Tuesday, October 10, 2023

= சூட்சும தேகம்

 ==== சூட்சும தேகம் =====


சூட்சுமத்துள் ஆண் எது? பெண் எது? என அறிந்துகொள்ளும் ஆவலே "காமம்" என படுகிறது... ஆனால் அதுமறைந்து வெளிதூலத்தில் ஆண் பெண்ணை அறியவும் பெண் ஆணை அறியவும் முற்படுவது காமம் என ஆயிற்று.


வெளிதூலத்தில் அறியமுற்பட "சிருஷ்டி" பரிணமிக்கிறது.. உட்சூட்சுமத்துள் அறியமுற்பட "முக்தி" பரிணமிக்கிறது


இது ரெண்டும்... வெளியும் உள்ளும் ஒன்றாகவே இருக்கின்றன..பிரித்தறிவது ஞானம்


பிறப்பு என்பது யோனி வழி என்பது சாமான்யம், ஆனால் முதற் பிறப்பு எது வழி என்பது விசேஷம்.


அது தெரியாமல் "பிறப்பறுப்பது" தான் எங்ஙனம் முக்தியும் எங்ஙனம்?


முதற்முதல் மனிதனுக்கு தொப்புள்கொடி இருந்திருக்குமா... அவனா அது அல்லது அவளா.. எது முதல் என அறிந்துகொண்டால் அல்லவா பிறவியின் சூட்சுமம் தெரியவரும்... ஏன் பிறந்தோம்? எங்ஙனம் வாழ்வு உண்டாயிற்று? .... அடுத்து தானே இதில் இருந்து ஆகவேண்டிய விடுதலை எப்படி என சிந்திக்க வேண்டியிருக்கிறது?..அல்லவா.


சூட்சும சரீரம் என்பது பஞ்சபூத சேர்க்கையினால் ஆனது அல்ல.. சப்த மய கோசரம்.. அதை அடைய மனம் இருக்கிற ட்ராக் விட்டு அடுத்த மேன்நிலை ட்ராக்குக்கு வரவேண்டும்....


பாருங்க..நம்ம வீட்டுக்குள்ளேயே, நம்ம ரூமிலேயே, நம்ம பக்கத்திலேயே நம்ம கூடவே இருக்கிற மனைவிக்கு யாராச்சும் போன் பண்னி கூப்பிட்டு பேசுவாங்களா?! ..இல்லையே!. அது போல அதே மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கிற சமயம், அவங்க நம்ம கூடவே பக்கதுல இருக்கிறப்ப பேசின மாதிரி பேசுவோமா?! ... அப்படி பேசினா அவங்களுக்கு கேட்க்குமா... இல்லையே... ஏதாவது ஒரு மொபைல் போன் வெச்சு தானே பேசுவோம்,அல்லவா?. அது போலத்தான் கதை.


மற்றொரிடத்தில் பைபிளில் மற்றொரு வசனம் வரும்.. "அதிக சத்தமாக இவர்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் விண்ணப்பங்கள் பரமண்டலத்தில் கேட்கும் என இவர்கள் நம்புகிறார்கள்" என.


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

சீவகாருண்ணிய பரசியம்

 ====சீவகாருண்ணிய பரசியம் ==== 


என்ன தான் இந்த சீவகாருண்ணியம்?.. பசி்ப்பவர்கள் பசியாற்றுவதே சீவகாருண்ணியம், அப்படித்தானே?.. ஏம்பா யார் தான் பசி இல்லாம இருக்காங்க இந்த உலகத்துல!! எல்லோருக்கும் தான் பசி வருதே, அப்ப எல்லோருக்கும் பொங்கி அண்டா குண்டா நிறைய பரிமாறுவது தான் சீவகாருண்ணியமோ?? இப்போ பாருங்க சன்மார்க்கி சன்மார்க்கிண்ணு சொல்லிகிட்டு கும்பல் கும்பலா வெள்ளை வெள்ளையா துணி கட்டிகிட்டு சீவகாருண்ணியத்துக்கு என சொல்ல்கிட்டு வசூல் வேட்டை பண்ணி எங்காவது கோயில் குளம் சத்திரம் என பார்த்து சமைச்சு போட்டு தட்டுவாங்களே, அது தானா சீவகாருண்ணியம்?. பாருங்க பசியும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கொடுத்தது தானே, எல்லா சீவர்களுக்கும் ஆண்டவர் பசிய கொடுத்திருக்கானே.. அந்த ஆண்டவன் எவ்வளவு கொடுமைகாரனா இருப்பான் பாருங்க... பிறக்கிற போதே பசியையும் கொடுத்து அழுது துடிக்க வாயையும் கொடுத்திருக்கானே.. அப்படி வாய் நிறைய பசிக்கிற எல்லோருக்கும் உணவு கொடுத்தா அதுதான் சீவகாருண்ணியமா... இருக்கிறதெல்லாம் பசிக்கிறவனுக்கு கொடுத்துகிட்டே இருக்கிறது தான் சீவகாருண்ணியமா? என்னமோ சொல்றாங்க.. எனக்கு ஒண்ணும் புரியவே மாட்டேங்குதே..


=== திரு. ரியான் ஐயா அவர்கள்

கால் என்றால் வாசியா?==

 ==கால் என்றால் வாசியா?====


சித்தர் பாடல்கள் மற்றும் இசுலாமிய பாடல்களில் கூட ‘கால்’ என கருத்து சொல்லபட்டிருக்கிறது. பல அறிஞர்களும் கால் என்பது வாசியை குறிப்பிடுகிறது என விளக்கம் சொல்லுகின்றனர். ஆனால் வாசியை கால் என அழைக்க காரணம் எதாவது இருக்கின்றதா என ஆராய்ந்தால் விளக்கமான ஒரு கருத்தும் காணகிடைக்கவில்லை.


கால் என சொல்லுவதின் பின்னால் தலை கூட இருக்குமோ என ஆராய தோன்றுகிறதல்லவா?.கால் இருக்கிறது எனில் தலையும் இருக்கவேண்டும் அல்லவா?..அல்லது கால் என்பது கால் எனும் அளவு முறையாக இருக்குமோ என்றும் ஆராய்ந்ததுண்டு. கால், அரை, முக்கால் எனும் அளத்தல் முறையோ?.கால் என்பது வாசி எனில் தலை எதுவென புரியவில்லை.


அறிந்தவர் விளக்க வேண்டுகிறேன்.


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

தூல உடலுக்கு காரணங்கள் ரெண்டு, அதனால் மலர்ந்தது தூலம் ஒன்று.

 தூல உடலுக்கு காரணங்கள் ரெண்டு, அதனால் மலர்ந்தது தூலம் ஒன்று.


சூட்சும உடலுக்கு காரணங்கள் ரெண்டு மலர்ந்தது சூட்சும உடலம் ஒன்று,


காரண உடலுக்கு காரணங்கள் ரெண்டு,மலர்ந்த காரண உடலம் ஒன்று.


இவை சேர்ந்த காயத்துக்கு காரணம் ரெண்டு காரியம் ஒன்று. ஓம் நம:


-- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

நுரையீரல்ல

 நுரையீரல்ல காற்றும் சுவாசம்வும் வேலை செய்யுது... ஆனா கண்டத்துக்கு கீழ ரெண்டு ஓட்டை போட்டிருந்தாலும் நுரையீரல் வேலை செய்யும்... அதை இழுத்து மூக்கு வரை கடவுள் செஞ்சு வெச்சிருக்கார்ண்ணா எதாவது இல்லாமலா இருக்கும்?

மனிதன் எதற்காகவோ பயப்படுகிறான். குழப்பம் இல்லாத வாழ்வை விரும்புகிறான்

 மனிதன் எதற்காகவோ பயப்படுகிறான். குழப்பம் இல்லாத வாழ்வை விரும்புகிறான். இதனால் சிந்திக்கவே விரும்புவது இல்லை. அதனால் வாழ்க்கைப் பயணத்தில் ஏதோ ஒரு கருத்து உள்ளே நுழைகிறது. நுழைந்தவற்றை அப்படியே பாதுகாத்து கிளிப்பிள்ளை பாடம் போல ஒப்பித்துச் சாவதுவரை பதிவேட்டில் உள்ளதை அழியாமல் பாதுகாக்கும் வேலையைச் செய்த்துவிட்டுச் சாகிறான்.


இதனால் உண்மைக்கு உயிர் கொடுக்க முடியாது. உனக்குள் வாழும் உண்மை உயிர் பெற வேண்டும்.


பெரிய ஞானிகள் தத்துவங்களைப் படைத்துவிட்டு தமது பெயரை எழுதாமல் போனதன் ரகசியம் இதுதான். தமது தத்துவம் பலரைக் கொத்தடிமை ஆக்கிவிட்டால் அந்தப்பாவம் தம்மைச் சேரக் கூடாது எனக் கருணையுடன் மறைத்தார்கள்.

கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா? ====

 ==== கணபதி சிவனாருக்கு தந்தையா மகனா? ==== 


”ஐந்துகரத்தனை யானை முகத்தனை 

இந்தினிளம்பிறை போலுமெயிற்றினை

நந்தி மகன்தனை ஞானகொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”


வினாயகர் “நந்தி மகன்” ஆவது எங்ஙனம் என நாம் சற்று கவனித்து விடைகொளுதல் நலம் அல்லவா?. உங்கள் அருமையான விடைகளுக்கு காத்திருக்கிறேன்....


நந்தி என்பது சிவனாரின் வாகனமாக சொல்லபடுகின்றது .. அப்படியிருக்க நந்தியும் சிவனாரும் ஒன்று என்பது எவ்வாறு?


திருமூலரும் நந்தி என்பது சிவனார் நாமம் என சொல்லியிருக்கின்றார்?... ஏன் இந்த நந்தி எனும் நாமம்?.. எதாவது வித்யாசம் உள்ளதா என்ன?..


யோகசரியை படி எல்லா ஆதாரங்களிலும் ஒவ்வொரு ஆதாரமூர்த்திகள் தத்தம் துணைவியருடன் இருப்பதாக சொல்லபடுகின்றது, ஆனால் மூலாதாரத்தில் பராசக்தியும் கணபதியும் சொல்லபடுகின்றது... ஏன் சிவனார் எங்க போனார்?


திருமந்திரத்தில் கூட ‘தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே” எனும் ஒரு பாடல் உண்டு... அதுபோல மூவர்க்கும் மூத்தவன் ஞானகணபதி எனவும் வழக்கம் உள்ளது... இதுவெலாம் ஏன்? கணபதி எங்ஙனம் மூவருக்கும் மூத்தவன் ஆக சொல்லபடுகிறார்?


பிரணவ சொரூபராகவும் கணபதியை காட்டுகின்றனர். அப்போது சிவன் கணபதிக்கு பிள்ளையா?.. மூலாதார பராசக்தி அந்த பிரணவ நாதரின் துணைவியரா என சந்தேகம் எழும் அல்லவா?


மூலாதாரத்தில் ஆதார வழக்கப்படி பராசக்திக்கு கணவர் தானே இருந்திருக்கவேண்டும்... குண்டலினிதாய்+பிரணவநாதர். 


மட்டுமல்ல மூலாதாரத்தில் கணபதியின் இடபக்க மடியில் தான் பராசக்தி அமர்ந்திருக்கிறார் என்கிறார்கள். 


கணபதியின் மடியில் பராசக்தி அமர்வது எங்ங்னம் தகும்?


பிரணவம் தானே ஆதிமூல பரம்பொருள்.. அது கணபதி தானே? அப்போது சிவன் கணபதிக்கு மகன் என சொல்லகூடாதோ என்ன?


எல்லா கணங்களுக்கும் அதிபதியானவர் கணபதி... அவர் பிரணவ சொரூபர்... வேதமூர்த்தி... அவர் இருப்பிடம் மூலாதாரம் .. அவர் துணைவியாக இருப்பது வல்லபை எனும் பராசக்தி... இப்படி யிருக்க சிவனாருக்கு மகன் என கணபதியை ஏன் சொல்லுகின்றனர்... கணபதியல்லவா இவர்களுக்கு முன்னே இருக்கின்றவர்?


 சிவனார் அல்லவா கணபதிக்கு மகன் என சொல்லபட வேண்டும்?..சைவர்கள் குழப்பிவிட்டனரோ...?


தந்தைக்கு முன்னே மகன் உதித்தானே எனும் திருமந்திர பாடலும் இதற்க்கு வலு சேர்க்கிறது அல்லவா?


அப்ப சிவனுக்கும் முன்னரே இருக்கிறவர் கணபதி என்பது திருமந்திர கருத்து என புரிகிறதல்லவா?


ஆனா பாருங்க...சிவனார் போலவே இவருக்கும் "இளம்பிறை" கொண்டிருப்பார்....வேறு யாருக்கும் இது கிடையாது..பராசக்தி சிவன் கணபதி மூவருக்கு தான் உள்ளது


என்னிடம் ஒரு பழைய ஏடு இருக்கிறது... அதின் பிரகாரம் யானைமுகத்துடன் இருக்கும் தலைவருக்கு சிவன் என பெயர். 


கங்கைசூடி பிறை அணிந்து நீறுபூசி எலும்பும் கபாலமுமாக இருப்பவருக்கு மகேஸ்வரன் என பெயர். சிவன் என்பது கணபதியை குறிக்கும்....அதனால் தான் பராசக்தி மனைவியாக உள்ளாள்....இந்த கனபதியே “ஆதி குரு” என்கிறது நூல்... இவர் பராசக்தியுடன் போகித்து மும்மூர்த்திகலை ஈன்றாராம்.


ஆதிமூல கணபதியான இவர் தாய் தகப்பன் இல்லாமல் தனியனாக இருந்தவராம்...இவர் தான் தன்னுக்குள் இருந்து பிரணவ வடிவிலான பராசக்தியை வெளிப்படுத்தியவராம்..அதனால் இவர் பிரணவமூர்த்தமாகின்றார்.


ஓம் என்பது இவரின் பெண்பாகம், ஆண் பாகம் மற்றொரு மந்திரம்.. 


இவரின் லிங்கம்”முப்பத்து மூணு மாறு” நீளமாம்...இதை தான் லிங்கபுராணமும் “பெரிய சைஸ் லிங்கமாக” சொல்கின்றது.. இந்த லிங்கத்தைத்தான் சிவனார் சதா தியானம் செய்கிறாராம்...அல்லாது சிவனார் தானே தன்னுடைய லிங்கத்தை அல்ல, என்பது சாரம்...மும்மூர்த்திகலையும் சிருஷ்ட்டித்துவிட்டு கணபத்சிவமான இவர் எல்லா தந்திரங்கலையும் மந்திரங்கலையும் உபதேசித்துவிட்டு தன்னுடைய உடம்பை அவிழ்த்தாராம்....மீதமானது நீறு...அதை சிவனார் என நாம் சொல்லும் மகேஸ்வரனார் உடம்பெலாம் பூசிகிட்டாராம்...


சாதாரனமாக நாம் சொல்வது போன்று சிவன் தான் எல்லோருக்கும் முதல் பிறந்தவன் என கொண்டால், சிவனாருக்கு பூச நீறு எங்கிருந்து கிடைத்தது என ஒரு கேள்வி வரும்...ஏண்ணா சிவனார் பூசியிருப்பது சுடுகாட்டு சாம்பல்... அப்ப சிவனாருக்கு முன்ன சுடுகாட்டுல போன ஒருவர் இருந்திருக்கவேண்டும் எனும் பொருள் நாம் எல்லோரும் மறந்து போனோம்!!


சிவன் தானே கங்காலன் என நாம் சொல்லிகிடுரோம்..வேறு யாராவது இருக்காங்கலா என்ன? 


அது சுடு காட்டில் இருந்து கிடைக்கும் நீறு...”திரு” நீறு... திரு என்பது கணபதி தான்....அதுக்கு ”ஸ்ரீ” என்ற பெயரும் உண்டு. 


யாருடைய மண்டை ஓடு?..சிவனாருக்கு அவருக்கு முன்னால மண்டை ஓடு எங்கிருந்து கெடைச்சுது?


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

==== நற்றாள் யார்? ====

 ==== நற்றாள் யார்? ====


வேத ஏட்டிலுள்ளதை படிப்பதன் பயன் இறைவனை காண்பதுதான்… னம்மிலுள்ள தெய்வீகமலையை, ஸ்வயம்பிரகாச நித்தியானந்தமணியை அறிவதே படிப்பதன் பயன். னாம் முதல் முதலாக படிக்கதுவங்கும்போது, உபாத்தியாயர் மூன்று ஏடுகளில் எழுத்துக்களை எழுதி, மூன்று வாரெடைகளால் அவ்வேடுகளை கோர்த்து, ஒரு முடி போடுகிறார். அதை "பிரம்மமுடி" என்றும் சொல்வதுண்டு.


முதலில் உயிர் எழுத்து என்று சொல்ல பெறுகின்ற "அ" "ஆ" முதலியவைகளை சொல்லிகொடுக்காமல்," அறியோம் நற்றாள்கள், குரு வாழ்க, குருவே துணை, ஹரினமோந்துசிந்தம்" என்று சொல்லி கொடுப்பதினாலேயே "னாம் எதனையோ ஒன்றை அறிவதற்க்காகவே படிக்கிறோம், அழிவில்லாத முதலை கைப்பற்றி அதை நம்முடையதாக ஆக்கிகொள்ளவேதான் படிக்கிறோம்" என்று தெரிகிறது.


------- மெய்வழி சாலை ஆண்டவர்கள்


அவ்விட்டு வைத்தங்கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டு பார்க்க லிங்கமதாய் நிற்க்கும் மவ்விட்டு மேலே வளியுற கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்கொழுந்தாமே... - திருமூலர் பாடல்


இது, இங்கு “தொம்’மிட்டு நிற்பதே திருவடியாகிய நற்றாள்... அவ்வண்ணம் தொம்மிட்டு நிற்க வைப்பது “அரி” எனும் எழுத்து..இந்த “வாலையே’ ‘இவ்விட்டு” பார்த்தல் என குருமுறை. இப்படி “இவ்விடுதலையே “வால் போடுதல் அல்லது வாலறிவு என்பது சான்றோர் அறிவு....


கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்


-- நன்றி. திரு. ரியான் ஐயா அவர்கள்


அறியோம் நற்றாள்கள் ஆதியே துணை

ஆதியை அறிய குருவே துணை

==== யோகா தின வாழ்த்துக்கள் ====

 ==== யோகா தின வாழ்த்துக்கள் ==== 


பிரணாயாமம் பண்ணுரீங்களா..நல்லாவே பண்ணுங்க..


வாசி யோகம் பண்ணுரீங்களா..அதுவும் நல்லாவே பண்ணுங்க..


கிரியா பண்ணுரீங்களா..நல்லாவே செய்து தொலையுங்க....


அனபனாசதி பண்ணுரீங்களா..சாவதானம்மாகவே பண்ணுங்க...


ஹட யோகமா..அதுவும் அருமையா பண்ணுங்க...


விபாசனாவா..அதுவும் அருமையா பண்ணுங்க..


ஆனா மூச்சு பயிற்சி மட்டும் பண்ணவே பண்ணாதீக...செத்து போவிய...


வாசிண்ணா அது மூச்சு பயிற்சிண்ணு மக்கள் நினைக்கிறதை என்று விட்டுவிட்டு, வாசி என்றால் மூச்சுக்கு அப்பால் உள்ள நிஜம் என்பதை அறிந்தால் மட்டுமே முன்னேற்றம் உண்டாகும்.வலது நாசி இடது நாசிண்ணு சொல்லி மக்களை மாடு மூச்சு வாங்குறதை போல போட்டு மாரடிச்சு வீணாக பொழுது போக்கி என்ன ஆக பொவுதுண்ணு உணராமலேயே இருக்கிறோம்.


பிராணன் எது அபானன் எதுண்ணு கூட சரியாக தெரியாமல் வாசி யோக வகுப்புகள் நடத்துறவங்கள பார்க்கிறோம். கேட்டால் உள்ள இருக்கிறது பிராணன், வெளிய போறது அபானன்ண்ணு விளக்கம் சொல்லுவான். 


பிராணனும் வெளிய போகல அபானனும் வெளிய போகலங்கிறத எப்ப புரிஞ்சுக்க போறானோ தெரியல.


இருப்பது தானான தன்னிலை அன்றி வேறில்லை, தானான தன்னிலையின் அசைவே பிரான-அபானன் என சொல்லபடுகிறது. அசைவை பல ஞானிகள் உசும்புதல் எனவும் சொல்லியிருப்பர். பல ஞானிகள் ‘சித்த விருத்தி’ என சொல்லியிருப்பர்.. உள்ளுக்குள்ளாக சிதாகாசத்தில் ஏற்படும் இந்த அசைவுதலே பிராண -அபானனாகவும், அசையும் பொருளே மனமாகவும் இரு கூறுபட்டு பிரபஞ்சமாக அனுபவ மாலையாகின்றது.


--- ❤️ திரு. ரியான் ஐயா அவர்கள் ❤️

==== குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் =====

 ===== குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் =====    


“தேறினவன் எவனும் தன் குருவை போலிருப்பான் ~ இயேசு கிறிஸ்து”


"பிதாதவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைத்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்".. 


                                 -- இயேசு கிறிஸ்து


இந்த வாசகம் அருமையான புரிதலை உடையது. இதையே பரம்பரை என சொல்லுவர். நாம் ஆன்மீகத்தில் இருப்போர் அனாதிகாலம் முதற்கே குருபரம்பரை எனும் ஒரு கோட்பாட்டில் நிலை நிற்பவர்கள்.


குரு அமையபெறாதவனுக்கு சிவம் இல்லை என கூட மந்திர தொகுப்புகள் விளம்புகின்றன.


உண்மையில் குரு பரம்பரை என்பது ஒரு புரிதலை காலம் காலமாக படர விட்டு கொண்டிருக்கும் ஒரு தன்மை. சித்தர்கலை பார்த்தவர்கள் சொல்லுவது என்னவெனில் அவர்கள் ஒன்றோடொன்று ஒத்திருப்பர்கள் என்று தான். சொல்லபடுவது என்னவெனில், ஞான பரம்பரையில் வருகின்றவர்கள் ஒரு புரிதலை தன்னகத்துளே அமையபெற்றிருப்பார் என்பதேயாம்.


நமது மனம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம் என உருகொண்டிருக்கும். அது காலம் தேசம் சுற்றுசூழல் என மாறுதலுடனும் வளர்த்தி நிலை பேதம் என ஒவ்வொருவித புரிதல் மனபான்மையுடன் ஒவ்வொருவிதமான நிலைபாட்டுடன் வளர்ந்து இயங்குகின்றது.


அதனாலேயே பக்குவ நிலை பேதம் குணபேதம் சுபாவ பேதம் கருத்து பேதம் கொட்பாடு பேதம் என பற்பலவாக ஒழுக்கமின்றி சமூகத்துடன் ஒருவிதத்தில் இயைந்தும் இசையாமலும் இயக்கமுற்று தேடுதலை வளபடுத்தி கொள்கின்றது.


ஆனால், குரு பரம்பரை என்பது ஒரு தன்மையை சீடனில் ஊன்றுகிறது,ஒரு பார்வையை சீடனில் விதைகின்றது. இதையே குருரூபம் என்பர். அது அனாதிகாலம் முதல் நிஜதோற்ரத்தில் மாறுபாடுகளை அறியாமல் மாற்றத்திற்க்கு வழிகொடுக்காமல் என்றும் அன்றும் இளமையை ஆடையாகவும் புரிதலை ரூபமாகவும் கொண்டு நிற்கின்றது.இதனையே மூர்த்தம் என்பர்.


இத்தகைய குருரூபத்தை தன்னில் உணர்ந்து அதை போற்றி அதனையே தன் ரூபமாக கொண்டு மலர்பவனே உண்மையில் சீடன். அல்லாது நூல் பல கற்றும் பயனில்லை.குருசீட பரம்பரையில் வந்த்வர்களுக்கு மட்டும் இது தோற்றத்துக்கு சுலபமாக மலரும், ஏனையோர் பலகாலம் முயன்றும் அதனை புரிந்து கொள்ள இயலும் என்பதுவும் உண்மை.


இதனாலேயே குருவை குரு ரூபத்தின்ை முதற்கண் வணக்கநிலைக்கு வைத்திருகின்றனர்.

குருரூபம் என சொல்லும் போது சாதாரணமானோர் தூலகுருவின் தூல உடலை மனதில் கருதுவர். ஆனால் அது அங்ஙனம் அன்று. குரு என்பது ஒரு மன ரூபம்... மன கட்டமைப்பு மன சொரூபம். இதனை பெற்றவர் கோமணம் கட்டினவராக இருந்தாலும் கட்டாதவர் ஆக இருந்தாலும் அந்த தன்மை மாறாது. நிச்சலம் குருரூபம்.. மவுனம் கூட... சொல்லாமல் சொல்லி வைக்கபட்ட பொருள், தத்துவம்.. சிராஞ்சீவிதத்துவம் அது.குரு வாழ்க, நற்றாள் துணை.


”சத்யம்-தர்மம்-ப்ரக்ஞானம்” அதாவது ‘வாய்மை-அறம்-அறிவுணர்வு’ என மூன்று. இவையே பாதுகை. ஆன்மீக பயணத்தின் போது சீடனை ரட்சிப்பட்து இதுவே. இதுவே அனாதி காலம் முதல் குரு வழி குரு வழி என சீடர்களுக்கு வந்து கொண்டிருக்கும் மகத்தான பரம்பரை. இவையே குரு சொரூபம் என அறியவும். குருவை ஆன்மீக உச்சாணிக்கு ஏற்றியதும் சீடனை வழி நடத்துவதும் இதுவே. 

“இந்த பாதுகையை பயணத்தில் அணி்ந்திரா குருவும், அந்த காலணியை போற்றாத சீடனும் பொய்”


=========🌺👣🌺========


குருவிற்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் 


=========🌺👣🌺========


-- நன்றி. 🌺 திரு. ரியான் ஐயா அவர்கள் 🌺