Sunday, December 4, 2022

மணிஷாபஞ்சகம்

மணிஷாபஞ்சகம் நாத்திகம் இல்லாததை இருக்கிறது போல நினைத்து இல்லை என மறுப்பது;  ஆஸ்த்திகம் இருக்கிறதை இல்லாதது என நினைத்துஇல்லை என ஏற்றுகொள்ளுவது.  இருக்கிறது இல்லாமல் ஆகிடபோவதுமில்லை, இல்லாதது இருப்பதுவுமில்லை; பிரபஞ்சம் இருக்கிறது.பிரபஞ்சமில்லையேல் நாத்திகத்துக்கும் இடமில்லை ஆத்திகத்துக்கும் இடமில்லை;  இருக்கிறதை மறுப்பவன் அஞ்ஞானியாகிறான், இருப்பதை மறுக்காமல் உள்ளிருப்பை அடைந்தவன் ஞானியாகிறான்.அர்த்தமற்றவன் வார்த்தைக்கே ஆயிரம் அர்த்தம் புனைபவன் அஞ்ஞானி.அர்த்தமுள்ள மவுனத்தை அறுத்து புசிப்பவன் ஞானி.

எலும்பும் கபாலமும்

Wednesday, May 2, 2018 எலும்பும் கபாலமும் எலும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த வலம்பன் மணிமுடி வானவர் ஆதி எலும்பும் கபாலமும் ஏந்திலன் ஆகில் எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே.=திருமந்திரம் Hseija Ed Rian சனாதன சாஸ்திரங்கள் ஒன்றும் இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாது, ஏனெனில் சிவன் பிறப்பு இறப்பு அற்றவன் என சொல்கிறோம். ஆனால் சிவனுக்கு முன்னே இருந்த ஏதோ எலும்பையும் கபாலத்தையும் அல்லவா அவர் சதா ஏந்தியிருக்கமுடியும் அல்லவா?.அது எந்த விசேஷ எலும்பும் கபாலவும் , யாருடையது Hseija Ed Rian அது அவருடைய தகப்பனாரோடது. Hseija Ed Rian நெற்றியில பூசியிருக்கிற நீறும் தகப்பனாரோடது தான்

மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு

மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு “A monk sits down in the wilderness, at the foot of a tree, or in an empty hut. He crosses his legs, straightens his body, and establishes mindfulPARIMUKHA” ~Sri Buddha). மூலத்துவாரத்தை முக்காரமிட்டிரு மேலைதுவாரத்தின் மேல்மனம் வைத்திரு வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு காலத்தை வெல்லும் கருத்திதுவாமே

சிவம் என தனியாக எதுவுமில்லை

சிவம் என தனியாக எதுவுமில்லை சிவம் என தனியாக எதுவுமில்லை... தனியாக வெளிப்பட்டிருக்க ஜீவன் எனவும்.. மொத்தமாக தோற்றம் பெற்றிருக்கும் போது ஜீவசிவம் எனவும் பெயர். நமக்கு ஜீவன் என தனியாக இருப்பது போல தோன்றினாலும் அது தனியான ஜீவன் இல்லை... அது ஒரு சங்கிலி தொடரின் அமைப்பு.. நமக்கு நம் தந்தையிடம் இருந்து வருகிறது.. அவருக்கு அவரின் தந்தையிடம் இருந்து... இப்படி ஒரு பின் நோக்கிய அதுவும் முன்னோக்கிய சங்கிலி தொடர்... இந்த தொடர் முழுமைக்கும் சேர்த்து ஜீவசிவம் என பெயர். அது நம்முடன் மட்டுமல்ல, இவ்வுலகத்து ஜீவஜலங்கள் அனைத்திற்க்குள்ளுக்குள்ளாக பிணைந்திருக்கும் தொடர்... அதை உள்ளூர உனரும் போது ஜீவசிவ தன்மை வெளிப்படும். இந்த புரிதல் என்பது அசாத்தியமான சாத்திய புரிதல்... தனிமையில் இருந்து முழுமையை உணர்தல் சாத்தியம்.... முழுமை முற்றுபெற்று விளங்கும் தன்மை அது. அனைத்து ஜீவன்களும் ஒரு தொடரே என தெளிய சிவமாம் தன்மை விளங்கும் என்பது ஆன்றோர் மதம். சிவம் என தனியாக பின்னமாக நினைத்து வேறுபாடு உணர்வது அறிவின் குறைபாடு... இருப்பது அகண்ட சிவம் ஒன்றே தான்... முழுபூசணிக்காய் சோற்றில் மறைந்துள்ளது. இயற்கை உண்மை என்பது ஜீவனுக்கு இடுபெயர்... அதுவே அருட்பெரும்ஜோதியாம் தனிப்பெரும் கடவுள்... அதுவே உடலான உடலெல்லாம் நிறைந்து அருட்பிரகாசமாக விரிந்துள்ளது.. அதை தனிமையில் உணர மலர்தல் சாத்தியம்.. உணராவிடில் ஜீவன் என அறிவு மழுங்கி தன் நினைப்பே வெளிப்பட்டு தான் வேறு எனும் வேற்றுமை உருவாகிறது.... அந்த வேற்றுமை மறைய ஒருமை துளிர்க்கிறது. அதனால் நம்முள் இயங்கும் ஜீவனை பார்த்து அறிவோமாக.. அதுவே பர உடலங்களிலும் இயங்குகிறது என்பதுவே ஒருமைக்கு மூலாதாரம். சிவன் என கங்கணம் பூண்டு திருநீறு பூசி கபால மாலை அணிந்து அங்க எங்கேயோ கைலாசத்துல பார்வதி தேவியை பக்கத்துல வெச்சுகிட்டு பூதகனங்கள் நடனமாட யாரும் கிடையாது... எந்த ஒரு மனிதன் ஜீவசிவத்தை உணர்ந்து தன்மயமாகிறானே அவனே சிவன்.... அதாவது, எவனொருவன் ஜீவனை கண்டு அந்த ஜீவனே அனைத்திற்க்குள்ளும் பிரகாசித்துகொண்டிருக்கும் ஜீவசிவம் என தெளிவுறுகிறானே அவனுக்கு சிவன் என பெயர். அல்லாது பாம்பை கழுத்துல தொங்கவிட்டுகொண்டு இருக்கும் ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்க்கு அல்ல... எங்கோ கைலாயத்தில் இருக்கிறார் என கற்பனை கைலாயத்தில் இருப்பவருக்கு அல்ல.... இருப்பது ஒன்றே தான்.. அதுவே ஜீவனாகவும் ஜீவசிவமுமாக இருக்கிறது. அதனாலத்தான் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி என ஆண்டவரை துதித்துகொண்டிருந்த வள்ளலார், அந்த அருட்பெரும்ஜோதியில் கலக்கபோகிறேன் என சொல்லாமல் ,” எல்லா ஜீவர்களிடத்தும் கலந்து கொள்ளபோகிறேன்” என விளக்கமாக சொல்லிவிட்டு போனார்.. நமக்குத்தான் அது விளங்காமல் போச்சு... அருட்பெரும் ஜோதியில் கலக்காமல் எல்லா ஜிவனிலும் கலக்கும் காரணம் இதுவே... இதுவே “இயற்கை உண்மை கடவுள்

மகார வித்தை

===============மகார வித்தை======= ஐயா மகாரத்துக்கு மேல வருகிர புள்ளியே விந்து..அதுக்கு மேலே அர்த்தசந்திரன் வரும் அரைஅரைக்கா மாத்திரை...அதுக்குமேலே நாதம் வரும்......நீங்க சொல்லி இருக்கிறபடி அ+உ+நாதம் +விந்து+ம் என்றபடி இல்லை.... ’ மகாரம் மலமாய் வரும் முப்பதத்துள்” என்பது மூலர் வாக்கு...அதாவது புள்ளி இல்லாத மகாரமே ஆணவமலத்தையுடைய ஆன்ம அணு.....அதற்க்கு விந்துவேற்றம் செவித்தலே ,அதாவது ஒளியேற்ரம் செய்வித்தலே ஞான முறை...அது சூக்கும திருவுபதேசம்.....அதை “செவிச்செல்வம்” என்பர்... துரியம் என்பது அகர உகர மகரம் கடந்து அரை மாத்திரையானதில் இருக்கும் என சங்கர பகவத்பாதருடைய குரு கவுட பாதர் விலக்குகிறார்....இங்க துரிய தவம் சொல்லி குடுத்து சமாதி நிலை கிடைக்குதாம்,ஆனா அகாரத்தையும் கண்டதில்லே உகாரத்தையும் கேட்டதில்லை,விந்து நாதம் தெவையே இல்லை...என்னா உலகம் எப்படியாவது நாலு பணம் பாக்கணும் ஆசிரமம் கட்டணும் பயிற்சி வகுப்புகள் நடத்தணும்ன்கிற ஒரே குறிக்கோளிலே குருமார்கள்.....நல்ல சீடர்களை வார்த்தெடுக்கணும் என்கிறகவலை கிடையவே கிடையாது....கொடுக்கிற பீஸுக்கு சமாமான போதனை அவ்வளவுதான்...ஞானம் கிடைச்சச்சு போ.....நல்லா உருப்படும் குருவும் சீடனும்...... அரை மாத்திரை விளக்கம் என்பது குரு பாரம்பரியத்தால் கிடைக்கப்பெறுவது...அப்படி ஒன்று இருக்கிறது என்பது பெரும் ஞானிகளுக்கு தெரிந்தாலும் அதை விளக்கத்தெரிவதில்லை....கேட்டால் அது ரகசியம் என ஓடிவிடுவர்...ஆனால் உண்மை அதுவல்ல....உண்மையில் அரை மாத்திரை என்பது உச்சரிக்கும் தன்மையாகும்...ஓம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று நீட்டுவது ஒரு தன்மை...ஆனால் அது நீட்டுதல் இல்லை, ===ம்ம்ம்ம்ம்ம்ம்= என முழங்குவது ஆகும், மற்றொன்று தான் ””””அரை மாத்திரை பிரயோகம்”””,அது தீட்சா சம்பிரதாயம்.....அதுவானது மகாரத்தின்மெல் புள்ளி போடாமல் அர்த்த சந்திரன் போட்டு உச்சரிக்கும் முறை...அது குருவானவர் சீடனுக்கு காதில் உபதேசித்து கருணை பொழியும் முறை...அதுவே அருள் முறையான அமைப்பு.....அதையே வடமொழியில் ஓம் என்பதை எழுதும் போது அதன் மேல் அர்த்தசந்திரனும் ஒரு புள்ளியும் போட்டிருப்பார்கள் நம் ரிஷி முனிவர்கள் தங்கள் கருத்தால் சுட்டிக்காட்டிய ஞான அமைப்பு அது.ஆனால் காலப்போக்கில் உண்மை மறைந்து போனது,நாமும் அரைமாத்திரை பிரயோகத்தை இழந்துவிட்டோம்,ஆனால் கடவுள் கருணை உள்ளவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது...கருணைசெலுத்தவேண்டியவர்களுக்கு அவர் கருணைபொழிய தவறியதில்லை நன்றி: ரியான் அய்யா.

இருளை கவனியுங்கள்.

அந்த இருளை கவனியுங்கள்..அது அனாதி கால இருள்...நீங்கள் கருப்பையில் இருந்த போது கண்டுகொண்டிருந்த இருள் தான். உலகத்தில் பிறந்து கண்களை திறந்த பின்னர் உலகத்தின் சூரிய சந்திர ஒளிகற்றைகள் கண்விழி ஊடாக உட்சென்ற பிற்பாடு, இந்த இருளை நீங்கள் கவனிக்க தவறி விட்டீர்கள்.”அன்றுமின்று மென்றும் அழியா பொருளேதடீ சிங்கா-அது இரு கண்ணையும் மூட இருள் அழியா பொருளனதடி சிங்கீ” என பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் ஞானியர் அப்பா பாடல் நினைவுக்கு வந்து விட்டது.. Rian ji

Friday, December 2, 2022

நாளை நாம் எங்கே?

 வந்து வந்து உலகில் பிறந்து இறந்து போன எண்ணற்ற கோடி மக்கள் நினைத்து ஏமாந்து போன ஒரு விஷயம் என்னவென்றால் மறுபிறவி உண்டு,அதனால் அடுத்த பிறவியில் முக்தி பெற ஆவன செய்வோம்,இந்த பிறவியில் நமக்கு இருக்கும் பிரச்சனைகளினல் நம்மால் செய்ய வேண்டிய விஷயங்களை செய்து முக்தி பெற ஆவன செயலாற்ற முடியாது என்பதே.

ஏ மூடனே, இப்படித்தான் நீ ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றாய். புத்திகெட்ட நீ எப்பேர்ப்பட்ட அப்பாடக்கரானாலும் சரி உனக்கு மறுபிறவி என்பது இல்லை என்பதை அறியாமல் பகல் கனவு கண்டு தூங்குகின்றாய்.இந்த வாய்ப்பை தவறவிட்டு எந்த வாய்ப்புக்கு காவல் காக்கின்றாயோ?.மூடனே உன் வாய்ப்பு இத்தோடு முடியக்போகின்றது என்பதை எப்போது உணர்ந்து கொள்ளப்போகின்றாய்?

சாத்திர வேதங்கள் மறுபிறவி உண்டு என ஆணையிட்டு சொல்லுகின்றனவே என வக்காலத்து பேசி நிற்கின்ற மடையனே சொல்வதை சற்று செவி கொடுத்துக் கேள்.;மறுபிறவி உண்டு தான்,ஆனால் அது உனக்கில்லை.மறுபிறவி என்பது கர்ம பலன்களினால் உண்டாகும் தொடர்.அந்த கர்ம பாவபுண்ணிய தொகுப்புக்கு அதிகாரி நீ அல்ல என்பதை கவனிக்க தவறி விடுகின்றாய்.உன் அறிவு உனக்கு உண்மையை காட்டவில்லை,பொய்யை காட்டுகின்றது.உன் உயிரே உன் பாவபுண்ணிய செயலுக்கு அதிகாரி.நீ வேறு உன் உயிர் வேறு.உன்னை விட்டு பிரியும் உயிரானது உன்னையும் கொண்டு செல்லாது.உன்னை அம்போ என நாதியற்றவனாக நடுத்தெருவில் உதறிவிட்டு பாவபுண்ணியங்களை மட்டும் தூக்கிக்கொண்டு ஓடிவிடும்.ஆன்மாவான உன்னிடம் பாவபுண்ணியங்கள் தங்காது.ஆன்மாவான நீ தனித்திருக்கின்றவன்,உனக்கு உயிரோடோ உடலோடோ ஐக்கியம் என்பது இல்லவே இல்லை.

உயிருக்குத்தான் அனேகம் கோடி மறுபிறப்புக்களே ஒழிய உனக்கில்லை.உயிர் பிரிந்துவிட்டால் உனக்கென்று சொந்தமாக ஒன்றுமில்லை. நீ செய்து விட்டாய் என நீ நினைத்துக்கொண்டிருக்கும் அனைத்தும் உண்மையில் நீ செய்தவை அல்ல.அது உயிரால் ஆனது உயிரால் கர்மங்கள் ஆனவை.செத்த பின் உன் கதி தான் என்ன என கேட்கின்ற மூடனே கேள்,நான் நான் என அபிமானித்திருக்கும் நீ உண்மையில் நாதியற்றவன்.இருளிலே திக்குத்திசை தெரியாமல் உழல்கின்றவன்.அப்படிப்பட்ட உனக்கு ஒரு வாய்ப்பாக உயிரும் உடலும் அமையப்பெற்றது அவன் கிருபை.

இப்போது சொல். நாதியற்று போகவா நீ பிறவி கொண்டாய?.

எப்போது தான் உன் நாதனை அடையாளம் கண்டு கொள்ளப்போகின்றாயோ?.


Wednesday, November 30, 2022

ALLAH and ILLAH

ALLAH and ILLAH What the difference among "ALLAH" and "ILLAH"?? கலிமாவில் குறிப்பிடபடும் “அல்லாஹு” மற்றும் “இல்லாஹீ” என்பதின் வித்யாசம் தான் என்ன Mohamed Rafaideen ஐயா..நபியவர்கள் தான்செவியுற்ற கலிமாவை அப்படியே சொன்னார்கள்தான் அதன்விளக்கத்தைச் சொல்ல தேவையில்லாத காரணம் அவர்களுக்கு அரபி மொழி தெரிநததனால்தான்.பாக்ஷை விளங்காமல் குழம்பவில்லை. அவர்கள் அரபியர்களாவே இருந்ததினால் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று நபியவர்கள் சொன்னதும் பொருள் விளங்கி அதன் கருத்தில் குழப்பமடைந்து நபியவர்களை எதிர்த்தும் வந்தார்கள் என்பதே Hseija Ed Rian அரபு மொழியில் ‘அல்லாஹ்’ எனும் வார்த்தை நபியவர்கள் மொழியும் முன்னே இருந்தது என சொல்கிறீர்களா Hseija Ed Rian குழப்பம் அடைய காரணம் இது தான், அவர்கள் அறிந்திருந்தது இலாஹ் எனும் வார்த்தையின் பொருளைத்தான். நபியோ அதை மறுத்து அல்லாஹ் எனும் புது வார்த்தையை மொழிந்தார், அதான் அரபிகளின் குழப்பம்.அந்த வார்த்தை அவர்களுக்கு புதிதாக இருந்தது..ஆகையினால் அது புது கடவுளை அறிமுகபடுத்துகிறாரோ என பயந்தனர்.குழம்பினர் Hseija Ed Rian ஆதம் அலை கூட முஹம்மது ரசூலுல்லாஹ் என நினைவு கூர்ந்ததாக ஹதீது சொல்கிறது, அதாவது முஹம்மது நபி இன்னமும் பிறக்காத அந்த அதி காலத்தில் Hseija Ed Rian முந்தைய நபிமார்கள் அல்லாஹ் எனும் வார்த்தையை தெரிந்திருந்தார்கள் எனில் ஏன் அரேபிய மக்கள் அல்லாஹ் எனும் கடவுளை நபிக்கு முன்னர் வணங்காமல் இருந்தனர் எனும் கேல்வி எழும் அல்லவா Mohamed Rafaideen இல்லை..இலாஹு என்ற சொல் அவர்கள் எடுத்துக்கொண்ட விக்ரஹத்திற்கும் அல்லாஹ்வாகிய தன் கும் உரிய பொதுப்பெயர் சொல்லாகும். அதனாலேயே அந்த மக்கத்து மக்கமள் "என்னே இவர் எல்லா இலாஹுவையும் (அவர்கள்வணங்கிய தெய்வங்களையும்) ஒரே இவாஹுவாக சொல்கிறாரே என்றுதான் குழம்பி எதிர்த்தார்தார்கள் Hseija Ed Rian இலாஹூ என்பது விகிரகத்துக்கும் அல்லாஹுவுக்கும் ஆன பொது பெயரா..ஆச்சரியமாக இருக்கின்றதே ஐயா? Hseija Ed Rian லா இலாஹா என்றால் இலாஹுக்கள் இல்லை என பொருள், இல் அல்லாஹ் என்றால் அல்லாஹ் மட்டுமே இருக்கின்றான் என பொருள் Mohamed Rafaideen முந்தைய நபிமார்கள் சொன்னது அல்லாஹ்வுக்கு (மெய்ப்பொருளுக்கு) வேறானையா நீங்கள் வணங்க்கிறீர்களென்று..ஏகத்துவத்தைக் குறிப்பிட்டு அல்லாஹ்வுக்கு வேறாக ஒன்றுமில்லை அவனை ஏகத்துவப்படுத்துங்கள் என்றே முந்தைய நபிமார்களும் கூறினார்கள். இதுவே அத்வைதமெனப்படும். இதையே அன்றிலாருந்து இன்றுவரை மக்கள் எதிர்க்கிறார்கள் Hseija Ed Rian அத்வைதம் என்பது வேறு ஐயா...அத்வைதத்தில் பெயருக்கு கூட இடமில்லை. அத்வைத பிரம்மம் வார்த்தைகளுக்கும் பேச்சுக்களுக்கும் வேறானது. அது நபிமார்களையோ ரிஷிமுனிமார்களையோ உலகத்தையோ தொடர்பு கொண்டு இருப்பதில்லை. Mohamed Rafaideen இந்த முஹம்மது எல்லா இலாஹுவையும் ஒரே இலாஹுவாக ஆக்கிவிட்டாரே...என்று சொன்னதில் இலாஹு என்ற சொல் பொதுப்பெயர் சொல்லாகவும் கூறப்பட்டுள்ளது. Hseija Ed Rian அத்வைதம் என்பது ஏகத்துவம் அல்ல. அதை ஏகத்துவம் என குறிப்பிடாமல் இரண்டற்றது என தான் குறிப்பிட்டார்கள். அத்வைதம் என்பதின் பொருள் கூட அது தான். ஏகத்துவம் என்பது ஒன்றையே சார்ந்திருத்தல். அத்வைதம் என்பது இரண்டற்றதை சார்ந்திருத்தல் Mohamed Rafaideen வணங்கப்படுகிற சிருக்ஷ்டியையும் தன்னையும் ஒன்றுபடுத்தி வேறில்லை எல்லா இலாஹும் அல்லாஹ்தான் என அறியப்படுகிறது Hseija Ed Rian அத்வைதத்தில் குறிப்பிடும் பிரம்மம் வேதங்களை இறக்குவதில்லை, மலக்குகளையும் கொண்டிருக்காது, அது இது என சொல்ல சுட்டும் வஸ்த்து அல்ல.அதற்க்கு சொர்க்கமோ நரகமோ இல்லை.பாவமோ புண்ணியமோ இல்லை.அது ஏகமானவற்றையெல்லாம் கடந்த இரண்டற்றது என மட்டுமே மொழியபட்டிருக்கிறது Farook Mohameed Hseija Ed Rian அப்பனா ஒரு கேள்வி முஹம்மத் என்றால் என்ன. Hseija Ed Rian Farook Mohameed அருமையான கேள்வி, இதன் பொருள் முஹம்மது ற்சூலும் அல்லாஹ்வும் மட்டுமே அறிவர்,அன்றியும் அவர்கள் விரும்புபவர்களும் அன்றி யாரும் அறியர் Hseija Ed Rian Farook Mohameed நான் முஹ்ஹம்மது என சொல்லி வருவது ற்சூலை, நீங்கள் முஹம்மது என சொல்லி வருவது நபி பெருமானாரை என நம்புகிறேன். ஏனெனில் ற்சூலை ஆதம் அலை கூட அறிந்திருந்தார்கள் அல்லவா? Mohamed Rafaideen ஐயா..முஹம்மத், எம்மைப்போன்ற சாதாரண மனிதரென்பது முதல் நிலை. இறைதூதுவராக இருப்பது இரண்டாம் நிலை. இறைநிலையாக இருப்பது மூன்றாம் நிலை.இவை அவர்களின் இரகசியத்தில் நின்றும் உள்ளது..ஆமினா அப்துல்லாஹ்வின் மகனாக இருந்தது முதல் நிலையாகும் Hseija Ed Rian Mohamed Rafaideen ஆதம் நபியவர்கள் சுவர்க்கத்தில் இருந்து துனியாவுக்கு வந்த பிற்பாடு அனேகம் வருடம் இறையை துதித்த பின்னர் அவருக்கு கலிமா த்ய்யிபா சுவர்க்கத்தில் எழுதி இருந்தது நினைவுக்கு வந்ததாம். அதாவது முஹம்மது ற்சூலில்லா என சுவர்க்கத்தில் எழுதியிருந்ததை நினைவுக்கு வந்தது என பொருள். அப்துல்லாஹ்வின் மகனாக இருந்தது யார், சுவர்க்கத்தில் எழுதியிருந்த பெயர் யாருடையது Mohamed Rafaideen Hseija Edrian..சுவர்க்கம் நரகம் துனியா(உலகம்)என்பதை நீங்கள் எப்படி கருத்துணர்ந்திருக்கிறீர்களோ எமக்கு தெரியவில்லை ! நீங்கள் கூறிதுபோன்று சுவர்க்கத்தில் எழுதியிருந்த அந்த முஹம்மதுநபி துனியாவுக்கு எப்படி வந்தார்? உலகவழக்குப்படி ஆமினா அப்துல்ஹ்வுக்கு மகனாக பிறந்தாரா இல்லையா ? இதையே முதலாம் நிலையென்று குறிப்பிட்டிருந்தேன்! ஆதம்நபி(முதல்மனிதன்) என்னகாரணத்தினால் துனியாவுக்கு வரநேர்ந்ததென்பதை இங்கே நான் விவரிக்கவில்லை.முஹம்மத் மகனாக பிறந்துவிட்டதும் ரஸூல் பிறந்துவிட்டார் என்று நாம் யாரும் கூறவில்லை.அத்துவிதம்,துவிதம் ஒன்றோ அத்துவிதத்தை பேசவேண்டும் இல்லையேல் துவிதத்தை பேசவேண்டும் இரண்டையும் ஒன்றாக மாறி மாறி பேசுவது அறிவின் (வளர்ச்சி)வெளிச்சத்திற்கு தடையாகும் .கேள்விஞானம் இங்கே ஏட்டுசுரைக்காயாகும்.முஹம்மதென்பவர் சர்வபிரபஞ்சங்களுக்கும் ஆதேயங்களுக்கும் ஆதாரமாகிய காரணக்(கரு)குரு..! உங்கள் புரியுதலுக்கு : அநேக உருவங்களாய் அமைந்து வந்த அத்துவிதமே அறிவின் மறதியால் , இறைவன் வேறு இருப்பதாகத் தேடுதலில் துவிதப்படுகிறது...! நன்றி. Hseija Ed Rian சுவர்க்கத்தில் எழுதியிருந்த அந்த முகம்மது றசூல் எப்போதும் உலகத்துக்கு வரவில்லை.சுவர்க்கத்தில் இருக்கிறவர் றசூல், துனியாவுக்கு வந்தவர் நபி. Hseija Ed Rian நபி பெருமானார் உலகத்துக்கு வழங்கிய நூல் பெயர் “அல் புர்க்கான் Hseija Ed Rian சூபி மறைஞானம் சாதரணமாக புரிதலுக்கு சற்று சிரமம் ஐயா...அதனால் சூபி ஞானிகளை எப்போதும் கொலை செய்தார்கள் Mohamed Rafaideen ரஸூல் என்பதின் பொருளை கண்டுபிடியுங்கள் அப்போது அவர்கள் உலகத்துக்கு வந்தாரா இல்லையா என்பதை அறியலாம், சுவர்க்கத்தில் இருந்த அவர் கையில் எப்படி குரான் இருக்கும் புதுக்கதையாக இருக்கிறது..குரான் என்றால் சேகரம் என்பது அதன் பொருள்.அலிப் லாம் மீம் இது இரகசியத்தின் அட்சரங்களே தவிர இதையே கிதாபென்று யாரும் எழுதவில்லை.கிதாப் இதுதானென்று இங்கு விளக்கம் தரவில்லை. நபிபெருமானால் சொல்லியதை அக்காலத்தில் அருகிலுள்ள நண்பர்களால் ஒவ்வொரு ஒலைகளிலும் எழுதி பிறகு எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தொகுபகியதற்கே (குரான்)சேகரமென்று கூறினேன்.இக்குரானுக்கு இன்னுமொரு பெயருண்டு.சூபியாக்களின் இறைமொழியை துவித உணர்வாளர்கள் எக்காலத்திலும் எப்போதும் இன்றும் எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்...இவ்வளவுதான்.நன்றி Hseija Ed Rian Mohamed Rafaideen ஐயா இது புதுக்கதை ஒன்றுமில்லை, ஏற்கனவே சொல்லியிருக்கிற கதை தான். பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் சொல்லியிருக்கும் கதை தான் இதெல்லாம். அவரின் மஹ்ரிபத்து மாலை கிடைச்சா வாங்கி படிச்சு பாருங்க, கதை விளங்கும் Mohamed Rafaideen Hseija edrian..ஐயா..பீர்முகம்மதுசாஹிப் அப்பா மெய்ஞ்ஞான சொரூபி..அந்த குருமணிஇறசூலின் கதையை கூறிய இரகசியத்தின் நிலை வேறு அதனை படித்திருக்கிறேன்.அந்தக்கதையில் குர்ஆனையோ / அலீப்லாமீமையோ குறிப்பிடும்பகுதியில் குருமணியிறஸூல் இறை கலாமை பெற்றுக்கொண்ட இரகசிய நிலையை பரிபாக்ஷையாக விளக்கியிருக்கிறார்கள் அது குர்ஆனுக்கு முந்தியுள்ளது ஐயா. Hseija Ed Rian முஹம்மது ஆணா பெண்ணா என்பதற்க்கு பீர்முஹம்மது ஒலியுல்லாஹ் கொடுக்கும் விளக்கம் என்னாண்ணு கூட பாருங்க ஐயா   Hide or report this Like    · Reply    · 1y Hseija Ed Rian ஆஷிக்கானது அல்லாஹுவாம் அண்ணல் முஹம்மது மஹுஷூக்குவாம்-பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்   Hide or report this Like    · Reply    · 1y Mohamed Rafaideen ஆமாய்யா...இது உடலை,உயிரை-குறிப்பிடடதில்லை. ஒளிவை நோக்கமாகக்கூறியது பல்லாயிரங்காலங்களாக ஆக்ஷிக்கின் நேசத்தில் மஹுக்ஷூக்கான ஒளிவை உருவாக்கினான் நன்றி. 1   Hide or report this Like    · Reply    · 1y PSwaminathan Swaminathan Hseija Ed Rian காதலன்... காதலி... 1   Hide or report this Like    · Reply    · 1y Hseija Ed Rian PSwaminathan Swaminathan ஆமாம் ஜீ   Hide or report this Like    · Reply    · 1y Hseija Ed Rian அந்த ற்சூலை வெச்சுத்தான் கலிமா இருக்கு,இவிங்க இந்த நபிய வெச்சு சொல்ரய்ங்க   Hide or report this Like    · Reply    · 1y Mohamed Rafaideen அய்யா அந்த ரஸூல் என்ற சொல்லின் பொருளை அறிந்தால் விடை தானாக கிடைக்கும் இதையே முன் பதிவிட்டதில் கூறியிருந்தேன் அதன் பொருளை இன்னமும் நீங்கள் அறியவில்லைபோல் தெரிகிறது.அதனால்தான் இவ்வளவு நேரம் கலந்துரையாடுகிறோம் ஐயா கலிமாவென்பது கலியும் மாவும் இந்தக் கலிமா இல்லையென்றால் ரஸூலும் இல்லை . இங்கு இப்போது இறைவனே மஹுக்ஷூக்கான பெண்ணாகவும் அவனை அடைய விருப்பம் வைக்கும் நாங்களே ஆக்ஷிக்காகவும் இருக்கிறோம். மெய்ப்பொருள் காதலியாகவும், அதை அடைய முயற்சி செய்யும் நாங்கள் காதலர்களாகவும் இருக்கிறோம். இங்கே நீங்கள் கூறிய ஆக்ஷூக்கான அல்லாஹ் மஹுக்ஷூக்காகவும், மஹுக்ஷூக்கான முஹம்மது ஆக்ஷூக்காகவம் மாறிவருகிறதை கருத்தில் உணரவும்.பீருமுஹம்து அப்பா ஒவ்வோர் நிலைமையின் அநுபவக்கருததினை அந்தந்த படித்தரத்திற்கு தக்கவாறு பேசியிருக்கிறார்கள் இதை எல்லா படித்தரத்துக்கும் அவர்களின் கருத்தை நுழைப்பது தவறு ஐயா, ஆண்பெண்ஒளிவை பீரப்பா கூறியது ஒரு நிலை.இதே விக்ஷயத்தை இன்னும் ஒரு அப்பா எப்படி சொல்கிறாரென்று பாருங்கள்...* என்னைவிட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனக்கு, உன்னைவிட்டால் வேறோருபெண் இவ்வகிலத்தில் இல்லையே எனக்கு*..இது குணங்குடி மஸ்தானசாஹிபு அப்பா பாடியது. இதில் யார்சரியென்று உங்களால் கூறமுடியாது. நீங்கள் பீர்அப்பா சொன்னதாக அல்லாஹ்வை ஆணென்றீர்கள் இபீபொது மஸ்தான்சாஹிபு அல்லாஹ்வை பெண்னென்று கூறுகிறார்கள் .இருவரும் ஒருவருக்கொருவர் பிழையா ? அல்லது நீங்கள் சொல்வது சரியா? எது சரிஐயா? ஆகவே..முஹம்மதோ நபியோ ரஸூலோ யாரவச்சி வேண்டுமானாலும் கலிமா இருக்கலாம் ! முந்திய நபிமார்கள்,ரஸூல்மார்களைவச்சும் கலிமா வந்தேதான் இருக்கிறது. ஐயா..மெய்ப்பொருளாலன் காதலிதான்..அவளை நேசிக்கும் நாம் அனைவரும் காதலர்கள்தான்! நன்றி. 1   Hide or report this Like    · Reply    · 1y Hseija Ed Rian Mohamed Rafaideen படிக்கிறவன் மண்ட குழம்பித்தான் போகும் போல,ஆஷிக் என்ன மஹஷூக் என்ன என கேட்டா யாரு சொல்லபோற?. றசூல் என அதுல சூலென்ன என கேட்டா யாரு சொல்ல போறா? அர்-றுக்குள்ள நிர் வந்ததெப்போ ,நிர்றுக்குள்ள நூர் வந்ததெப்போ என கேட்டா யாரு சொல்ல போறா? கலிமாவுல ஹலியென்ன மாவென்ன என கேட்டா யாரு சொல்லப்போறா? வாவும் சீனும் வந்தங்கே நூனுக்குள் அமர்ந்தவிதம் தான் யாரு சொல்ல போறா? காபு ஹேயா சூடிநின்ற பொருள் யாருதான் வந்து சொல்லபோறா? ஐன் எனும் சூட்சகலிமா வந்தால் சுறுமாவும் பிறையும் துலங்கும்..அதுவரைக்கும் அங்கிட்டும் இங்கிட்டும் ஆக அக்கப்போரு தான் Hseija Ed Rian மக்கா மக்களுக்கு நபியவர்கள் தான் செவியுற்ற கலிமாவை அப்படியே மொழிந்தார்,ஆனால் அதன் விளக்கம் இன்னது என தெளிவு படுத்தவில்லை.அதை கேட்டவர்கள் கூட அதன் பொருளை அறியாமல் குழம்பினர் என வரலாறு சொல்கிறது. Hseija Ed Rian அல்லாஹு இல்லாஹீ ஆதியானவனே ஆராரும் அணுகாத தீதாறு உள்ளோனே (பீர்முஹம்மது ஒலியுல்லாஹ்-ஞானபுகழ்ச்சி).ஏன் இரண்டாக கூறுகிறார் பீரப்பா?, அல்லாஹு எனும் ஒரு சொல் மற்றும் இல்லாஹீ எனும் மற்றொரு சொல் Farook Mohameed ஒருபோதும் குணியைவிட்டு குணத்தை பிரிக்கவே முடியாது . காரணம் அது இரண்டற்ற ஒன்று Farook Mohameed இல்லாஹூ மற்றொரு சொல் ஷிருட்டி.. Nasrath Ahamed கலிமா என்பது இஸ்லாத்தை பொறுத்த வரை மாபெரும் இரகசிய மந்திரம்...அதை சூபி ஞானி கள் விளக்கினால் சரிப்பட்டு வரும் நாம் விளக்கினால் சரி பட்டு வராது...இருந்தாலும் எனக்கு தெரிந்ததை சொலின்றேன்...கலிமாவில் அல்லாஹீ மற்றும் இல்லாஹீ என்ற தனித்த வார்த்தை இல்லை...லாயிலாஹ இல்லல்லாஹீ முஹம்மதுர் ரசூலில்லாஹி என்றே உள்ளது...மற்றும் குறிப்பில்லாத ஒப்புவமை இல்லாத இறவனுக்கு 99 அழகிய திருநாமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது இருந்தாலும் அல்லாஹ் என்ற வார்த்தையே குர் ஆனில் அதிக இடத்தில் பயன்படுத்த படுவதால் இந்த வார்த்தையே வழக்கத்திற்க்கும் அந்த வார்த்தையை ஒலி க்கும் போது பிரபஞ்ச ஆற்றலை பெற ஒர் வழியாகவும் பயன்படுத்துகிறார்கள்...மற்றும் இந்த கலிமாவில் 99 தத்துவங்கள் உள்ளன அதை முறையாக தெரிந்து அதில் உள்ள இரகசியத்தை உணர்ந்து சூபி ஞானிகள் நிஸ்டைக்கு அடித்தளமாக பயன்படுத்துவார்கள்... அத்வைதம் - வஹ்தத்துல் உஜீது என்று அரபியில் கூறுவார்கள்...இஸ்லாத்தில் உள்ள ஞானம் என்பது வெளிப்படையாக பேசப்படுவதில்லை ஆதலால் சாமான்ய மனிதர்கள் கலிமா வின் உட்பொருளை அறியாமல் மந்திரம் ஜபித்து வெளிப்படையான கருத்தோடு காலத்தை கடத்தி விடுகிறார்கள்

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு

உண்ணும்போது உயிரெழுத்தை உயர வாங்கு எழுத்துகள் தோன்றுமிடமே உயிர் இயங்குமிடமாகும். எழுத்தும் இசையும் தோன்றுமிடம் ஒன்றேயாகும். 5 மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுத்தின் ஒலியை இசை என்றும் பண் என்று பஞ்சமரபு கூறுகிறது. "எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப" - நூன்மரபு. 1 அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதற் சிறப்பான் முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்பர் (இளம்பூரணம். பக்.26) உடல் இயங்குவதற்கு ஏதுவாகிய அகரத்தை தொடக்கத்திலும், வீடு பேறடையும் ஆண்பாலைக் குறிக்கும் னகரத்தை இறுதியிலும் கொண்ட எழுத்துகளின் வைப்புமுறை அமைந்துள்ளதால் தொல்காப்பியம் ஓக முறைகளையே முதலாகக் கொண்டுள்ளது எனலாம். தமிழ் எழுத்துகள் முப்பது என்னும் அவ்வெண், திங்கள் ஒன்றுக்குரிய நாள்களைக் குறிப்பதாகும். உடம்பிலுள்ள உயிர் அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் உள்ள முப்பது நாள்களும் உடலில், ‘அமுத நிலைகள்’ என்னும் உயிரின் சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் சுழற்சி, ஒவ்வொரு நாளும் உடற்பகுதி ஒவ்வொன்றிலும் நின்று செல்லும் என்று தமிழ் மருத்துவம் குறிப்பிடுகிறது. உயிரின் சுழற்சியை குறிக்கும் நாள்களின் எண்ணிக்கையைக் குறிக்க எழுத்துகள் முப்பதாக அமைந்துள்ளன எனலாம். உயிரெழுத்து ஒலிகள்: (ச ரி க ப த என்னும் ஐந்து ஒலிகளையும் ச ரி க ம ப த நி என்னும் ஏழு ஒலிகளையும் சேர்த்து பன்னிரண்டு ஒலிகள் இசையொலிகளாகக் கொள்ளப்படுகின்றன.) அ இ உ எ ஒ ஆகிய ஐந்து குற்றொலிகளையும் ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஔ ஆகிய ஏழு நெட்டொலிகளையும் சேர்த்து உயிரொலிகளைப் பன்னிரண்டு எனத் தொல்காப்பியம் குறிக்கிறது. குற்றொலி ஐந்தாகும் போது நெட்டொலியும் ஐந்தாகவே இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டு உடையவர்க்குப் புறங்கையும் இரண்டாகத்தாம் இருக்கும். நான்காக முடியாது என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார். "எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” (புணரியல். 141) உயிரும் உயிரும் புணருமிடத்து உடம்படுமெய் வடிவு தோன்றும் என்று இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம், அ+இ = ஐ என்றும், அ+உ = ஔ என்றும் கூறப்பட்டதன் காரணம் யாதெனின், உயிரெழுத்தின் எண்ணிக்கை பன்னிரண்டாக அமைய வேண்டும் என்பதுவே யாகும். 6 உயிர் என்றாலே பன்னிரண்டு தான். அதாவது, உடம்பில் உயிர் நிலைத்திருக்க வேண்டுமென்றால், சூரிய கலையில் சுவாசத்தின் அளவு பன்னிரண்டாக அமைய வேண்டும். தமிழ் மருத்துவம் குறிப்பிடும் சூரிய கலையின் அளவு உயிரோட்டத்தின் அளவாகக் கருதிக்கொண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டாக அமைக்கப்பட்டுள்ளன. உடம்பினுள் இயங்கும் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று கலைகளும் பதினாறு, பன்னிரண்டு, பத்து எனும் அளவுகளைக் கொண்டுள்ளன என்று மருத்துவம் குறிப்பிடுகிறது. உயிரும் மெய்யும்: உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும். 12 x 18 x 100 = 21600 தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம். சார்பெழுத்து: எழுத்துகள் உயிர், மெய், சார்பு என மூன்று வகை என்றும், உயிரையும் மெய்யையும் சார்ந்து வருபவை சார்பெழுத்து என்றும் உரைக்கப்படுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் உயிரையும் உடம்பையும் சார்ந்து இயங்குகின்ற வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று வளி இயக்கங்களைக் குறிப்பவையாகும். அவை போல், மெய்யெழுத்துகள் ஆறு ஆறு எழுத்தாக வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் இடகலை, பிங்கலை, சுழுனை என்னும் மூன்று நாடிகளையும் உடலின் தன்மைகளான வன்மை, மென்மை, இடைமை எனக் குறிக்கின்றன

தமிழ்

Hseija Ed Rian ""தமிழ்' என்னும் சொல்லில் அமைந்திருக்கும் அறிவுக் கலையைக்கொண்டு உயிர் தூய்மையைப் பெற்று உயர்கிறது. அது அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவ ஆனந்த நிறைவைப் பெறுகிறது."....ஆன்மாவுக்கு ஆணவம் எனும் மலம் முழுதும் நிறைந்திருக்கிறது,,ஆன்மாவை மூடி மறைத்திருக்கிறது, அதனை ஏழுதிரைகளால் வள்ளலார் வர்ணிக்கிறார். அது போல உயிருக்கும் மலம் இருக்கிறது. ஆன்மாவுக்கு முழுதும் மலம் எனில் உயிருக்கு கொஞ்சம் குறைவு அவ்வளவுதான்....அதுவும் திரைகளாகவே இருக்கிறது...அதுபோல மனதுக்கும் மலம் இருக்கிறது, மனதும் அறிவினை அடைய அதனுடைய விளக்கத்தினை திரைகலை அகற்றியே பெற்றுகொள்ளகூடும்....மனம் விளக்கமுற சித்தம் பிராசிக்கும்...அது ஒரு படிநிலை...இரண்டாவது படிநிலை உயிர் சுத்தம் பண்ணுதல், அதன் அறிவை விளக்குவித்தல்,, மூன்றாம் படிநிலை தான் ஆன்ம விளக்கம் செய்வித்தல். இம்மூன்றும் சன்மார்க்கிகள் செய்தாகவேண்டும்...இவற்றை களையவே ஒழுக்கங்கள் வள்ளலாரால் வைக்கபட்டிருக்கின்றன...கரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் பெயர்களில். இதை நாம் புரிந்து அறிந்து கொள்ளுதல் அவசியம் Hseija Ed Rian அப்படி உயிரை தூய்மை செய்வது “தமிழ்” எனும் சொல்லில் இருக்கும் அறிவுகலை என்பது அறியவேண்டிய முக்கிய அறிவாக இருக்கின்றது Hseija Ed Rian அந்த அறிவுகலையை உபயோகிக்க இன்றைய சன்மார்க்கிகளுக்கு தெரியலே என்பது கொஞ்சம் வருத்தமான விஷயமாக படுகிறது....நம்முடைய உயிரிலும் திரைகள் இருக்கிறது, நம்முடைய உயிரும் திரைகளை விலக்கி விளக்கம் பெறவேண்டும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்...மனதையும் கரணங்கலையும் சுத்தம் செய்வது போன்று உயிரையும் நாம் சுத்தம் செய்யவேண்டிய தருணமிது Hseija Ed Rian அட்சரங்கள் என்பவை வெறும் எழுத்தினை கொண்டு புரியகூடாது, அவை உயிர் ஓசைகள், உயிர் இருப்பவருக்கு மட்டும் விளங்குபவை. ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதின் ஒரு அடையாளமே ஓசை, குழந்தைகளுக்கு கூட ஓசை வந்த பின்னர்த்தான் குழந்தை உயிருடன் இருக்கிறது என தெளிவுபடுத்துகிறோம்..அக்குழந்தையின் அழுகுரலை கேட்டதும் தாய் தந்தையர் உற்றார் உறவினர் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். ஏனெனில் அது உயிர் விளக்கம், உயிரில் இருந்து வெளிவரும் சத்தம். Hseija Ed Rian ன் ண் ல் ள் என்பவை வெவ்வேறு ஓசை நயத்தினை கொண்டது..அவை துடும் இடங்களும் வெவேறானவை...பொதுவாக உயிர் எழுத்துக்கள் எங்கும் படாமல் வெளிவரும்,, மெய்யெழுத்துக்கள் படகூடிய இடங்கள் ஒவ்வொன்றும் வெவேறு இடங்கள்...க் என சொல்ல அது ஒரு இடத்தில் ஒட்டி இருக்கும்..ங் என சொல்ல வேறொரு இடத்தில் ஒட்டும்...ச் என அப்படி ந் வரை ஒவ்வொரு இடம் இருக்கிறது....ஆனால் உயிர் எழுத்துக்கள் எங்கும் பதியாது நீர் ஒழுகி வருவது போல ஒழுகும் தன்மை உடையது. Hseija Ed Rian உயிர் அறிவுகளில் ஆறரிவு கொண்டவன் மனிதன், அந்த ஆறாவது அறிவு என்பது வாக்கறிவு...அதாவது பேச்சறிவு..பேசும் திறன்..இது மனிதனை ஏனையவைகளில் இருந்து வேறிட்டு காட்டுகிறது. இது இயற்க்கை விளக்கம், இயற்க்கை உண்மை . இ்யற்கை வெளிப்பாடு. இங்ஙனம் வாய் மொழியான ஓசைகள் மனிதன் கண்டு அறிந்து அதனுள் இருக்கும் அறிவுகளைகளை உயிரில் பதித்து உயிர் தூய்மையை அடையவே அனாதி இயற்க்கை கடவுளருளால் வழங்கபட்டிருக்கிறது Hseija Ed Rian இதனை வாக்கு என வள்ளல் பெருமான் விளக்கி இருக்கிறார்..அதாவது சூட்சுமை பரா பைசந்தி மத்திமை வைகரி என நுண் ஓசையிலிருந்து விரிந்து செவிபுலனுக்கு வருவதை வைகரி என முடிக்கிறார்...இப்படி சூட்சுமை எனப்படும் வாக்கானது வைகரி நிலையினால் காதுக்கு எட்டுகிறது. இது அட்சர நிலை சுருக்கம் Hseija Ed Rian அட்சரங்களில் இருக்கும் அறிவு கலை ஆற்றலினால் உயிர் சுத்தி செய்து கொண்டு உயிர் ஆற்றல் பெற்று கொள்ளவேண்டும்...அதிலும் வள்ளலார் குறிப்பிட்டு காட்டும் “ழகரம்” என்பது அதிமுக்கியமானது...அருட்பெரும்ஜோதியரை அதிசீக்கிரத்தில் அடைந்து அடிநடுமுடி இன்பானுபவங்களில் முடிநிலை இன்பானுபவத்தை பெற்றுத்தரும் பெருவல்லபம் பொருந்தியது....அதை பெறவேண்டியவர்களிடத்து பெற்றுகொள்ளும் விதத்தில் பெற்றுகொள்ள அது விளக்கமுறும்