து மாயயாகி செத்து போகின்றனவா?.ஒவ்வொரு பிறவிகளிலும் பிராணன் நசித்துத்தான் ஜீவசாலங்கள் எல்லாம் நசித்து போகின்ரன எனில் அடுத்த பிறவியில் அதே ஆன்மாவுக்கு பிராணன் எங்கிருந்து கிடைக்கின்றது?.

தன்னிலிருந்து பிராணன் நசித்து அதோகதியாக போகமல் இருக்கவே சித்தவித்தை எனில் தானான ஆன்மா எதற்க்கு மாயை ஆக நசிக்க துவங்கியது?. அல்லது தானான ஆன்மா தன்னிலே இருந்து சதா நசிக்கும் தன்மை கொண்டது எனில் அப்புறம் தன்னிலே நசிக்காமல் ஊர்த்வகதியாக்கி கொண்ட பின் என்ன பலன்?..அந்த பிரானன் மீண்டும் முன்னம் இருந்தபடி நசித்து அதோகதியாக சலனமுறாது என்பதற்க்கு என்ன விளக்கம்?.

பல பல பிறவிகளை சித்தவேதம் ஒப்பு கொள்கின்றது எனில், முன்னம் பல கோடி சென்மங்களில் செய்த பாவ புண்ணிய சஞ்சித பிரார்த்வ ஆகமிக கர்மங்களின் தொகுப்பு ஜீவசமாதி ஆனவனுக்கு உள்ளிருக்குமா அல்லது அவையும் அற்றுவிடுமா?.

ஜீவசமாதி ஆனவனின் கதி என்ன?.அவனுக்கு மேல் பிறப்பு எதுவும் இல்லையா?அல்லது முன் பிறப்புகள் எல்லாம் இருந்ததில்லையா/..ஜீவசமாதி ஆனவர்களை எழுப்ப யாரோ வருவார்கள் என நம்பபடுகின்றதே, அதை சித்தவேதம் ஒப்புகொள்கின்றதா?. அப்படி ஜீவசமாதி ஆனவர்களை எதற்க்கு எழுப்பவேண்டும்?.எழுப்பினவர்களின் கதி தான் என்ன?..ஜீவசமாதி தான் மோட்ச சூத்திரம் சொல்லும் மோட்சமா?

சற்று யாராவது விளக்கினால் நல்லது..புரிதல் அதிகமாகி ஆனந்தம் உண்டாக பிரயோஜனமாக இருக்கும்.

பிராணன் - அபானன்

 பிராணன் - அபானன்




பிராணன் போக கூடியது, வரகூடியது அல்ல. பிரானன் போச்சு என சொல்லுவது வழக்கம். விளக்கமான தெளிவுக்கு காகபுசுண்டர் பிரான் வசிஷ்ட்டருடன் சம்வதிக்கும் புசுண்டோபாக்யானம் எனும் ஏகாதச ஸ்கந்தமான யோகவாசிஷ்ட்டம் கூறபட்டிருக்கிரது. பார்த்து விளங்கிகொள்ளவும்.


"முதல் உட்செல்வது பிராணன் எனவும் வெளிச் செல்வதை அபாணன் எனவும் கொண்டு” என சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?. இந்த கூற்று தான் தவறு என்கிறேன். பிரானன் முதலிலும் உட்புகாது கடைசியிலும் உட்புகாது. ஒரு குழந்தை பிறந்த உடன் முதலில் உட்புகும் சுவாசத்துக்கு அபானன் என பெயர். குழந்தை முதன்முதலில் வெளிவிடும் சுவாசம் பிரானன். பிராணன் எப்போதும் வெளியே தான் போய் கொண்டிருக்கும்.


பிராணன் வேறு உயிர் வேறு. கருவில் இருக்கும் குழந்தைக்கு உயிர் இருக்கும் ஆனால் பிரானன் இருக்காது.


பிறந்த பின் உருவாகும் நேர் - எதிர் அசைவுகளுக்கு பிராண அபான என பெயர். வெளி போகும் சுவாசம் பிரானன், உட்புகும் சுவாசம் அபானன்.


"பிரானன் அபானன் என்பது காற்று அல்ல."


தன்னில் தானாகி விளங்கும் உயிரை அறியாவிடில் பிராணன் அபானன் என பிரபஞ்ச காற்றை மூக்கு வழி இழுத்துகிட்டு கடைசியில் சாவு தான் வரும். மூன்றாம் நாள் உடல் நாறும், அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.


ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது. அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது. ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம்.


ஜீவனின் வழி செயலாற்ற வேண்டும் எனில் முதலில் நீங்கள் ஜீவனை அறிந்திருக்க வேண்டும். ஜீவனை தெரியாமல், இருப்பதை அறியாமல் இருப்புக்கு அப்பால் உள்ள பிரம்மத்தை விலக்கி பயனென்னவாம்?


பஞ்ச இந்திரியங்கள் வழி கடந்தால் நீங்கள் பயணிக்கும் பாதை இந்திரிய பாதை என உணருங்கள். முதலில் குரு அறிவிக்கும் பாதை என்பது ஜீவ பாதை.


ஆனால் ஜீவன் எது, எங்கே என்பதில் தான் காணாதவருக்கு சந்தேகம். பிரானன், அபானன் ஜீவன் என பிதற்றல் இருக்கும். தெரிந்தவருக்கு குழப்பமே இருக்காது


ஜீவனை கண்டுவிட்டால், அது நாம் சொல்வது அவன் சொல்வது என பேதம் இருக்காது. உங்களில் என்னில் அனைவரிடத்திலும் இருக்கும் ஜீவனை காட்டித்டருபவரே உண்மையான குரு. அப்படி காணவில்லையெனில் இந்த சென்மத்தில் ஜீவன் தரிசனைக்கு வராது. எந்த பிராணாயாமம் பண்ணினாலும் ஜீவன் அறிவுக்கு வராது. குருவின் திருப்பாதமே சரனாகதி.


பிராணாயாமங்கள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகள், மெய்யறிவு என்பது பஞ்ச இந்திரியம் கடந்த அறிவு. சாதாரண உபதேச சாதனைகள் எல்லாம் பஞ்ச இந்திரிய சாதனைகளே. இவை கறிக்கு ஆகாது.


உலக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சாதனைகளும் பிரயோசனமற்றவை என உணர்ந்தீர்களானால் அடுத்த வாசல் திறக்கும். சாலை ஆண்டவர் சொல்லுவது பொன்ற "அகர வாசல்". இல்லையெனில் பிராணாயாம தியான நிஷ்ட்டைகள் தான் பெரிய வித்தைகள் என ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம். சொல்லபடும் எந்த சாதனைகளும் உயிரை காட்டாது. இவை அனைத்தும் மனம் பிராணன் என்பனவற்றிலேயே முடிந்து விடும். ஜீவனை எட்டாது. ஏனெனில் ஜீவனை காட்டும் வித்தையானது உலக நடைமுறையில் பரசியமாக கிடையாது. ஆனால் நிலவி வருகின்றது என்பது நிச்சயம் உண்மை


இந்திரியங்கள் வழி பிரயாணம் செய்தால் மனத்தை அடைவீர்கள், பிராண அபானன் வழி சென்றீர்களானால் சுழுமுனையை அடைவீர்கள்.. ஆனால் ஜீவவாசலை அடைய முடியாது ஜீவனுக்கு போகும் வாசல் ரொம்ப ரொம்ப சின்னது. அதாவது சின்னது என்றால் பொருள் ரொம்ப நுணுக்கமானது என்பதாகும். அறிவுக்கு வருவது ரொம்ப அரிது. குருவே சரணம்.


புரிதல் இல்லாதவர்களுக்கு ஆயிரம் காலம் சொன்னாலும் குரு தொட்டு காட்டிய எல்லை சொல்லி புரிய வைப்பது மெத்தக்கடினம். அது தான் உண்மை. வித்தை என்பது லட்சியம் கொண்டது. லட்சியத்தை காணாது பிரயாணம் செய்வது தான் உலக நடைமுறை. முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு எது என ஒரு ஆசான் நமக்கு உணர்த்த வேண்டும். இலக்கை கண்டு கொண்ட பிறகு தான் பிரயாணம் ஆரம்பமாகும்.


உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள். இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. உண்மையில் குரு பரம்பரையில் முதலில் ஒரு விலக்கை ஏற்றி வைப்பார்கள். அது தான் இலக்கு. அதாவது நமது லட்சியத்தை அன்றே காட்டித்தருவார்கள். அறிவுக்கு அறிவாக கோடி சூரிய பிரகாசத்தை உபதேச சமயத்திலேயே காட்டி விடுவார்கள். அதை பிரயாணம் செய்து அடைவது சீடனின் கடமை.


ஏராளம் ஆன்மீகவாதிகள் ஒரு ஜென்மம் முழுதும் கதை பேசி நம்பி ஏமாந்து கடைசியில் வலிய உணர்ந்தே போயிருக்கின்றனர், சீடர்கள் கூட சிரிக்கும் அளவுக்கு கதி கெட்டு அதோகதியாகி இருக்கின்றனர். சொல்லும் போது பெருசாக சொல்லுவார்கள், அனுபவத்தில் பூச்சியம், தெக்கும் தெரியாது வடக்கும் தெரியாது பெரிய மடாதிபதிகளாக வலம் வருவார்கள். கடைசியில் தலை கூட வெளியே காட்ட முடியாத படிக்கு கேவலமரணம், நாய் கூட இப்படி நாறி சாகாது. அறிவிருந்தும் அதை பிரயோசனபடுத்த தெரியாது நாறி செத்து விடுகிறார்கள். அறியவேண்டிய அறிவை அறியாமல் மிதப்பாக திரிவார்கள். எதாவது கேட்டா நாடி காற்றுண்ணு பதில் வரும்.. யாரிடம் சொல்ல எனத்தான் வந்த வந்த பெரியவர்கள் எல்லாம் சொல்லாமலேயே சென்றிருக்கின்றனர்.


தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே தன்மயமே தான். மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம்.


"நான்" "நான்" என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை.


இரு வேறு கூறு பட்ட மனம் ஒரு கூறை ‘நான்’ எனவும் மற்றைய கூறை எண்ணம்’ எனவும் கற்பித்து எண்ணத்தை காட்டி ‘நான்’ என்பதை வலை பின்னி சிக்க வைத்து தன்னையே தானாக ஏமாற்றிகொண்டிருக்கின்றது. இதில் இறை என்பதும் இரட்சிப்பு என்பதும் கூட மனதின் கற்பனையே தான்.


வெட்டவெளி ‘ஒன்றுமல்லாதது’ என்பது மனதின் கற்பனை.ஆனால் அதை பிடிக்கும் உபாயமே வித்தை.


அறிவு அறிவு என தமிழ் மொழியிலும்,ஞானம் ஞானம் என வடமொழியாலும் சொல்லபடும் உபாயம் தான் சுத்தவித்தை எனும் ஆறாம் அறிவு. அந்த ‘விளக்கு’ முன் இல்லாமல் பிரயாணம் கூட பொய்.


விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.-திருமந்திரம்

சுவாசம் ஓடும் கணக்கு

 சுவாசம் ஓடும் கணக்கு



கடைசி னேரத்தில் னோயாளிக்கு பிராணவாயுவை குழாய் மூலமாக டாக்டர்கள் செலுத்துவதைப் பற்றி சபையில் வினவிய போது, ஆண்டவர்கள் -


சுவாசம் எப்படி ஓடுகிறதென்று உனக்குத் தெரியுமா? தெரியாது - தாவர வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் - ஒரு மாதத்திற்குத் தண்ணீர் ஊற்றினால், எங்ஙு தளிர்க்கும், எப்போது அழியும் என்று உனக்குச் சொல்லத் தெரியுமா? இறைவனின் கஜானாவிலிருந்நு வெளியானாலன்றி அது உனக்கு விளங்ஙாது - னகம் எப்படி வளருகிறது? ரோமம் எப்படி உண்டாகிறது? ரோமத்தின் அடிப்பாகத்தில் கிழங்ஙு இருக்கிறது - அதை ஒட்டிய ஒரு பொருள் கறுப்பு ரோமத்தைத் தள்ளுகிறது - எந்ந அனலான காப்பைக் கொண்டு கருப்பாக ஆகுது? பின் எப்படி வெளுப்பாக மாறுகிறது? இதைப் பற்றிக் கூடத் தெரியாவிட்டால் உன் படிப்பின் தரம் தான் என்ன? இந்ந னினைப்பாவது உனக்கு வருமா? ஒரு வித்திற்குள் னுழைந்நு அதன் அகண்ட விரிப்பை னுணுகி னுணுகிப் பார்க்கும் தகுதி வந்நாலன்றி இது தெரியாது.


மனித உடலில் சுவாசம் ஓடும் கணக்கு ஒன்று இருக்கிறது - அதாவது மாமிசத்தின் உஷ்ணம் ஒரு பங்ஙும், அதைப் போல் இரண்டு பங்ஙு ரத்தத்தின் உஷ்ணமும், அதைப் போல இரண்டு பங்ஙு னரம்பின் உஷ்ணமும் உண்டு - இவை மூன்றும் சரியாக இருந்நால்தான் சுவாசம் ஓடும் - ஏதாவது ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் சரியாக ஓடாது - இப்படியிருக்க இவனாக பிராணவாயுவை ஏற்றினால் என்ன பிரயோசனம் - உள்ளே வாங்ஙும் கருவியின் மூன்று பாகங்ஙளும் இருக்க வேண்டியபடி இருந்நால் தானே வாங்ஙும்? இல்லாவிடில் கருக்கரிவாள் போட்டு அறுக்கும் வாதனையாக இருக்குமே - பட்ட மரத்திற்குத் தண்ணீருற்றி, மேலே தழைக்கிறதா என்று அண்ணாந்நு பார்ப்பவன் செயல்போல்தானிருக்கும் - மேற்கொண்டு அது மொய், மொய்யென்று அழுகுவதால் கொடூரமான வாதையையே உண்டாக்கும்.


இதை அறிந்நால், பூலோகத்தின் எடை எவ்வளவு என்று அறிவது போல இருக்கும் - அனைத்தையும் உண்டாக்கிய காலவரம்பின் எடை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டது போல இருக்கும் - இது யாருக்கு விளங்ஙும்? ஓடுகிற ஓட்டத்தை, (சுவாசத்தை) னிறுத்தி வைப்பவருக்கல்லவா தெரியும்? இதை னாம் வெளியாக்கினாலொழிய உலகத்திற்குத் தெரியாது.


--- சாலை ஆண்டவர்கள்

பிரம்ம வித்தை எனும் உஜூது

 பிரம்ம வித்தை எனும் உஜூது




பாய்மன வீட்டிற் பேய்குடி யிருக்கும்
பேரறி வடிமையங் ஙாகும்
வாயினில் னாயும் னாசியில் வண்டும்
மதுசெவி தனில்விஷப் பாம்பும்
ஈயணைந் நிடும்கண் ணீபுலீசன் வீடா
மிப்படிக் கென்றுனீ தெளிந்து
பாய்வாசி முனைகால் வழிகண்டு செவ்வேட்
பதிபுரு வத்திடை யடிகீழ்

வாசிகா லுச்சி கண்டத்தின் வழியாய்
ஊசியின் தமர்வழி யோடிப்
பேசரு மூளை மண்டலக் குகைமேல்
பெலஞானக் கண்ணொன் றங்கிருந்நு
வாசனை கேள்வி யிருகண்வா யெவைக்கும்
வல்லமை யளிக்குமக் கண்ணே
ஈசன்றன் னிருப்பும் ரவிகோடி வீசும்
இருதய மலர்விரிந் தெழும்பும்“”


(ஸ்ரீ வித்துனாயகம் பிரம்மபிரகாச சாலை ”ஆண்”தவர்கள் அவர்கள்)


ஆண்குரு அவர்களே இதை மெய்வழியென இயம்ப நீயோ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய் மகனே?


பார்! உனை சுற்றி!!

பிரம்மபிரகாசத்தின் கிரணவீச்சு தெளிய மெய்யை விளம்புவர்களை காண்கிறாயா என்ன?


பார்!உனை சுற்றி!!

உன் பாய்மன வீட்டில் பேயலவோ குடியேறி நிற்கிறது என அறியிலயோ?


பார்!உனை சுற்றி!!

உன் வாயினில் நாயல்லாவோ குரைக்கிறது என தெளிவதெப்போது?


பார்!உனை சுற்றி!!

உன் அறிவு பன்றியை பற்றி நிற்கின்றதே அறிவு எதை தின்னும்?


பார்!உனை சுற்றி!!

உஜூது நடைகாண ஈயில்லா கண் தேடே கண்டம் கரயேறாயோ?


பார்!உனை சுற்றி!!

நாதனாதாந்த தொனி கேட்க உன் செவியில் விஷபாம்பு அறியாயோ?


பார்!உனை சுற்றி!!

பார்க்க பார்க்க ஈயெல்லாம் போயே வண்டது தான் மடியுமே!!!

பெரிய வித்தை எது தெரியுமா?

 பெரிய வித்தை எது தெரியுமா?


ஆன்மீக வாழ்கையில் பல படிகள் கடந்து எங்குமே அடையாமல் வீணாக செத்து தொலையும் மக்களை அனேகம் காண்கிறோம். வள்ளலார் சில இடங்களில் சொல்லி வருகிறார், சின்ன ஒளியை கண்டு ஏமாந்து பெரிய ஞனிகளாக வலம் வருபவர்கள் ஏராளமாக காண்கிறோம்.ஆனால் பெரியதாக இருக்கிற வித்தையை நாம் நிச்சயம் கண்டிருக்க வேண்டும். நிச்சயம் நமுக்கு அது பெருந்துணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


வித்தைகளுக்கு எல்லாம் ராஜ வித்தை என்பது தன்னை காப்பதுவாகும். தன்னை காப்பது என்பது தன்னை வெளிக்காட்டாமல் இருப்பது ஆகும். தன்னை வெளிகாட்டாமல் இருப்பது என்பது தன்னடக்கம் ஆகும். தன்னடக்கம் என்பது வீண் கர்வம் கொள்ளாதிருத்தலே ஆகும்.


உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் "வித்தை பெருமை", அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம்.


யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் "தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை.இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை.

முச்சந்தி - சுழுமுனை - கபாலம்

 முச்சந்தி - சுழுமுனை - கபாலம்




இரண்டு கண்களும் மூக்கும் சரியாக செங்குத்து கோணத்தில் சந்திக்கும் இடமே சுழுமுனை எனும் ‘பாலம்’.இந்த பாலத்தினுள் தான் ‘க’ எனும் பரமான்மா உறைவிடம்.அதனால் இது கபாலம் என்றாயிற்று.’முச்சந்தி’ என்பதும் இவ்விடம் தான்.
மனமானது இவ்விடத்தில் நிலை கொள்ள அச்சணமே வலது இடது நாசிகளின் ஊடான இயக்கம் மேல்முகப்படும் என்பது அனுபவ உண்மை..

கொஞ்சம் பக்கத்துல வாசி வாசிக்க வந்திருக்கோம்ண்ணு தோணுது...அப்புறம் பார்ப்போம் வாசிக்கறது எப்படீண்ணு...




விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே."

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.

கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;”
இவ்வாறாக புசுண்டர் பிரானும்

பிராணன் எது அபானன் எது

 பிராணன் எது அபானன் எது




பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம்.கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன் ,வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான்.பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல.


இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்.. உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது.


உள்ளுக்குள் இருக்கும் வெளி தான் சிதாகாசம், அதாவது நுரையீரலின் அடி மட்டம் முதல் அண்ணாக்கின் மேல் மட்டம் வரை வியாபித்திருக்கும் வெற்றிடம். இங்கு தான் பிரான அபான அசைவு இயக்கமுறுகிறது. கருப்பையில் இருக்கும் போது உடலோ உறுப்புகளோ உருவாகி வியா[இக்கும் முன்னமே இருக்கும் சின்ன வெற்றிடமே வளர வளர பெரிய வெற்றிடமாகி நீண்டு தொண்டைகுழி ஊடாக மேலும் கீழும் அசைகின்றது.இந்த அசைவினால் வெளி காற்றானது உள்ளும் புறமும் சென்று வருகின்றது.அதனால் உடலுக்கு தேவையான மூலகங்கள் இரத்தத்துக்கு கிடைக்கவும் , அசுத்த மூலகங்கள் வெளியேறவும் செய்கின்றன. இப்படியான ஆக்ஸிஜன் கார்பண்டை ஆக்ஸைட் இவற்றை தான் பிராண அபானன் என பல முற்றிய ஞானிகள் என சொல்லப்படுவோரும் உண்மை தெரியாமல் மெய் என விளக்கி சென்றிருக்கின்றனர்

குருவிற்கு

 சிஷ்யன்: குருவே அருமையான உங்களுடைய சித்த வேதம் எனும் இந்த மோட்ச சூத்திரத்தை மிகவும் விரும்பி கேட்டேன். ஆயினும் அடியேனுடைய சித்தம் தெளிந்தபாடில்லை.



குரு: அளப்பரிய மிக உயர்ந்த ஞானத்தை கேட்டறிந்த சீடனே மெச்சத்தகுந்தவனே, ஆயினும் உன் சித்தத்தை கலங்கடிக்கும் சந்தேகம் தான் என்ன என சொல்வாயகில் மனமுவந்து உனக்கு சித்தத்தை தெளியவைக்கும் ஞனத்தை அருளுவேன் என்பதை திண்ணமாக அறிவாயாக.


சிஷ்யன்: பரம காருண்யகரான குருவே உமக்கு ஆத்மனமஸ்காரங்கள். ஆச்சார்யபாவ தானாகி தன்மயமாகியிருக்கும் ஜீவனானது ஏன் சலித்து ஜீவவாயுவாகி வியாபித்து உலகமாகும் போது பலவிதமான நாமரூபங்களுடனான பலவிதமான உயிர்கள் மிருகங்கள் பறவைகள் புழுக்கள் அணுக்கள் என பலவேறு ரூப பாவ பேதங்களுடன் உயிர்களாக பரிணமிக்கின்றன.


ஒரே ஜீவன் எவ்வண்ணம் பல ஜீவர்களாக, பல வித ஜீவர்களாக, ஒவ்வொரு ஜீவ குலத்திலும் எண்ணற்ற வித பேதங்களாக உருவாகின்றன?


ஒரே ஜீவ வாயு இப்படி அனேகம் விதமாக பேதலிக்க காரணம் தான் என்ன?


ஜீவர்களின் முகபாவத்தில் தான் எத்தனை பேதம், கை கால் வயிறு முதலான உறுப்புகளில் தான் எத்தனை பேதம், எத்தனை நிறங்களாக பேதம், எத்தனை எத்தனையான அனேகம் எந்தவொரு ஒற்றுமையும் இல்லாமல் இருக்கும் பேதங்கள்?


ஏன் குருவே ஒரே வாயு சலித்து அனேகம் பேதங்களாக பல உருக்கள்?


தயை செய்து ஞான விளக்கங்களை அருளி சேய்து அடியேணின் கவலையை தீர்த்தருளி செய்வீர்களாக.


குரு: ????????

ஸ்தோத்தரித்தல்

 ஸ்தோத்தரித்தல்




தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை


அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா?


மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு?


கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி?

சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா?

”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்..... துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்.....


அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன.... சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன....


நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.


இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறது

இதில் “ஸ்தோத்தரிப்பது” என்பது சன்மார்க்கிகளில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது


இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள்


தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார்


”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...


“திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள்


திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.


அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்


இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்....கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்...


அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும்


அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார்


கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”.....


இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர்


உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை


நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்...


இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை...


ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.


இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.