கர்மம்
"கர்மம்" என்பது எல்லா செயல்களும் தான், நன்மையானாலும் சரி தீமையானாலும் சரி, அவையெல்லாம் கர்மம் எனும் கட்டுக்கள் வரும்.
"அகர்மம்" என்பது கர்மங்களை நிராகரிப்பது, செயலாற்றாமல் இருக்கும் தன்மை.
"விகர்மம்" என்பது ஞானம், எல்லா கர்மங்களையும் பந்தம் அற்று நிசங்கத்துடன் செயலாற்றும் அர்ப்பண செயல்.
கர்மம், மனத்தால் செய்யபடுவது உண்டு,
உடலால் செய்யபடுவதும் உண்டு
மனம் உடல் சேர்ந்து செய்யபடுவதும் உண்டு.
குறைபாடுள்ள மனம் கொண்டவர்கள் செய்யும் கர்மமும் பலனை கொடுப்பனவையே, குறைபாடுள்ள உடலை கொண்டவர்கள் செயலும் பலனை கொடுப்பவையே. ஆனால் குறைபாடின் தன்மைக்கு ஏற்ப குணநலன்களும் குறையாகவே இருக்க வாய்ப்பு அதிகம் அல்லவா?. ஆனால் கர்ம பிறவி என்பதும் கர்ம பூமி என்பதும் ஒன்றோடொன்று பந்தம் கொண்டவை. 80 ஆயிரம் கோடி கர்ம பூமிகள் இருக்கின்றனவாம். அவற்றில் ஒவ்வொன்றிலும் பிறப்பதும் கர்ம புண்ணியம் பாவம் நிமித்தமே தான்.
கர்ம பூமிகள் என சொல்லபடுவது இப்பூவுலகு போல, கர்ம பலன்கலால் பிரதிபலிக்ககூடிய உலகங்கள் தாம். இவ்வுலககமும் கூட ஒரு பிரதிபலிப்பு தான். கர்மங்களுக்கு ஏற்ற பிரதிபலிப்பு.
ஒருவன் ஒரு பாறாங்கல்லை உடைக்கின்றான் என கொள்ளுங்கள். அந்த உடைக்கும் செயலுக்கு பலன் அவன் கர்ம பந்தத்தில் பலனாக பரிணமிக்கும். அதேவேளை உடைக்கபட்ட பாறாங்கல் ஒருபோதும் பழையபடி ஆவதில்லை, உடைத்த பலனை தாங்கி எக்காலமும் நிற்கின்றது. அடுத்து வருபவனுக்கு உடைக்கும் வாய்ப்பு கிடையாமல் போய் விடுகின்றது, ஏனெனில் அது உடைபட்டு விட்டது. அப்படியிருக்க, உடைபட்ட கல்லை தரிசிக்க கர்மம் செய்தவன் மட்டுமே அதை தரிசிக்கிறான். முழு கல்லை தரிசிக்க கர்மம் உடையவன் உடைந்த கல் அருகாமையில் வருவதில்லை.