Monday, November 28, 2022

குரு உபதேசம்

குரு உபதேசம் திறந்தவாய் சிப்பிதானும் மழைத்துளி தன்னை வாங்கி கடலடி தன்னிலேதான் மறைந்தங்கிருந்தாற்போல குருவருள் அமுதை உண்டே மறைந்தங்கிருந்தாக்கால் திருவருள் நிச்சயம் தினம் முத்தது விளையும் தானே.

அறி

Monday, October 7, 2019 அறி செத்தறிவால் செத்து தான் போறியே....  உன் சத்தத்தை நீ என்று அறிய போறியோ... சத்தமே சத்தென்று தெளிவாய் அறி.. தினம் சத்தத்திலே சித்தம் தனை கொள்ளவே அறி.. உன்னையே நீ என்றும் அறி.. உன் தன்னையே அறி என்றால் அறிவாலே அறி.. ஆணென்றும் பெண்ணென்றும் அலியென்றும்அறி.. மற்றெல்லாம் சாக்கடை சாவென்றும் அறி.. சற்றெல்லாம் சாக்காட்டின் அறிவென்றே அறி.. வீணென்று விடா அறிவே இது அறி.. வீணருக்கு தோன்றுமோ இவ்வுரை அறி.. மற்றோர் அறிவான அறிவில்லை அறியோ அறி!

பிதாவை அறிந்ததுமில்லை - அவர் சத்தத்தை கேடதுமில்லை

பிதாவை அறிந்ததுமில்லை - அவர் சத்தத்தை கேடதுமில்லை நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது.... நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்? அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா? அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை. அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம் அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது? மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து. மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு? ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார் அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"... இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன? சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்... தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும்.  அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான் ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும் அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை ஹீப்ரூ பாஷை கொஞ்சம் போயி பார்த்தால் அதன் உண்மை தெரியும்... ஹீப்ரு மொழிக்கு உயிரெழுத்து கிடையாது...முழு வேதமும் உயிரெழுத்து இல்லாமல் வெறும் மெய்யெழுத்து மட்டும் கொண்டே தான் எழுத பட்டிருக்கும். அதை படிப்பவர்கள் தான் அதற்க்கு உயிர் எழுத்து சேர்த்து படிக்கவேண்டும். அதாவது, “வ்ண்ட்” என எழுதபட்டிருக்கும்..அதை படிப்பவர்கள் ,”வண்டு” என்றோ அல்லது ”வண்டி” அல்லது வாணேடீ: என்றோ படித்துகொள்ளலாம்...இது தான் வேதம் வந்த கதை.சொல்வதில் சந்தேகம் இருந்தால் கேட்டுபாருங்க, தெரிஞ்சவங்க சொல்லுவாங்க உண்மையை -------------------------------- ”ய்ஹ்வ்ஹ்” இப்படி நாலு எழுத்து இருக்கு, இதை டெட்ராகிராமட்டோண் என்பார்கள்....இதை படிக்கிறவங்க எப்படி வேணுமுண்ணாலும் படிக்கலாம்...கொஞ்சம் பேரு யஹோவாண்ணு படிக்கிறாங்க, கொஞ்ச பேரு ஜெஹோவாண்ணு படிக்கிறாங்க.... கொஞ்ச பேரு யாவே என படிக்கிறாங்க..கொஞ்ச பேரு யாஹூ என படிக்கிறாங்க...இதுல என்னத்த செய்ய...இது வேத கதை

பஞ்ச பூத கலப்பான

 பஞ்ச பூத கலப்பான உடலில் அமுதம் சதா சிந்திகிட்டு தான் இருக்கு....நாம தான் தெரியம இருக்கோம்.பாடுபட தேவையில்லை..எல்லாம் “முடிச்சு’ தான் வெச்சிருக்கு பத்துமாசமான கற்பக நிலையில் எல்லாம் அமைக்கவேண்டிய முறையில் அமைத்துத்தான் இந்த ‘காயாபுரி கோட்டை’ கட்டி வெச்சிருக்கு.ஒண்ணும் பிரிக்கவும் வேணாம் சேர்க்கவும் வேணாம்.அமுதை எங்கிருந்து சதா சிந்திகிட்டு இருக்குண்ணு மட்டும் புரிஞ்சா பொதும் பரதம் எனும் சுக்கில ரசமும் கெந்தியெனும் கருவண்டமும் சேர்ந்து உருவான பிண்டம் பத்துமாதம் கரு உலையில் வெந்து உருவாகி அண்ட பிண்டமாக முடிந்து பிரந்திருக்கிரது.அதனுள் சேர்க்க வேண்டியது எல்லாம் அருமையாக சேர்த்து உருக்கி அமைக்கபட்டுள்லது. சிந்தி போகிற அமுதை சிந்தாமல் அருந்தினால் சிந்தாமணியில் கற்பகாலம் வாழலாம் பேய்த்தேரை மெய்யென்று பேதலித்த மான்போலே சாத்திரங்கள் ஓதி தளராதே-சாத்திரத்தை கற்றறிந்து விட்டாற் கதியாகா தப்பொருளை சற்றறிந்து பாராய் தரித்து  அப்படி நாவை ஓடாமல் மேலன்னத்தில் ஒட்டி வைக்கிற ஒரு சம்பிரதாயமும் இருக்கு ஜீ. பாபாஜி கிரியா மூணு நாலு நிலைகள்களில டோர்க்ரம்ண்ணு ஒரு பயிர்சி குடுப்பாங்க..அதையும் நாவொட்டி என சொல்றாங்க. அதன் விளக்கத்துக்கு திருமந்திரம் “நாவின் நுனியை நடுவே விசிறிடில் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லைச் சதகோடி யூனே” என சொல்றாங்க.அப்ப நாவொட்டி நாயோட்டி இரண்டும் வித்யாசம் வருது தானே. குழந்தைங்களுக்கு நா ஓடாது ‘வழ கொழ”ண்ணு தான் இருக்கும்...அதை ஓட்டி வைக்கிற மந்திரம் ஜீ உபாத்தியாயர்கள் இருந்து சொல்லி குடுப்பாங்க...கா கீ கூவலவோ இலாஹி ஹக்கு றஹ்மானே(பீரப்பா)

மகா மந்திரம்

மகா மந்திரம் தமிழ் தெரியாத ஒருவர் சீவகாருண்யத்தை கடைபிடிக்கிறார் என கொள்ளவோம்.. அவரும் கூட தமிழில் எழுதப்பட்டிருக்கும் “அருட் பெரும் ஜோதி.....” என சொல்லவேண்டுமா? அல்லது அவருடைய சொந்த மொழியில் சொல்ல வேண்டுமா இந்த மஹா மந்திரத்தை?...எப்படி தோன்றுகிறது உங்களுக்கு? (657) கற்பம் பலபல கழியினு மழியாப் பொற்புற வளித்த புனிதமந் திரமே (658) அகரமு முகரமு மழியாச் சிகரமும் வகரமு மாகிய வாய்மைமந் திரமே (656) வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து நான்பெற வளித்த நாதமந் திரமே இதுவே நாதாந்த திறவுகோல்.... நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்... இதுவே திருமூலர் கூறும் கருத்து... "காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே” ....அந்த கருத்தே இதுவாம்... இது ஏனையோர் ஜெபிப்பது போன்றதுவே.. "பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே....” எனவர்கள் முறயிடுவர்... அதேதான் உங்கள் முறையீடும்.... குரு இல்லாமல் அனுபவம் என்பது வராது.... ஒரு சிறு விளக்கை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும், அதை விட கொஞ்சம் பெரிய தீ பந்தத்தை நோக்கி பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது, கார்த்திகை சொக்கப்பனையை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும்... ஒரு காடே பற்றி எரியும் போது அதை பார்த்து அருட்பெரும் ஜொதீ என்பதும்... இந்த உலகத்தயே இரயாக்ககூடிய தீப்பிழம்பான சூரியனை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது ஒன்றாகுமா? அப்போ உண்மையான ஜோதியை வணங்க வேண்டுமா.. அல்லது பாவிக்கப்படும் ஒரு ஜோதியை வணங்க வேண்டுமா... அதற்க்கு “பக்தி” எனும் ஒரு புனை பெயருடன்?.... பொய்யான ஒன்று பக்தியினால் மெய்யாகுமா... மெய்யான ஜோதியை வணங்குவது தானே முறையும் அழகும்? அந்த நாதாந்த மந்திரத்தை பெற்று கொள்வது தானே விவேகமான செயல்?? மந்திரங்கள் உச்சரிப்பதனால் மூடத்துவம் உண்டாகும் என்று சொன்னவர் வள்ளலார்.... அவரே பிற்பாடு இப்படி ஒரு மந்திரத்தை சொன்னார் எனில் அதன் தன்மை எதுவோ.... மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினரும் இதை கற்று கொள்ளவும் வேண்டுமே... ஆனால் "நாத மந்திரைத்தை" அறியும் நாள் எந்நாளோ..?? வள்ளலார் சொன்ன இந்த மஹா மந்திரத்தில் எங்கு அகரமும் சிகரமும் வகரமும் சேர்ந்த “நாத மந்திரம்” இருக்கிறது? சொல்லுங்களேன்..

தன்னை அறிந்திராமல் இருப்பதே

தன்னை அறிந்திராமல் இருப்பதே அதன் காரணம். உசும்புதல் விரிந்து பரந்து வலையாகி பின்னி தானே தன்னிலை அறிவது எப்படி என புரிந்து புரியாமல் உழன்று கலந்து மயங்கி தயங்கி நிற்க கனிந்து குருவருள் குளிர்ந்து தன்னிடை புகுந்து தன்னிலை மறந்து தன்னை அறிந்து தானாக நிறைந்து தன்னையே அறிய உசும்புதல் அகன்று நிர்மலம் நிரலம்பம் தானந்தம் இல்லா தனிமை நிரைந்து புரிந்து விரிந்து தன்னிலையே தானாக தான் தான்

கூண்டு விளக்கு

கூண்டு விளக்கு தன்னுயிரையே கணு அன்பு செலுத்தி, உயிரின் உயிராம் அருளை உணர்ந்து, அந்த அருளின் உயிராம் இறைவனை அடைவதை விட்டுவிட்டு தேங்காய் எண்ணையோ, நல்லெண்ணையோ, நெய்யோ விட்டு எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் அருளை தேடுவதை போன்று ஒரு மூடத்தனம் இருக்கமுடியுமா திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்...... நாம் வீட்டில் “திரு விளக்கு” வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?... “திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது.... அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும், என்பது பொருள் திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது... அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார். அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம். கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள் -- "திரு" - ரியான் அய்யா அவர்கள் அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி” என்பதர்க்கு பெருமானார் விளக்கம் கூறுகிறார் பாருங்கள்... நாம் பொதுவாக “ஜொதி, ஜோதி” என்றால் ஏதோ விளக்கு அல்லது வெளிச்சம் என பொருள் கொள்வோம்... ஆனால் பெருமானார் தரும் விளக்கம் என்பது வேறானது ..அதை சற்ரு ஆழமாக புரிந்தால் அல்லாது புரிதல் வராது. அவர் மஹா மந்திரத்திற்க்கு தரும் விளக்கம் என்பது “பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம்”. இது தான் மஹா மந்திரத்திற்க்கு வள்ளலார் தரும் விளக்கம். கூர்ந்து கவனித்தால் இந்த விளக்கத்தில் எங்குமே “ஜோதி” என்பது வராது,“ வெளிச்சம்” என்ற பொருளும் வராது, பெருமானார் சொல்லவில்லை. வாச்சியார்த்தம் என சொல்லி விளக்கபட்டு இருப்பது “ஜோதி” என்றால் “ அறிவு’ என பொருள்...பெரும் ஜோதி என்றால் பேரறிவு என பொருள். இதை சற்ரு ஆழமாக சன்மார்க்க அன்பர்கள் புரிந்து பயனடையவேண்டுகிறேன். அடுத்து பெருமானார் விளக்குவது என்னவென்றால் “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெற்று கொள்வதில் தடை இல்லை”...இது ஏன் சொல்லுகிறார் என்றால் இங்கு ஒரு சாதனை மறைவாக சொல்லபட்டிருக்கிறது...அதனையே "இவ்வண்னம் சாதனம் முதிர்ந்தால்” என அடி கோடிட்டு பெருமானார் சொல்லுகிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டுகிறேன். மேலும் அந்த சாதனை என்பது எவ்வண்னம் இருக்க வேண்டும் என்பதற்க்கு சான்றாக பெருமானார் காட்டிதருவது "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்" என்னும் பிரமாணத்தால் உணர்க.”””” என்பதுவாகும். இதை அரிந்து கொள்ளுதல் சன்மார்க்க அன்பர்களுக்கு முடிவான இன்ப அனுபவத்தை பெற்று கொள்வதில் “ பெருந்தோணியாக” இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளவேண்டாம். நன்றி: "திரு" . ரியான் அய்யா அவர்கள் பெருமானார் ஞானசபையில் கண்ணாடியும் விளக்கும் வைத்த காரணமுறை. தியானம் செய்யவேண்டுமானால் ஏதாவது ஓர் உருவத்தை தியானிக்கவேண்டும் என வள்ளலார் கூறுகிறார். “நிஷ்களங்கமாயிருக்கபடாது” என வள்ளலார் கட்டளையிடுகிறார். உருவம் இருக்க வேண்டும் என பெருமானார் சொல்கிறார். உருவம் கரைந்து அருவமாகும் என சொல்லி போயிருக்கிறார், அதெப்படி கல்லை பார்த்து தியானிச்சுகிட்டு வந்தா கல் கரைஞ்சு போயிரும்ணா அவர் சொல்கிறார்?... அப்படியாக இருக்குமோ அதன் பொருள்??..கொஞ்சம் ஆலோசிங்கப்பா... ஆலோசிங்க... கடவுள் மண்டையில புத்திய உபயோகப்படுத்தத்தானே தந்திருக்கார்... அப்படித்தானே... அல்லாம சும்மா ”மலட்டு கற்பம்” சுமந்துகிட்டு பிரசவத்துக்கு காத்திருக்கவா?.. மலட்டு கற்பம் பிரசவ்க்குமா?...இல்லியே... """""""பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்."""""" இதை அருமையா கவனிச்சு புத்திய தெளிய வையுங்க... இல்லைண்ணா அடிச்சு துவைச்சு வெயில காய போடுங்க, கொஞ்சம் அழுக்கு போகட்டும்... எதை பார்க்கணும்ணு தனக்குத்தானே கேட்டுப்பாருங்க, பார்க்கப்படும் பொருள் எப்படி கெடும் எனவும் ஆலோசிச்சு பாருங்க. அறிவிருந்தா தப்புவீங்க.. இல்லைண்ணா அலகைதான்...... நன்றி: திரு. ரியான் அய்யா அவர்கள்

வித்தைகளினால் மோட்சம் கிடைக்காது

Sunday, July 7, 2019 வித்தைகளினால் மோட்சம் கிடைக்காது எந்த வித்தைகள் செய்தாலும் அது ஞானத்தை கொடுக்கும் என அறுதியிட்டு கூற முடியாது, ஏனெனில் வித்தைகளினால் மோட்சம் கிடைக்காது. மனமே மகா சாகரத்தில் சிக்கி தவிக்கிறது, அந்த மனதுக்கு தான் மருந்து தேவை. அது ஆழமான புரிதலிலே தான் கலக்கங்கள் மறைந்து சித்தம் பிரகாசிக்கின்றது. அதை விடுத்து கடினமாக இரவும் பகலும் எதையோ செய்வதினால் ஞானம் வராது. ஞானம் செய்வதினால் வருவது அல்ல. பலவிதமான வித்தைகள் உன்னிடம் வந்து செல்லும், அதை நீ செய்யத்தான் வேண்டும், செய்து செய்து ஒரு கனத்தில் உனக்குள் ஒரு புரிதல் சட்டென மலரும், இப்படியல்ல இந்த வித்தையை பண்ணுவது என. அப்பொழுது நீ உருமாற்றம் பெற்றுவிட்டாய். உன்னுடைய குரு நீ எந்த இலக்கினை அடையவேண்டும் என நிர்ணயித்து ஒரு வித்தையினை பயன்பாட்டில் வைத்தாரோ அந்த பயன்பாட்டின் எல்லையினை நீ புரிந்து கொள்வாய். இல்லையெனில் ஆயிரம் வருடம் ஆனாலும் அந்த எல்லையினுள் நீ பிரவேசிக்க மாட்டாய். நீ அந்த வித்தையினை கடந்து அதீதமான புரிதல் கொண்டு விட்டாய் என்பதை உன் ஆழ்நிலை உனக்கு அறிவுறுத்தும், ஆனால் வெளி உலகத்துக்கு நீ சொல்லுவது ஒன்றும் புரியாது. நீ விளக்கினாலும் அவர்களால் அதை புரியமுடியாது..அது தான் ஞானத்தின் தன்மை. ஞானம் ஏன்பது ஒன்றே ஒன்று தான் என நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எல்லா நிலைகளும் பலவிதமான பரிணாம தோற்ற நிலைகளுக்கு உயர்நிலைகளுக்கு உட்பட்டதே. இப்படி அனேகம் ஞானநிலைகள் கொண்டதே பயனம். அதில் பலதும் வந்து போகும், பயனம் முடிவற்றது, மலர்தல் முடிவற்றது, இதை புரிந்துகொண்டவன் பயணத்துக்கு தயாராகவே எப்போதும் இருப்பான், உருமாற்றத்துக்கு தயாராகவே இருப்பான். எல்லாம் முடிந்தது, நான் கடைசி எல்லையில் வந்து விட்டேன், கடைசி உயர் ஞானத்தின் விளிம்பில் வந்து விட்டேன் எனும் மட்டமான நிலை அவனிடம் இருக்காது. அது தான் உண்மையான ஆழம், மென்மையான ஆழம் குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்... இல்லாவிட்டால் சாதனை இருக்காது.... இதுவெல்லாம் மாயாஜாலமே... சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்தி கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்ண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,.. ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்..... மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தில் வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான்..உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான். ~ திரு. ரியான்

விந்து நிலை

விந்து நிலை தாயின் கருமுட்டை ஒரு சின்ன மாமிசம் இரத்தம் கலந்த ஒரு உருண்டையாக தானே இருக்கும் அல்லவா? அதுபோலத்தான் மிருகங்களுக்கும் இதே போன்ற ஒரு மாமிச ரெத்த கலவை தானே இருக்கும் அல்லவா? முட்டைக்குகூட மாமிச ரெத்த கலவையான ஒரு சின்ன உருண்டை தானே இருக்கிரது, அல்லவா?. அப்ப ஒரே மாதிரியான மாமிச ரெத்த கலவையான கருமுட்டை வளரும் போது எப்படி மனிதனாகவும், மிருகமாகவும், பறவையாகவும் மாறுகின்றது

பிரம்மம் என்பது குரு தான்...

பிரம்மம் என்பது குரு தான்....பிரம்மத்தை ஒருவன் தரிசிப்பது குருவின் ஊடாக தான்..ஏனெனில் பிரம்ம சொரூபியாக மலர்ந்திருப்பது குருவே. ஆகையினால் தான் என்னை கண்டவன் என் பிதைவையும் கண்டிருக்கிறான் நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என கிறிஸ்து சொல்கின்றார்