Monday, October 9, 2023

முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி ====

 ==== முப்பொருள் விளக்கம் எனும் சாகாகல்வி  ====


1) "சாகாத்தலை": யென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி.


2) "வேகாக்கால்": வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. 


3)"போகாப்புனல்": போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். 


இதன் பொருள் விளக்கம் வருமாறு:


  ===== அடி, நடு, முடியென மூன்றுபாகம்... அதில் முதல் பாகம் ருத்திர பாகம், அடுத்து மகேசுவர பாகம், அதையடுத்து சதாசிவ பாகம்


 ===== ருத்திர தத்துவம் அதன் மேல் மகேசுவர தத்துவம் அதன் மேல் சதாசிவ தத்துவம் என மூன்று தத்துவம்


 ===== ருத்திர தத்துவம் என்பது வித்தியா கலை, மகேசுவர தத்துவம் என்பது சாந்திகலை, சதாசிவ தத்துவம் என்பது பிரதிஷ்ட்டா கலை எனப்படும்.


 ====== வித்தியா கலை என்பதுவே வஸ்து (பொருள்-மெய்பொருள்) எனப்படும்...சாந்திகலை என்பதுவே ஆன்மா எனப்படும், பிரதிஷ்ட்டா கலை என்பதுவே ஜீவன் எனப்படும்


===== மெய்பொருளினால் வெளிப்படுவது அருளானந்தம், அதுபோல ஆன்மாவினால் வெளிப்படுவது அன்பு, மற்றும் ஜீவனால் வெளிப்படுவது இரக்கம் 


===== சாகத்தலை என்பது காரண அக்கினியில் அடங்கியுள்ளது... அதுபோல வேகாக்கால் என்பது காரணவாயுவில் அடங்கியுள்ளது... மற்றும் போகாபுனல் என்பது காரணதேகத்தில் அடங்கியுள்ளது. 


====== ஆகையினால் காரண அக்கினி, காரணவாயு, காரன தேகம் இவை மூன்றையும் தக்க குருவின் கிருபையால் அறிந்து அடைந்து கொள்ளுதலே சன்மார்க்கத்தின் முதல் படியாகிய சகா கலை எனப்படும் சாகா கல்வி.

எழுநிலை சூட்சுமம்

 ==== எழுநிலை சூட்சுமம்  =====


"பிராணாயாமம்" முதலான சம்பிரதாயங்களினூடே எவ்வண்ணம் குண்டலினீ சக்தியை உணர்வு நிலைக்கு கொண்டு வருகிறோமோ அவ்வண்ணம் மற்றொரு முறை தான் "பேச்சு சக்தியை" கொண்டு உணர்வு நிலைக்கு மேலேறும் முறையும். இதை ஓதி ஓதி உணர்தல், ஓதாதுணர்தல் என வகைபடுத்துவர் ஞானியர்கள். 


பேச்சின் சூட்சும அறிவு நிலைக்கு பரையறிவு அல்லது வாலறிவு என்பர். 


பர வித்தை என்பதும் இதை கொண்டு இயற்றப்படும் சம்பிரதாயம்தான். இவ்வண்ணம் பிராணனுக்கும் பேச்சுக்க்கும் மையமாக திகழ்வது ஒரு அமானித விந்துநிலை.  அதற்க்கு தான் வித்யா தத்துவம் என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. எழுநிலை சூட்சுமம் அது, அதில் இருந்து கிளம்புவதால், அமிர்த விந்துவுக்கு எழுத்து என பெயர் வைக்கபட்டிருக்கின்றது. 


அட்சர சொரூபமாக வாலறிவாக விளங்குவதால் சித்சொரூப சக்திக்கு வாலை என பெயர்.  அதாவது அமிர்த சொரூபமாக சதா வடிந்து கொண்டிருப்பவள், அமிர்த பாஷிணி. 


அதி சூட்சுமத்துக்கு செல்லாமல் சற்று குறுக்கி கொண்டமைக்கு மன்னிக்கவும்.

சிவோஹம்

 === சிவோஹம் =====


சிவவும் அஹவும் இருக்கிறது என பொருள்.


சிவத்துக்கு அகம் பின்னாடி சேர்ந்து இருக்கிறது தெரியலே...


அகத்துக்கு சிவம் முன்னாடி சேர்ந்திருக்கிறது தெரியலே


வாசி யோகத்தின் ஆசிரியர்களில் முதன்மையானவர் கோரக்கநாதர், இவர் மீன நாதரின் சீடர் என்போரும் உளர். அவரின் போதனையானது ஹம்ச யோஹம் பற்றியதாகும்.


ஒவ்வொரு முறையும் இப்பிரபஞ்சத்தின் ஜீவர்கள் உள் சுவாசிக்கும் போது “ஸ:” எனும் சத்த நலத்துடனும், சுவாசம் வெளிவிடும் போது “ஹ:” எனும் சத்த நலத்துடனும் சுவாசிக்க காண்கிறோம். இந்த சத்தமானது அனைத்து ஜீவர்களுக்கும் பொதுவானதுவாய் அமைந்திருக்கிறது. எந்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும் பொதுவாகவும், எந்த நாட்டில் பிறந்தவர்களுக்கும் இயற்கையாகவும் அமைந்திருக்கும் சுவாச சத்தம் தான் இந்த “ஹ;-ஸ:”.


இந்த சத்தத்தை ஒழுங்கு பட அமைக்கபட்ட சாதனை முறை தான் “ஹம்ஸ:” வித்தை. ’ஹம்’ என சொல்ல பொருளாவது “அஹம்” எனவும் “ஸ:” என சொல்ல “ப்ரம்மம்” எனவும் பொருள் கொள்ளபடுகின்றது.வெளிவிடபடும் சுவாசமான ’அஹம் ஜீவன் ’ இயற்கை உண்மை சிவத்துடன் கலந்து சுழன்று மீண்டும் ’பர பிரம்ம சிவம்’ ஆக உள் நுழைகின்றது. இதை கருத்தில் கொண்டு சதா காலம் சுவாசத்தை பற்றியே சித்தம் நிலை கொள்ள “ஸோஹம்” எனும் நிலையான “பரபிரம்மம் சிவம் அஹம் ஜீவன்” என சித்தம் நிலை ஆகிறது.இது அஜபா காயத்திரி என போற்றபடுகிறது. அங்கனம் 21600 முறை தினம் ஜெபிக்கபடுகின்றது .


“தெள்ளதெளிந்தோர்க்கு ஜீவன் சிவலிங்கம்-திருமூலர்”


‘திரமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்

திருசியசூன் யாதிகளே தியான மாகும்;

சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்

சாதனையே சமாதியெனத் தானே போகும்;

வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்

வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்;

அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்

அஞ்ஞான மவனிடத்தி லணுகா தென்னே.’==


(காகபுசுண்டர் உபநிடதம்)

மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் ===

 ==== மெய்த்தேகத்திற்குள் புகுந்துகொள்வோம் === 


 நாம் தூலத்தில் வசிக்கிறோம், தூலத்தை வளர்க்கிறோம், தூலத்தை மெய்யென கொள்கிறோம்... ஆனால் அவர்கள் தூலத்தை கடந்து சூட்சும தேகங்களில் பிரவேசிக்கிறார்கள், சூட்சும தேகங்களை வளர்த்துகொள்ளுகிறார்கள், அதை மெய்யென்று கொண்டு அதில் குடியேறுகிறார்கள், அட்ட்ட்ட்ட்தில் வாழ்கிறார்கள்.. அந்தந்த தேகங்களின் ஆயுள் முடிவுமட்டும்


அந்த நாதந்த நாட்டிற்க்கு வழி தேட வேண்டாமா? ... அதற்க்குத்தான் இவ்வளவும் சொல்லிகொண்டிருக்கிறேன், அந்த "சப்தமய தரிசனமான” தேகத்தை, எஞ்ஞான்றும் அழியாத மெய்க்குள் புகுந்து கொள்ளவேண்டாமா!?  எனத்தான் அரைகூவல் விடுத்துகொண்டிருக்கிறேன்.


தூலம் ஜோதியாச்சு!! தூலம் ஜோதியாச்சு! என கதறிகொண்டிருக்காமல் ஆகவேண்டிய காரியத்திற்க்கு அழைக்கிறேன்... நாதாந்த நாட்டிற்க்கு நாயகனாகி அரசு பண்ணவேண்டாமா?!..அந்த மெய்தேகத்திற்க்குள் புகுந்துகொள்ளவேண்டாமா?!... எங்கே அந்த வழி?.. யாரிடம் இருக்கிறது என தேடவேண்டாமா...??சிந்திப்பீர்... ஆறானது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதே அதில் ஸ்னானம் பண்ணுபவன் உத்தமன்.


எந்த ஒரு பொருள் மெய்பொருள் என அழைக்கபடுகிறதோ, எந்த ஒரு பொருள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறை பூரணமாய் அனாதிகாலம் முதல் நம்மோடு நம் உயிருக்கு உயிராய் நிலைகொண்டிருந்தும் எவ்வண்ணத்தாலும் நமது சிற்றறிவிற்க்கு புலப்படாமல் இருக்கிறதோ, எது மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்க்கு திறவுகோலாய் இருக்கிறதோ, எதை பற்றி வந்தவந்த வழித்தோன்றல்களும் வந்துபோன மெய்கண்டார்களும் அன்புடன் அழைத்து வாரி வாரி வழங்கினார்களோ  அது ஒன்றே காலம் காலமாய் அற்புத அனவரத தாண்டவமாய் இலங்கிரணங்களை விசிரிம்பித்தபடி அம்பலத்தாடி கொண்டிருக்கிறது...அந்த சேவடிக்கே சரணம்.

குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்

 ===== குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் =====    


“தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~ இயேசு கிறிஸ்து”


"பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்".. 


                                 -- இயேசு கிறிஸ்து


இந்த வாசகம் அருமையான புரிதலை உடையது. இதையே பரம்பரை என சொல்லுவர். நாம் ஆன்மீகத்தில் இருப்போர் அனாதிகாலம் முதற்கே குருபரம்பரை எனும் ஒரு கோட்பாட்டில் நிலை நிற்பவர்கள்.


குரு அமையபெறாதவனுக்கு சிவம் இல்லை என கூட மந்திர தொகுப்புகள் விளம்புகின்றன.


உண்மையில் குரு பரம்பரை என்பது ஒரு புரிதலை காலம் காலமாக படர விட்டு கொண்டிருக்கும் ஒரு தன்மை. சித்தர்கலை பார்த்தவர்கள் சொல்லுவது என்னவெனில் அவர்கள் ஒன்றோடொன்று ஒத்திருப்பர்கள் என்று தான். சொல்லபடுவது என்னவெனில், ஞான பரம்பரையில் வருகின்றவர்கள் ஒரு புரிதலை தன்னகத்துளே அமையபெற்றிருப்பார் என்பதேயாம்.


நமது மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் என உருகொண்டிருக்கும். அது காலம் தேசம் சுற்றுசூழல் என மாறுதலுடனும் வளர்த்தி நிலை பேதம் என ஒவ்வொருவித புரிதல் மனபான்மையுடன் ஒவ்வொருவிதமான நிலைபாட்டுடன் வளர்ந்து இயங்குகின்றது.


அதனாலேயே பக்குவ நிலை பேதம் குணபேதம் சுபாவ பேதம் கருத்து பேதம் கொட்பாடு பேதம் என பற்பலவாக ஒழுக்கமின்றி சமூகத்துடன் ஒருவிதத்தில் இயைந்தும் இசையாமலும் இயக்கமுற்று தேடுதலை வளபடுத்தி கொள்கின்றது.


ஆனால், குரு பரம்பரை என்பது ஒரு தன்மையை சீடனில் ஊன்றுகிறது,ஒரு பார்வையை சீடனில் விதைகின்றது. இதையே குருரூபம் என்பர். அது அனாதிகாலம் முதல் நிஜதோற்ரத்தில் மாறுபாடுகளை அறியாமல் மாற்றத்திற்க்கு வழிகொடுக்காமல் என்றும் அன்றும் இளமையை ஆடையாகவும் புரிதலை ரூபமாகவும் கொண்டு நிற்கின்றது.இதனையே மூர்த்தம் என்பர்.


இத்தகைய குருரூபத்தை தன்னில் உணர்ந்து அதை போற்றி அதனையே தன் ரூபமாக கொண்டு மலர்பவனே உண்மையில் சீடன். அல்லாது நூல் பல கற்றும் பயனில்லை.குருசீட பரம்பரையில் வந்த்வர்களுக்கு மட்டும் இது தோற்றத்துக்கு சுலபமாக மலரும், ஏனையோர் பலகாலம் முயன்றும் அதனை புரிந்து கொள்ள இயலும் என்பதுவும் உண்மை.


இதனாலேயே குருவை குரு ரூபத்தின்ை முதற்கண் வணக்கநிலைக்கு வைத்திருகின்றனர்.

குருரூபம் என சொல்லும் போது சாதாரணமானோர் தூலகுருவின் தூல உடலை மனதில் கருதுவர். ஆனால் அது அங்ஙனம் அன்று. குரு என்பது ஒரு மன ரூபம்... மன கட்டமைப்பு மன சொரூபம். இதனை பெற்றவர் கோமணம் கட்டினவராக இருந்தாலும் கட்டாதவர் ஆக இருந்தாலும் அந்த தன்மை மாறாது. நிச்சலம் குருரூபம்.. மவுனம் கூட... சொல்லாமல் சொல்லி வைக்கபட்ட பொருள், தத்துவம்.. சிராஞ்சீவிதத்துவம் அது.குரு வாழ்க, நற்றாள் துணை.


”சத்யம்-தர்மம்-ப்ரக்ஞானம்” அதாவது ‘வாய்மை-அறம்-அறிவுணர்வு’ என மூன்று. இவையே பாதுகை. ஆன்மீக பயணத்தின் போது சீடனை ரட்சிப்பட்து இதுவே. இதுவே அனாதி காலம் முதல் குரு வழி குரு வழி என சீடர்களுக்கு வந்து கொண்டிருக்கும் மகத்தான பரம்பரை. இவையே குரு சொரூபம் என அறியவும். குருவை ஆன்மீக உச்சாணிக்கு ஏற்றியதும் சீடனை வழி நடத்துவதும் இதுவே. 

“இந்த பாதுகையை பயணத்தில் அணி்ந்திரா குருவும், அந்த காலணியை போற்றாத சீடனும் பொய்”


=====🌺👣🌺=====

யார் இந்த நந்தி??

 ===== யார் இந்த நந்தி?? ==== 


1) பேசும் எழுத்தொடு பேசா எழுத்துறில் ஆசான் பரா நந்தியாம்..


2) எட்டிரண்டு ஒன்றுவது வாலையென்பார் இதுதானே பரிதிமதிசுழுனையென்பார்...


3) அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வருமுப்பதத்துள் எனும் திருமந்திர பாடல்...


4) நந்திகொலு கண்டவனே ஞானியாவான் நடுவணையை கண்டவனே கற்பதேகி


5) விந்து இருந்த தலந்தனிலே குருநந்தி இருந்தான் கொலுவாகி சிந்தை தெளிந்து மகாரம் வைத்தால் அந்த சீமானை காணலாம் ஞானபெண்ணே...


6) எட்டொடே ரெண்டையும் சேர்த்து எண்ணவும் அறியேன் எனும் வள்ளல் பாடல்.


இவற்றை காண இவை அனைத்தும் ஒரு பொரு்ளை தான் குறிக்கின்றன என தெரிகிறது.


நந்திகண்டால் வாதம் காணும் எனும் மற்றோர் பாடலும் நமக்கு நந்தியை தான் முதலில் அறியவேண்டும் என சொல்லிகொண்டிருக்கின்றன. 


யார் இந்த நந்தி??

எந்த வித்தைகள் செய்தாலும்

 எந்த வித்தைகள் செய்தாலும் அது ஞானத்தை கொடுக்கும் என அறுதியிட்டு கூற முடியாது, ஏனெனில்  வித்தைகளினால் மோட்சம் கிடைக்காது. மனமே மகா சாகரத்தில் சிக்கி தவிக்கிறது, அந்த மனதுக்கு தான் மருந்து தேவை. அது ஆழமான புரிதலிலே தான் கலக்கங்கள் மறைந்து சித்தம் பிரகாசிக்கின்றது. அதை விடுத்து கடினமாக இரவும் பகலும் எதையோ செய்வதினால் ஞானம் வராது. ஞானம் செய்வதினால் வருவது அல்ல.


 

பலவிதமான வித்தைகள் உன்னிடம் வந்து செல்லும், அதை நீ செய்யத்தான் வேண்டும், செய்து செய்து ஒரு கனத்தில் உனக்குள் ஒரு புரிதல் சட்டென மலரும், இப்படியல்ல இந்த வித்தையை பண்ணுவது என. அப்பொழுது நீ உருமாற்றம் பெற்றுவிட்டாய். உன்னுடைய குரு நீ எந்த இலக்கினை அடையவேண்டும் என நிர்ணயித்து ஒரு வித்தையினை பயன்பாட்டில் வைத்தாரோ அந்த பயன்பாட்டின் எல்லையினை நீ புரிந்து கொள்வாய். இல்லையெனில் ஆயிரம் வருடம் ஆனாலும் அந்த எல்லையினுள் நீ பிரவேசிக்க மாட்டாய். நீ அந்த வித்தையினை கடந்து அதீதமான புரிதல் கொண்டு விட்டாய் என்பதை உன் ஆழ்நிலை உனக்கு அறிவுறுத்தும், ஆனால் வெளி உலகத்துக்கு நீ சொல்லுவது ஒன்றும் புரியாது. நீ விளக்கினாலும் அவர்களால் அதை புரியமுடியாது..அது தான் ஞானத்தின் தன்மை.


ஞானம் ஏன்பது ஒன்றே ஒன்று தான் என நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எல்லா நிலைகளும் பலவிதமான பரிணாம தோற்ற நிலைகளுக்கு உயர்நிலைகளுக்கு உட்பட்டதே. இப்படி அனேகம் ஞானநிலைகள் கொண்டதே பயனம். அதில் பலதும் வந்து போகும், பயனம் முடிவற்றது, மலர்தல் முடிவற்றது, இதை புரிந்துகொண்டவன் பயணத்துக்கு தயாராகவே எப்போதும் இருப்பான், உருமாற்றத்துக்கு தயாராகவே இருப்பான். எல்லாம் முடிந்தது, நான் கடைசி எல்லையில் வந்து விட்டேன், கடைசி உயர் ஞானத்தின் விளிம்பில் வந்து விட்டேன் எனும் மட்டமான நிலை அவனிடம் இருக்காது. அது தான் உண்மையான ஆழம், மென்மையான ஆழம்.

ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம்

 *ஆவாரவனியின் மேலான அறுஷை கடந்து போவார் பிதர்க்கணம் போகாமல் - சீர்பாதம் சென்று தொழுவார் கமலத்து இல் என்ற சத்தநலம் கண்டு தெளிவார்கல் ஹக்காவார்-என்றுமுள்ள நிச்சயத்தை காண்பார் நினைவு கலந்திருப்பார் நற்செயலிலே மனதை நாட்டுவார் - உர்சிவத்தை நாடியிருப்பார்கள் நானுமல்ல நீயுமென்று தேடியிருப்பார் தினம்*


--- *_பீருமுஹம்மது ஒலியுல்லாஹ்- "ஞானமணிமாலை_*


குழந்தை விளக்கை தொட்டால் சுடுகிறது என அனுபவிக்கிறது.. அது சுட்டு போடுகிற அனுபவம்.. ஆனால் அந்த விளக்கின் தன்மை என்னவென அது அதிகம் படிக்கவில்லையெனில் அதற்க்கு சுடும் என்கிற அனுபவம் மட்டும் தான் இருக்கும்.


வேறொருவருடைய அதே அனுபவம் நமக்கு ஒருபோதும் வராது.. அனுபவம் என்பது தனிதன்மை வாய்ந்தது... மற்றொருவர் அனுபவிப்பதும் உணர்வதும் மற்றொரு தலத்தில்... ஏற்கனவே அனுபவித்தவருடைய தலத்தில் அல்ல


ஒரு முனையில் *“நான்”* என இருக்கும்.. மறு முனையில் *மனம்* என இருக்கும்.. இரண்டும் எப்போதும் இயக்கத்திலும் இருக்கும்.... நான் என்பது மனதோடு இருக்க அதற்க்கு நினைவு என்றும், நான் என்பதில் மனம் சேர்ந்து இருக்க தூக்கம் எனவும் பெயர்.


*அஞ்சும் அடக்கடகென்பர் அறிவிலர் அஞ்சும் அடக்கில் அசேதனாமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே* --- *_திருமூலர்._*


மனதை அடக்கி ஒடுக்கி இருந்தால் என்ன நடக்கும்?.. இருக்கிற கண்டிஷனில மனம் அடங்கி ஒடுங்கி இருக்கும். நல்ல ப்ரஷர் உள்ள ஸ்பிரிங் மாதிரி. ஸ்பிரிங்ஙுக்குள்ள அந்த பழைய ப்ரஷர் அப்படியே வெளிய தள்ளிகிட்டு தான் இருக்கும். ஒரு நிமிடம் அசந்தா பொசுக்குண்ணு பீறிட்டு வெளிகிளம்பும், நாலு மடங்கு வேகத்துல. இது தான் அடக்கி ஒடுக்கி வெச்சிருக்கிற மனதின் நிலையாக இருக்கும்


ஆனா பாருங்க, மனதின் ப்ரஷர் எல்லாம் போயி, எந்த அழுத்தமும் இல்லாமல், தெளிவாக கடந்தகால எதிர்கால நினைப்புகள் ,அதனால் எழும் அழுத்தங்கள் எல்லாம் அற்று, பெரிய சில படிப்புகள் படிச்சு, தன் நிலை உணர்ந்து, சாந்தமாக திரை அற்ற கடல்போல இருக்கிற அந்த ஆகாசம் போல தூய்மையான மனத்தில் சூரியன் எப்படி பிரகாசிக்கும் என தெரியுமல்லவா?


இது ஆயிரம் பொண்ணுங்கல பலாத்காரம் பண்ணினவன், ரெண்டாயிரம் பேரை கொலை செய்தவன், சதா பனத்தின் மேல ஆசைபட்டுகிட்டு திரியரவன், அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடுகிறவன், தனுக்குமட்டும் தான் என இருக்கிறவன் எல்லாம் பிராணாயாமம் பண்ணி அடக்கிஒடுக்கி கிட்டி இருந்தா என்ன விளைய போகுது? ஒண்ணும் விளையாது.. அடங்கி ஒடுங்கி இருக்கும் அவ்வளவுதான்... விடும் போது ஆயிரம்கோடி மடங்கு வெளிய கிளம்பும்


உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்.....


தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என.


உடலுயிரும் பூரணமும் மூன்றுமொன்று உலகத்திற்சிறிதுஜனம் வெவ்வேறென்பர்-உடலுயிரும் பூரணமும் ஏதென்றாக்கால் உத்தமனேபதினாறும் ஒருநான்குமெட்டு-உடலுயிரும் பூரணமும் மயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கி போனார்-உடலுயிரும் பூரனமும் அடிமுடியுமாச்சு உதித்தகலை நிலையறிந்து பதியில் நில்லே*  - *_அகத்தியர் ஞானம்_*

குரு உபதேசம்

 ===குரு உபதேசம் ====


குருபூர்ணிமா வாழ்த்துக்கள்... 


ஒரு குரு வந்து உபதேசித்தும் குரு உபதேசித்த பொருள் என்ன என்று புரிந்திராத சீடர்களையும் பார்த்திருக்கிரேன்... அப்படியானால் குரு உபதேசத்தினால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று பொருள்..... அதாவது "வயல் வளமாக இருந்தாலே பயிர் செழிப்பாய் வளரும்"....


வளமில்லாது கூறுகெட்ட வயலினால் ஆவது என்ன? பயிர் முளை கூட விடாது....


 ஆதலால் குருவை அடையும் முன், வயலை பண்படுத்திக்கொண்டு அவர்கள் முன் செல்லவேண்டும்... அல்லாவிடில் அவர்கள் விதைக்கும் வித்தானது எந்த பயனும் இன்றி போகும்...


ஏனெனில் அவர்கள் விதைக்கும் விதையானது பூமியின் விதையன்று...


 கூறுகெட்ட சீடனுக்கு அது என்னவென்றே தெரிய வாய்ப்பில்லை....


 அவர்கள் விதை தேவ உலகத்து விதை..


 அதன் வண்ணமும் வனப்பும் அறிந்தவரே அறிவார்... 


அது அறியா சீடன் பார்த்த மாத்திரத்திலே கதைக்கு உதவாது என சொல்லி தூக்கி தூக்கிப் போட்டு விடுவதே அதிகம்.

மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்=====

 =====மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்===== 


உலக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சாதனைகளும் பிரயோசனமற்றவை என உணர்ந்தீர்களானால் அடுத்த வாசல் திறக்கும். 


சாலை ஆண்டவர் சொல்லுவது போன்ற "அகர வாசல்".   இல்லையெனில் பிராணாயாம தியான நிஷ்ட்டைகள் தான் பெரிய வித்தைகள் என ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம். 


சொல்லபடும் எந்த சாதனைகளும் உயிரை காட்டாது. இவை அனைத்தும் மனம் பிராணன் என்பனவற்றிலேயே முடிந்து விடும்.  ஜீவனை எட்டாது. ஏனெனில் ஜீவனை காட்டும் வித்தையானது உலக நடைமுறையில் கிடையாது.


உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள். இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. 


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂


வெட்டவெளி "ஒன்றுமல்லாதது" என்பது மனதின் கற்பனை. ஆனால் அதை பிடிக்கும் உபாயமே வித்தை.


விளக்கினை யேற்றி வெளியை அறிமின்

விளக்கினின் முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே .-திருமந்திரம் 


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂