===== குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் =====
“தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~ இயேசு கிறிஸ்து”
"பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்"..
-- இயேசு கிறிஸ்து
இந்த வாசகம் அருமையான புரிதலை உடையது. இதையே பரம்பரை என சொல்லுவர். நாம் ஆன்மீகத்தில் இருப்போர் அனாதிகாலம் முதற்கே குருபரம்பரை எனும் ஒரு கோட்பாட்டில் நிலை நிற்பவர்கள்.
குரு அமையபெறாதவனுக்கு சிவம் இல்லை என கூட மந்திர தொகுப்புகள் விளம்புகின்றன.
உண்மையில் குரு பரம்பரை என்பது ஒரு புரிதலை காலம் காலமாக படர விட்டு கொண்டிருக்கும் ஒரு தன்மை. சித்தர்கலை பார்த்தவர்கள் சொல்லுவது என்னவெனில் அவர்கள் ஒன்றோடொன்று ஒத்திருப்பர்கள் என்று தான். சொல்லபடுவது என்னவெனில், ஞான பரம்பரையில் வருகின்றவர்கள் ஒரு புரிதலை தன்னகத்துளே அமையபெற்றிருப்பார் என்பதேயாம்.
நமது மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் என உருகொண்டிருக்கும். அது காலம் தேசம் சுற்றுசூழல் என மாறுதலுடனும் வளர்த்தி நிலை பேதம் என ஒவ்வொருவித புரிதல் மனபான்மையுடன் ஒவ்வொருவிதமான நிலைபாட்டுடன் வளர்ந்து இயங்குகின்றது.
அதனாலேயே பக்குவ நிலை பேதம் குணபேதம் சுபாவ பேதம் கருத்து பேதம் கொட்பாடு பேதம் என பற்பலவாக ஒழுக்கமின்றி சமூகத்துடன் ஒருவிதத்தில் இயைந்தும் இசையாமலும் இயக்கமுற்று தேடுதலை வளபடுத்தி கொள்கின்றது.
ஆனால், குரு பரம்பரை என்பது ஒரு தன்மையை சீடனில் ஊன்றுகிறது,ஒரு பார்வையை சீடனில் விதைகின்றது. இதையே குருரூபம் என்பர். அது அனாதிகாலம் முதல் நிஜதோற்ரத்தில் மாறுபாடுகளை அறியாமல் மாற்றத்திற்க்கு வழிகொடுக்காமல் என்றும் அன்றும் இளமையை ஆடையாகவும் புரிதலை ரூபமாகவும் கொண்டு நிற்கின்றது.இதனையே மூர்த்தம் என்பர்.
இத்தகைய குருரூபத்தை தன்னில் உணர்ந்து அதை போற்றி அதனையே தன் ரூபமாக கொண்டு மலர்பவனே உண்மையில் சீடன். அல்லாது நூல் பல கற்றும் பயனில்லை.குருசீட பரம்பரையில் வந்த்வர்களுக்கு மட்டும் இது தோற்றத்துக்கு சுலபமாக மலரும், ஏனையோர் பலகாலம் முயன்றும் அதனை புரிந்து கொள்ள இயலும் என்பதுவும் உண்மை.
இதனாலேயே குருவை குரு ரூபத்தின்ை முதற்கண் வணக்கநிலைக்கு வைத்திருகின்றனர்.
குருரூபம் என சொல்லும் போது சாதாரணமானோர் தூலகுருவின் தூல உடலை மனதில் கருதுவர். ஆனால் அது அங்ஙனம் அன்று. குரு என்பது ஒரு மன ரூபம்... மன கட்டமைப்பு மன சொரூபம். இதனை பெற்றவர் கோமணம் கட்டினவராக இருந்தாலும் கட்டாதவர் ஆக இருந்தாலும் அந்த தன்மை மாறாது. நிச்சலம் குருரூபம்.. மவுனம் கூட... சொல்லாமல் சொல்லி வைக்கபட்ட பொருள், தத்துவம்.. சிராஞ்சீவிதத்துவம் அது.குரு வாழ்க, நற்றாள் துணை.
”சத்யம்-தர்மம்-ப்ரக்ஞானம்” அதாவது ‘வாய்மை-அறம்-அறிவுணர்வு’ என மூன்று. இவையே பாதுகை. ஆன்மீக பயணத்தின் போது சீடனை ரட்சிப்பட்து இதுவே. இதுவே அனாதி காலம் முதல் குரு வழி குரு வழி என சீடர்களுக்கு வந்து கொண்டிருக்கும் மகத்தான பரம்பரை. இவையே குரு சொரூபம் என அறியவும். குருவை ஆன்மீக உச்சாணிக்கு ஏற்றியதும் சீடனை வழி நடத்துவதும் இதுவே.
“இந்த பாதுகையை பயணத்தில் அணி்ந்திரா குருவும், அந்த காலணியை போற்றாத சீடனும் பொய்”
=========🌺👣🌺========
குருவிற்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்
=========🌺👣🌺========
-- நன்றி. 🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺