Tuesday, November 29, 2022
முச்சந்தி - சுழுமுனை - கபாலம்
முச்சந்தி - சுழுமுனை - கபாலம்
இரண்டு கண்களும் மூக்கும் சரியாக செங்குத்து கோணத்தில் சந்திக்கும் இடமே சுழுமுனை எனும் ‘பாலம்’.இந்த பாலத்தினுள் தான் ‘க’ எனும் பரமான்மா உறைவிடம்.அதனால் இது கபாலம் என்றாயிற்று.’முச்சந்தி’ என்பதும் இவ்விடம் தான்.
மனமானது இவ்விடத்தில் நிலை கொள்ள அச்சணமே வலது இடது நாசிகளின் ஊடான இயக்கம் மேல்முகப்படும் என்பது அனுபவ உண்மை..
கொஞ்சம் பக்கத்துல வாசி வாசிக்க வந்திருக்கோம்ண்ணு தோணுது...அப்புறம் பார்ப்போம் வாசிக்கறது எப்படீண்ணு.
Mathi “விருத்தமா மனாதிபிரா ரத்வ கர்மம்;
விடயாதிப்ர சஞ்சவீட் டுமங்க ளெல்லாம்
ஒறுத்தவனே யோகியென்பா னவனா ரூடன்
உலகமெலாந் தானவ துண்மை யாகும்;
நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா
நிலைபுருவ மத்தியிலே நிட்ட னாகிக்
கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே."
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்
பரிதிமதி யுதயமெனப் பளிங்கா காசம்
தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்
சாக்கிரத்தி னடையாளந் தாக்கிப் பாரு;
சேர்ப்பதற்குச் சுழுமுனையென் றிதற்கு நாமம்;
திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்;
காப்பதற்கு நடுநாடி யூடே சென்று
கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே.
கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்
கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்;
விண்ணான பெருவெளிக்கு ளீன மானால்
விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்;
ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை
உபதேசம் பெற்றவர்க்கே உண்மை யாகும்;
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்?
அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே;”
இவ்வாறாக புசுண்டர் பிரானும்
பெரிய வித்தை எது தெரியுமா?
பெரிய வித்தை எது தெரியுமா?
ஆன்மீக வாழ்கையில் பல படிகள் கடந்து எங்குமே அடையாமல் வீணாக செத்து தொலையும் மக்களை அனேகம் காண்கிறோம். வள்ளலார் சில இடங்களில் சொல்லி வருகிறார், சின்ன ஒளியை கண்டு ஏமாந்து பெரிய ஞனிகளாக வலம் வருபவர்கள் ஏராளமாக காண்கிறோம்.ஆனால் பெரியதாக இருக்கிற வித்தையை நாம் நிச்சயம் கண்டிருக்க வேண்டும். நிச்சயம் நமுக்கு அது பெருந்துணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
வித்தைகளுக்கு எல்லாம் ராஜ வித்தை என்பது தன்னை காப்பதுவாகும். தன்னை காப்பது என்பது தன்னை வெளிக்காட்டாமல் இருப்பது ஆகும். தன்னை வெளிகாட்டாமல் இருப்பது என்பது தன்னடக்கம் ஆகும். தன்னடக்கம் என்பது வீண் கர்வம் கொள்ளாதிருத்தலே ஆகும்.
உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் "வித்தை பெருமை", அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம்.
யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் "தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை.இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை.
சுவாசம் ஓடும் கணக்கு
சுவாசம் ஓடும் கணக்கு
கடைசி னேரத்தில் னோயாளிக்கு பிராணவாயுவை குழாய் மூலமாக டாக்டர்கள் செலுத்துவதைப் பற்றி சபையில் வினவிய போது, ஆண்டவர்கள் -
சுவாசம் எப்படி ஓடுகிறதென்று உனக்குத் தெரியுமா? தெரியாது - தாவர வர்க்கத்தை எடுத்துக்கொள்வோம் - ஒரு மாதத்திற்குத் தண்ணீர் ஊற்றினால், எங்ஙு தளிர்க்கும், எப்போது அழியும் என்று உனக்குச் சொல்லத் தெரியுமா? இறைவனின் கஜானாவிலிருந்நு வெளியானாலன்றி அது உனக்கு விளங்ஙாது - னகம் எப்படி வளருகிறது? ரோமம் எப்படி உண்டாகிறது? ரோமத்தின் அடிப்பாகத்தில் கிழங்ஙு இருக்கிறது - அதை ஒட்டிய ஒரு பொருள் கறுப்பு ரோமத்தைத் தள்ளுகிறது - எந்ந அனலான காப்பைக் கொண்டு கருப்பாக ஆகுது? பின் எப்படி வெளுப்பாக மாறுகிறது? இதைப் பற்றிக் கூடத் தெரியாவிட்டால் உன் படிப்பின் தரம் தான் என்ன? இந்ந னினைப்பாவது உனக்கு வருமா? ஒரு வித்திற்குள் னுழைந்நு அதன் அகண்ட விரிப்பை னுணுகி னுணுகிப் பார்க்கும் தகுதி வந்நாலன்றி இது தெரியாது.
மனித உடலில் சுவாசம் ஓடும் கணக்கு ஒன்று இருக்கிறது - அதாவது மாமிசத்தின் உஷ்ணம் ஒரு பங்ஙும், அதைப் போல் இரண்டு பங்ஙு ரத்தத்தின் உஷ்ணமும், அதைப் போல இரண்டு பங்ஙு னரம்பின் உஷ்ணமும் உண்டு - இவை மூன்றும் சரியாக இருந்நால்தான் சுவாசம் ஓடும் - ஏதாவது ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் சரியாக ஓடாது - இப்படியிருக்க இவனாக பிராணவாயுவை ஏற்றினால் என்ன பிரயோசனம் - உள்ளே வாங்ஙும் கருவியின் மூன்று பாகங்ஙளும் இருக்க வேண்டியபடி இருந்நால் தானே வாங்ஙும்? இல்லாவிடில் கருக்கரிவாள் போட்டு அறுக்கும் வாதனையாக இருக்குமே - பட்ட மரத்திற்குத் தண்ணீருற்றி, மேலே தழைக்கிறதா என்று அண்ணாந்நு பார்ப்பவன் செயல்போல்தானிருக்கும் - மேற்கொண்டு அது மொய், மொய்யென்று அழுகுவதால் கொடூரமான வாதையையே உண்டாக்கும்.
இதை அறிந்நால், பூலோகத்தின் எடை எவ்வளவு என்று அறிவது போல இருக்கும் - அனைத்தையும் உண்டாக்கிய காலவரம்பின் எடை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டது போல இருக்கும் - இது யாருக்கு விளங்ஙும்? ஓடுகிற ஓட்டத்தை, (சுவாசத்தை) னிறுத்தி வைப்பவருக்கல்லவா தெரியும்? இதை னாம் வெளியாக்கினாலொழிய உலகத்திற்குத் தெரியாது.
--- சாலை ஆண்டவர்கள்
ரியான் சத்விசாரம்
ரியான் சத்விசாரம்
Home Facebook Page ▼
Friday, November 23, 2018
பிரம்ம வித்தை எனும் உஜூது
“பாய்மன வீட்டிற் பேய்குடி யிருக்கும்
பேரறி வடிமையங் ஙாகும்
வாயினில் னாயும் னாசியில் வண்டும்
மதுசெவி தனில்விஷப் பாம்பும்
ஈயணைந் நிடும்கண் ணீபுலீசன் வீடா
மிப்படிக் கென்றுனீ தெளிந்து
பாய்வாசி முனைகால் வழிகண்டு செவ்வேட்
பதிபுரு வத்திடை யடிகீழ்
வாசிகா லுச்சி கண்டத்தின் வழியாய்
ஊசியின் தமர்வழி யோடிப்
பேசரு மூளை மண்டலக் குகைமேல்
பெலஞானக் கண்ணொன் றங்கிருந்நு
வாசனை கேள்வி யிருகண்வா யெவைக்கும்
வல்லமை யளிக்குமக் கண்ணே
ஈசன்றன் னிருப்பும் ரவிகோடி வீசும்
இருதய மலர்விரிந் தெழும்பும்“”
(ஸ்ரீ வித்துனாயகம் பிரம்மபிரகாச சாலை ”ஆண்”தவர்கள் அவர்கள்)
ஆண்குரு அவர்களே இதை மெய்வழியென இயம்ப நீயோ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய் மகனே?
பார்! உனை சுற்றி!!
பிரம்மபிரகாசத்தின் கிரணவீச்சு தெளிய மெய்யை விளம்புவர்களை காண்கிறாயா என்ன?
பார்!உனை சுற்றி!!
உன் பாய்மன வீட்டில் பேயலவோ குடியேறி நிற்கிறது என அறியிலயோ?
பார்!உனை சுற்றி!!
உன் வாயினில் நாயல்லாவோ குரைக்கிறது என தெளிவதெப்போது?
பார்!உனை சுற்றி!!
உன் அறிவு பன்றியை பற்றி நிற்கின்றதே அறிவு எதை தின்னும்?
பார்!உனை சுற்றி!!
உஜூது நடைகாண ஈயில்லா கண் தேடே கண்டம் கரயேறாயோ?
பார்!உனை சுற்றி!!
நாதனாதாந்த தொனி கேட்க உன் செவியில் விஷபாம்பு அறியாயோ?
பார்!உனை சுற்றி!!
பார்க்க பார்க்க ஈயெல்லாம் போயே வண்டது தான் மடியுமே!
குருவின் வேலை
குருவின் வேலை ஒரு சீடனை பரமபதத்திற்கு ஏற்றும் வரை உள்ளது.இக்கடத்தை நீக்கி அக்கடத்துள் ஆக்கும் செயல் அவர்களுடைய கையில்தான் உள்ளது.அவர்களே வழியும் அவர்களே சத்தியமும் அவர்களே நம்முள் ஜீவனுமாக உள்ளார்கள்.அவரே பரமாத்மா நாம் அனைவரும் ஜீவாத்மா
குருவே கண் கண்ட தெய்வம்
ஈசனோ அரூபத்தில் உள்ளதால் இந்த ஊனக் கண்கள் கொண்டு காண இயலாது.அந்த ஈசனே ரூபம் தங்கி மானிட பிறப்பெய்து வரும் பொழுது அவரை சற்குரு என்றழைப்பதுண்டு.அவர் லோகத்திற்கு ஒருவர்தான் என்பதனால் லோக குரு என்றும் சொல்வதுண்டு
உஜூது
உஜூது எனும் பிரம்மவித்தை தெரிந்தவனே இதை பதில் சொல்ல தெரிந்தவன். நாசிக்கு வெளியே துண்டாடாமல் நடாத்துவது ,கலை சிறுக்காமல் கவனம் பாய்வது,காரண அக்கினிக்கு பங்கம் வராமல் பாதுகாப்பது ,சுத்த உஷ்ணம் பெருக்கும் வழிமுறை அறிந்து நடப்பது இவ்விதம் பழக்கமே புண்ணியம்.
== திரு. ரியான் அய்யா
ஆன்மிகம் என்பது?
ஆன்மிகம் என்பது?
ஆன்மிகம் என்பது ஆன்மாவை புடம் போட்டு எடுக்கிறது... அல்லாம ஏதோ ஒரு சாதனை சொல்லகேட்டு பண்ணிகிட்டு இருப்பதல்ல....
தன்னுக்குள்ள இருக்கிற ஒவ்வொரு விஷயங்களையும் வெளிகொணர்ந்து பார்த்து அதை புடம் போட தெரியணும்... அப்படித்தான் ஆன்ம இயல்பு உண்டாகும்..... இல்லாம இருந்தா சமூகத்தின் நிழல் தான் ஆன்மாவாக இருக்கும்.
"தனித்துவம் வரவேண்டுமெனில் பல விஷயங்களை இழக்க துணிவு வேண்டும்.... தன்னை இழக்கும் போதே தன்னை அறியமுடியும்
மந்திர வாசம்
மந்திர வாசம்
மந்திரம் மனதை மயக்குமா சொப்பனசுந்தரியே...!!!
சுவாசம் என்றால் சு+வாசம்; சு-மந்திரம் வாசம்-மணம்; ஆக சுவாசம் என்றால் மந்திர மணம்.
இங்க இருக்கிறவங்களுக்கும் அங்க இருக்கிறவங்களுக்கும் சுவாசமும் இல்ல மூச்சும் இல்லை.இவனுக்கு ரெண்டும் தெரியாது.
------------ (சாலை ஆண் குரு)
மூக்கறிவு வளர - செவியறிவு வளரும். செவியறிவு வளர - ஜீவ அறிவு வளரும். ஜீவ அறிவு வளரவளர - மெய் அறிவுப் பயன் கைகுலுக்கப்பெறும்
மூக்குமுனை - நடுமூக்கு - சுழிமுனை
மூக்குமுனை - நடுமூக்கு - சுழிமுனை
மூக்கில் இருக்கிற வளைவு இல்லையென்றால் உனக்கு ஞானம் இல்லை என்பது உனக்கு தெரியுமா என்றால் தெரியாது. -- சாலை ஆண்டவர் அவர்கள்
மூக்குமுனையை முழித்திருந்து பாராமல் ஆக்கை கெட்டு அறிவழிந்தேன் பூரணமே...
"நாட்டமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில். வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை. ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை. தேட்டமுமில்லை சிவனவனாமே".
பார்க்குஞ் சுழிமுனை காணாரே அது
மூக்கு நுனி என்று அறியாரே
மூக்கு இல்லைண்ணா சித்தனுக்கு ஞானம் எங்கே?
புத்தனுக்கு ஞானம் எங்கே?
ததா+கதா
ததா + கதா
"ததா+கதா’’ என்பது இரு வேர் சொல் கூட்டு, "ததா" என்றால் அவ்வண்ணம், அங்ஙனம், அதன்படி என பொருள்படும், "கதா" என்பது அசைவு,நடத்தல், முன்னேறுதல், வெளிப்படுதல் என பொருள். இதில் ‘ததா’ என்பதில் அவ்வண்னம் என சொல்வதில் இருந்து மற்றொன்றை புரிந்து அதன் படி நடப்பவர் என பொருள். “அந்த" மற்றொன்று எதுவெனில்....”””””இவ்வுலகத்திலும், இது போன்று அனேகம் கோடி பிரபஞ்ச கூட்டத்து விண்கூட்ட சங்கமத்துள் திகழும் அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வனைத்திலும் பிறந்து மறைந்து போன அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வுலகத்திலும் மற்றை இவ்வனைத்திலும் பிறக்க இருக்கும் அனைத்து சீவசாலங்களும் ”பரநிர்வாணம்” அடையும் பொருட்டு வர்த்திப்பவர்,என பொருள்.நம்முடைய சாதனை, தியானம், யோகம்,பிரார்த்தனை, செயல் ,கர்மம், வினை போக்கு, வேள்வி, தானம்,தர்மம் என அனைத்தும் இவ்வனைத்து சீவசாலங்கள் உய்யும் பொருட்டு சதா "வழங்கி கொண்டு” இருக்க ‘தான்" அற்று பரநிர்வாணம் சித்திக்கும்
Subscribe to:
Posts (Atom)