Friday, November 25, 2022
பிராணன்
பிராணன் மனதை தாய்ப்போல் காக்கிறது.
விழிப்பு நேரத்தில் குழந்தையாகிய மனதை இந்திரியங்களோடு விளையாட விடுகிறாள்.
அந்திப்பொழுது ஆனதும் மனதை உள்ளே இழுத்துத் தூங்கப் பண்ண முயற்சி செய்கிறாள்
மனது தன நண்பர்களாகிய பஞ்சேந்திரியங்கள் இல்லாமல் தனக்குதானே விளையாடிக் கொள்கிறது.
பிறகு இதயத்துக்குள்ளே இழுத்து மடியிற்போட்டு தூங்கப் பண்ணுகிறாள். இங்கே சித்தாக இருந்து கொண்டு மனம் சுகத்தை அனுபவிக்கிறது.
பிராணன் விழித்துக் கொண்டிருந்து குழந்தையாகிய மனதின் விளையாட்டு சாமான்களாகிய உடலையும், ஞாபக சக்தியையும், புத்தியையும், அகங்காரத்தையும், ஜாக்கிரதையாய் வைத்துக் கொண்டு விழித்தவுடன் அதனிடம் கொடுத்து விடுகிறது
மனம்=அறிவு
மனமும் வாசியும் சேர்ந்தே இருக்கின்றன...மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு...மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை....மன்மனதுள்ளே மனோலயமாமே ...என மூலர் சொல்லுவார்.....அதை கருத்தில் கொள்ளவேண்டும்.....நாகத்தை மனம் பார்த்த உடனேயே பிராணன் வெடிப்பது இதனாலேயே....நம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்......இப்படி இருப்பதில் மனம் அடங்கில் பிராணன் அடங்கும், பிராணன் அடங்கில் மனமும் அடங்கும்...மனத்தை அடக்கி அறிவுடன் சேர்ப்பது தோத்திர ,தியான சம்பிரதாயங்கள்...பிராணனை அடக்கி அறிவுடன் சேர்ப்பது பிராணாயாம சம்பிரதாயங்கள்...முடிவு ஒன்றே...வழிமுறை வேறு வேறு....சாதகனின் அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் குருவினுடைய அறிவு விருத்திக்கு ஏற்ப்பவும் சாதனை சம்பிரதாயம் அமையும்...
நன்றி: ரியான் அய்யா
இப்படி அகார ஜீவனை உகார ஜீவனோடு சேர்ப்பதே யோக என்பார்கள்....கீழ்முகமான அகாரஜீவனை மேல்முகமான உகார ஜீவனோடு சேர்த்து மகாரமான பிரம்ம ரந்திரத்தில் தானாகி தன்மயமாஇ இருப்பதே யோகமுடிபு.
பிறவி வரும் முன்னே அறிவில்லாமல் இருந்தது..பிறவியினால் அறிவுக்கு ஆதாரமான தூலம் வந்தது..நன்மையை தீமையும் அறியபடுகின்றது...சொர்க்கமும் நரகமும் அறியபடுகின்றது..இருளும் வெளிச்சமும் அறியபடுகின்றது..ஆன்மவும் பிரபஞ்சமும் அறியபடுகின்றது. தூலமில்லையேல் அறிவு விளக்கத்துக்கு வராது.இந்த தூலம் கிடைக்க வேண்டும் எனும் எண்ணத்துடனே தான் மும்மூர்த்திகள் கூட கோடி காலம் தவம் கொண்டுள்ளனர் போலும் என சொல்வர்.முக்திக்கு ஆதாரம் தூலமே தான். எவ்வுலகத்து ஜீவர்களுக்கும் முக்தி அடைய தூலம் புகுந்தே ஆக வேண்டும்
ஆனால் வள்ளலாரோ மீண்டும் சொல்லுவது என்னவென்றால்,” ஆன்மா தனித்திருக்கும் ஜீவன் மன முதலியு அந்தகரணங்களின் மத்தியில் இருக்கும்” என்பதல்லவா?..அப்போது தெரிவது என்னவென்றால் தனித்து இருக்கின்ற ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து செயல்படும்போது அது ஜீவான்மா எனவும் , அதே போல அந்த ஆன்மாவானது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருக்கின்றபோது அது பரமான்மா எனவும் எனவும் கொள்லப்படுகிறது. அல்லவா?.
ஆனால் நமக்கு ஆன்மாவானது கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு அல்லவா ஆன்மாவானது சேர்ந்து இருக்கிறது?...அல்லாது புருவமத்தியில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்து இருப்பதில்லையே?..அப்படித்தானே?..ஆகையினால் தானே கண்டத்தில் இருக்கின்ற ஜீவனோடு சேர்ந்துிருக்கும் நாம் கண்ட ஜீவன் இறந்து போகும் போது இறந்து போகின்றோம்?..சரிதானே?..
நன்றி: ரியான் அய்யா
ஆகையினால் கண்டத்தில் இருக்கின்ற ஜீவன் இறந்து போகாமல் இருப்பின் நாமும் இறந்து போகாமல் இருக்கலாமல்லவா?..அதற்க்கு நாம் செய்யவேண்டியது என்னவென்றால் கண்டத்து ஜீவனை புருவமத்தியில் இருக்கும் ஜீவனோடு சேர்ப்பது என்பதல்லவா?..சாகாதிருப்பது தானே சன்மார்க்கம்?..செத்துப்போவது சன்மார்க்கமாகாதே.....ஆகையினால் செத்துப்போகும் ஜீவனை செத்துப்போகாமல் செய்வது தானே சுத்த சன்மார்க்கம் ?...அதனால் கண்டத்து ஜீவனை புருவமத்திக்கு கொண்டு செல்வோம் தக்க ஆசான் துணையுடன். வாழ்க வள்ளலார் மலரடி.
நன்றி: ரியான் அய்யா
மனதினால் செய்யப்படும் தியானம்... பிணத்தை சுட மீண்டும் பிணத்தையே நாடுகிறீர்கள்.
மனத்தை கொண்டு மனத்தால் விளைந்த உடம்பை சுட வேண்டும் என்கிறீர்கள்,
மரத்தினால் செய்த கோடாரி எங்காவது மரத்தை வெட்டுமா...?
-நன்றி: ரியான் அய்யா
தூலம் சூக்குமம் காரணம் என சொல்லபடும் உடல் மூன்றும் மனம் அல்ல.ஆனால் மனம் இவற்றில் வியாபகம்.. விஸ்வ தைஜச, ப்ராக்ஜ எனும் நாமதேயத்தால்
நான்’ ..’நான்’ என எது அறியபடுகிறதோ அது மனமே மனதை அறிய மனதால் சுட்டிகாட்டப்படும் வஸ்த்து வித்தான ஆன்மா
வியவகாரத்தில் மனம் எனவும் அந்தரங்கத்தில் ‘நான்’ எனவும் இருவாக பிளந்து நிற்பது எதுவோ அதுவே ஒன்றான ஆன்மம்..இவ்விரு ரூபம் ஒன்றாக இரண்டற்ற சொரூபம் மனதுக்கும் அப்பாற்பட்டு ‘நன்’னுக்கும் அப்பாற்பட்டு நிற்கிறது என கொள்ளலாம்
ஆதியில் வார்த்தை
ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது, அவர் ஆதியில் தேவனோடிருந்தார், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை, அவருக்குள் ஜீவன்
இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது, அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கின்றது, இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை, ஆதிமுதல் இருந்ததும்,நாங்கள் கேட்டதும் எங்கள் கண்களினால் கண்டதும்,நாங்கள் நோக்கி பார்த்ததும், எங்கள் கைகளினால்
தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையை குறித்து அறிவிக்கின்றோம், அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்தில் இருந்ததும்,எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமான அந்த ஜீவனை நாங்கள் கண்டு,அதை குறித்து அறிவிக்கின்றோம். உலகத்திலே வந்த எந்த
மனுஷனேயும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார்,உலகமோ அவர் மூலமாய் உண்டாயிற்று,ஆனால் உலகமோ அவரை அறியவில்லை.எத்தனை பேர்கள் அந்த வார்த்தையை பெற்றுக்கொண்டார்களோ அத்தனை பேரும்
தேவனுடைய பிள்ளைகள் ஆவார்கள்.-(பைபிள்
நடுக்கண்
நடுக்கண் - 1
பிண்டத்திற்க்கு மத்தியாக உயிர்ப்பு எனும் ஜீவன் இருக்கிறது... அதுபோல அண்டத்திற்க்கு மத்தியாக அறிவு எனும் ஜீவன் இருக்கிறது... ஒன்று செத்து போகும் மற்ரையது சாகாது.... அப்படி அண்டத்திற்க்கு மத்தியாக....கண்ணாக இருப்பதே அறிவெனும் “திரு”......
அதுவே நடுக்கண்... அதுவே திருக்கோயில்...அதயே திறந்து கொள்ளவேண்டும்... அதற்க்கு தக்க ஆசாரியன் அருள் வேண்டும்...அல்லாது கண்ணை திரு திரு என முழித்துகொண்டு இருந்தால் திறக்காது.... அறிவை அடைந்தவர்கள் கருணை வேண்டும்.
“கண்ணை முழித்து கொண்டு உணர்வை வருவித்து கொண்டிருந்தால் கண்மணி மத்தியில் உணர்வு மட்டும் தான் இருக்கும்”...ஒளி இருக்காது... ஏனெனில் நீங்கள் “உணர்வை" மட்டும் தான் கவனித்து கொண்டிருக்கிறீர்கள்... ஒளியை அல்ல...அதை கவனிக்க உங்களுக்கு தெரியாது..... உணர்வு என்பது மனமும் பிராணனும் ஒரு இடத்தில் குவிவதால் ஏற்படும் உணர்வாகும். அது ஜீவ ஒளி அல்ல. அதற்க்கு உதாகரணம் என்பது நீங்கள் தூங்கி கொண்டிருக்கும் போது நீங்கள் கண்மணியில் உணர்வை அறிவதில்லை... ஏனெனில் மனம் இல்லாதிருப்பதனாலேயே. மனம் எங்கிருக்குமோ அங்கு பிராணன் இருக்கும்.உடம்பில் எந்த இடத்தில் மனதை ஒருமுக படுத்தினாலும் இந்த உணர்வு இருக்கும்.ஆனால் ஒளி என்பது விஷயம் வேறு...அது கண்டுகொண்டால் ஒழிய புரியாது.
அருள் நிலை சாதனைகள் என்பது மூக்கின் ஊடே சரிக்கும் வாயுவினை கொண்டோ, கண்களில் ஒளிரும் ஜீவ கலைகலைகொண்டோ ஏனைய ஆதார சக்கர அனுஷ்ட்டான அனுபவ அனுபோக சாத்திய நிலைகளில் முயற்ச்சிகளினால் வருவது இல்லை.
வெளிமுயற்ச்சியின்றி அருள்நிலை சாதனைகலெனும் ஆன்ம சாதனைகலால் வருவதாகும்.....அதற்க்கு “அறிவே ஆதாரம்”...வேறு புற கருவிகளோ கரணங்களோ தேவை இல்லை
குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்
ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்
சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்
ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்
இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்
ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது
ஆன்மாக்களே நம்மை சுற்றி மாயை இருக்கிறது
அன்பு ஆன்மாக்களே, நம்மை சுற்றி மாயை இருக்கிறது , நாம் மாயையில் சுற்றி உழன்று கொண்டிருக்கிறோம்... ஆனால் எல்லோரும் ஏதாவது சாதனைகள் சொல்லகேட்டு செய்துகொண்டிருக்கிறோம்.... நம்முடைய நம்பிக்கை என்பது அந்த சாதனையினிலே குடி கொண்டிருக்கிறது... அந்த சாதனையானது ஏதோ ஒரு குருவினிடத்தில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையினால் கட்டப்பட்டுள்ளது.
குருவை நம்பும் வரை சாதனை இருக்கும்... இல்லாவிட்டால் சாதனை இருக்காது.... இதுவெல்லாம் மாயாஜாலமே... சாதனை என்பது மாயாஜாலமே... சாதனையே உண்மை என நாம் மாயாஜாலமாக நம்பிகொண்டிருக்கிறோம்... அதனால் நிகழ்வது மாபெரும் விபத்து என்பதை கவனிக்க தவறி விடுகிறோம். அது என்னவென்றால், எந்த ஒரு சாதனையும் அந்த சாதனை செய்பவரை வளர்த்து கொண்டிருக்கும், பல அனுபவங்களை கொடுத்து கொண்டிருக்கும், பல சித்திகளை கொடுத்து கொண்டிருக்கும், பல அற்புத செயல்களை வழங்கி கொண்டிருக்கும்... சாதகன் இதில் கட்டுண்டு மேலும் மேலும் சாதனைகளின் தீவிரத்தை கூட்டி கொண்டிருப்பான்.. அதுவே அவனுடைய லட்சியமாக இரவும் பகலுமாக பரிணமிக்கும்.... ஆனால் அவன் கவனிக்க தவறும் ஒரு விஷயம் என்பது அவன் செய்து கொண்டிருப்பது எல்லாம் மாயையின் கட்டுகளுக்குள்ளாகவே... அவன் தன்னை பிறரை விட நன்றாக சாதனை செய்பவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட அதிக சித்திகள் உடையவனாக அறிந்து கொள்ளுவான், அவன் பிறரை விட ஆற்றல் மிகுந்தவனாக மாறி இருப்பதை உணர்ந்து கொள்ளுவான்,..
ஆனால் அவன் உணர்ந்து கொள்ளாத ஒன்று அவனிடம் மேருமலை விட அதிக உயரத்திலும், யானையை விட பெரிய பலத்திலும், சிங்கத்தை விட பெரிய ஆற்றலிலும் அவனிடம் வளர்ந்து அழிக்கமுடியாத அசுர பலத்துடன் கோட்டை கட்டி தகர்க்க முடியாதபடி உருக்கொண்டுவிட்ட “அவன்” அப்போது இருப்பான்.....
மாயாஜால உலகினில் தான் மருந்தும் இருக்கிறது , மறைந்து, அதை அறிந்து உணர்ந்து கொள்ளுபவன் அதன் மகத்துவத்தை அறிந்து உலகத்தை பார்ப்பான்.... உலகத்தில் வேரறுத்து விட்டு எங்கும் ஓடி போகமாட்டான். .உலகம் அவனுக்காக, அவனை பக்குவபடுத்தி கொள்ள வழங்கபட்ட மாமருந்து என அறிவான்... அவனில் குடியிருக்கும் "அவனை" தகர்த்து விடக்கூடிய மகா சஞ்சீவினி என்பதை கண்டு கொள்வான்.
அப்படிப்பட்டவன் உலகத்தின் மாயாஜால வித்தையின்ல் சிக்கி கொள்ளாமல் தனித்து இருப்பான் உலகத்தினுள்ளே... அவனுடைய இருப்பு என்பத அலாதியானதாக இருக்கும்... ஏனையவர்கள் சுழன்று கொண்டிருக்கும் போது ,அவன் அறிந்து கொண்டே சுழன்று கொண்டிருப்பான்.... எப்போதும் “தன்” என்பதை உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்.... அவனிடம் இருக்கும் இருள் அது மட்டுமெ... அதை இந்த உலகத்தில் கரைத்து கொண்டிருப்பான்...அவன் எப்போதும் தன்னை இழந்து கொண்டிருப்பான்... அவனுக்கு அதுவே சாதனை.... கடைசியில் தன்னையே அறியாது போகும் அவத்தைக்கு போவான்.... தான் என்பது இறந்துபோகும்.
வேற்றுமை உணர்வே “நான்” என்பது... வேற்றுமை அற்று போனால் “நான்”..."நீ” என்பது அற்று போகும்... .அப்படி அந்த வேற்றுமையை அறுத்துவிடுவதே சாதனையின் முதல் படி.... அதனையே வள்ளலார் “ஒருமை” என கூறுவார்.... தயவு வருவதற்க்கு அந்த ஒருமை வர வேண்டும் என்பார்.....”ஒருமை” என்பது இருமையின் மரணமே ஆகும்.
தயவு என்பதே அந்த இருமையை வேரறுக்கும் கோடாயுதம், எப்படியெனில் இதையே வள்ளலார் யோகம் என்றும் ஞானம் என்றும் கூறுவார். பசித்த வேறொருவருக்கு பசித்த போது “தனக்கு” பசித்தது போல உணர்வதே யோகம்.. .அப்படி “அந்த பசித்தவர்” பசியாறி திருப்தியின்பத்தை அனுபவிப்பதை காணும் போது தான் அந்த இன்பத்தை அனுபவிப்பதே ஞானம்.... இப்படி "தானும் அவரும்" ஒருமை அடைகின்றனர்.... இப்படியான யோக,, ஞான சாதனையே வள்ளலார் விட்டு சென்ற சாதனை... அப்படி "தான்" என்பதும் "தனக்கு" என்பதும் அற்று "ஒருமை வளரும்".. .ஒருமை வளர வளர இருமை அகலும்... தயவு வர்த்திக்கும்... இதுவே மாமருந்தாக இருக்கும் மாணிக்கமணி. தயவு வர்த்திக்க அருள் உண்டாகும்.
ஸ்தோத்தரித்தல்
ஸ்தோத்தரித்தல்
தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை
அப்படியெனில் இங்கு “இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் “ என குறிப்பிடுவது எதை ஐயா?
மஹாமந்திரம் எதர்க்கு கொடுக்கபட்டுள்ளது?...தயவு தான் சாதனம் எனில் மந்திரம் எதற்க்கு?
கருணை எனும் தயவினால் சுத்த உஷ்ணம் பெருகாதல்லவா?..அதுக்கு சத் விசாரம் தான் காரியமாக இருக்கிறது...ஆனால் அண்ட விசாரமும் பிண்ட விசாரமும் தான் சத்விசாரம் என கருதப்படுகிறது...இவற்றில் இவ்விரண்டு விசாரங்களுமே அபர விசாரங்களெயாம்...அதாவது இகலோக விசாரங்கலே...அப்படியாயின் அண்ட பிண்ட விசாரத்தினால் சுத்த உஷ்ணம் வராது என தெளிகிரது....அப்படியெனில் பரவிசாரம் செய்வது எப்படி?
சுத்த உஷ்ணம் என்பது நாடிகளின் சமநிலையினால் வருவது என எந்த அனுமானத்தால் எடுத்துகொள்ளுவது?...சத் விசாரத்தினால் வருமென்றல்லவா பெருமானார் சொல்லுகிறார்?...அமுதம் என்பது விசாரமல்ல அல்லவா?
”தயவு எனும் கருணையே என்னை தூக்கிவிட்டது”...தூக்கிவிட்டது என சொல்லுவது ஏன் எனில் வேறு ஏதோ சாதனை சம்பிரதாயம் பெருமானாரால் செய்யப்பட்டுள்ளது...அந்த சம்பிரதாயம் உயர் நிலைகளில் அடைய தயவு தூக்கிவிடும் சாதனமாக இருந்தது, இருக்கிறது....அப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும்...அந்த சாதனை என்பது “சத் விசாரம்” எனும் சாதனையேயாகும்..... துரதிஷ்ட்டமாக நாம் இது வரை கேட்டுரிக்கிர சாதனைகள் சத்விசாரம் அல்ல...அவை அண்டவிசாரமும் பிண்ட விசாரமும் மட்டுமேயாகும்...உண்மை சத்விசாரத்தை செயல்படுத்தும் போது தயவு எனும் இயல்பானது “தூக்கி விடும்...அதாவது சாதனை மலரசெய்யும்.....
அதனாலேயே ஜீவகாருண்யமும் சத்விசாரமும் சேர்த்தே வைக்கபட்டிருக்கின்றன.... சத்விசாரம் இல்லத ஜீவகாருண்யம் பூரணமல்ல...அதுபோல ஜீவகாருண்யம் இல்லாத சத்விசாரம் பூரணப்படாது...இவை ரெண்டும் சேர்ந்தே இருக்கின்றன....
நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது. அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
இங்கு “ஸ்தோத்தரித்தும் உண்மை விளங்க வேண்டுமென தெய்வத்தை நினைந்தும் நமது குறையை ஊன்றியும் இடைவிடாது இருத்தலே” சத்விசாரம் என கொள்ளபடுகிறது
இதில் “ஸ்தோத்தரிப்பது” என்பது சன்மார்க்கிகளில் நடைமுறையில் இல்லாமல் இருக்கிறது
இப்படி இருப்பதையே பெருமானார் “நல்ல விசாரணை” என்கிறார்....அதாவது பர விசாரணை என பொருள்
தோத்தரிப்பது என்பது ஜெபிப்பது கிடையாது...இரண்டும் ஒனென நினைந்து கொண்டுள்ளனர்...அப்படி கொள்ளலாகாது.....தோத்தரிப்பதினால் “திருச்செவியேற்றம் “ நடக்கிறது......அதாவது இறைவனின் காதுகளுக்கு எட்டசெய்வதே தோத்திரம்....சதா இறைவனின் திருசெவிக்கு எட்டும் விதம் “ இருப்பதையே தோத்திரம் என்கின்றனர்....அதையே பெருமானாரும் ... “உன் திருசெவிக்கு “ கேட்க்கிறதா..எட்டுகிரதா எனவெல்லாம் வினவுகிரார்
”திருநிலை” என்பார்கள் பெரியோர்கள்.....அதாவது திருவிளங்க சிவயோக சித்தியெலாம் விளங்க என்பார்கள்......நாம் வீட்டில் “திரு விளக்கு “ வைத்திருப்போம்..அதை தினமும் ஏற்றி வழிபடுகிறோம் ...அல்லவா?...அது ஏன் “திரு” எனும் அடைமொழியோடு அழைக்கபடகாரணம்?...
“திரு” என்பது “இறை” என்பதனை குறிக்கும்....திருவிளையாடல் என்றால் இறைவிளையாடல்....அதனாலேயே பெருமானார் தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாக பாவித்து வழிபடசொல்லுகின்றார்....ஆனால் நமக்கு அந்த ‘திரு” விளங்காமல் இருக்கிறது....அப்படி அந்த “திரு” விளங்க சிவயோகசித்தியெலாம் விளங்கும் , என்பது பொருள்
திருவிளக்கை ஏற்றி வைப்பதை தவிர்த்து யாரும் அதை கவனிப்பதில்லை...ஏனெனில் ”திரு” என்பது அனைத்தையும் பார்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் கேட்க்கும் தன்மை உடையது, அனைத்தையும் அறியும் தன்மை உடையது...அதனாலேயே அதனை “பேரறிவு” என வள்ளலார் அருட்பெரும்ஜோதிக்கும் விளக்கம் தருகிறார்.
அப்படி நம் வீட்டில் இருக்கும் “திரு”வானது எல்லாவற்றையும் கேட்டு பார்த்து அறிகிறது என்பதனை நாம் அறியாமல் இருக்கிறோம்.கேட்கிரவர்களுக்கு இது கதை போல தொன்றும்....விளக்காவது கேட்க்கிரதா, பார்க்கிறதா என தர்க்கம் பண்ணுவார்கள்....அவர்களுக்கு “திரு விளக்கம்” இருக்காததினாலேயே அப்படி சொல்லுகிரார்கள்
இப்படி “தோத்திரமானது திருச்செவிக்கு கேட்க்க செய்வதே” சாதனை....சுருங்க சொல்லின், திருவிளக்கானது ஆரம்பகால சாதகர்களுக்கு புரிதல் உண்டாகும் பொருட்டு வைக்கபட்டிருப்பதேயாகும்....கொஞ்சம் தேறினவர்கள் “உண்மை திரு” எனும் இறை அறிவானது நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும், நாம் பேசும் விஷயங்கள் அனைத்தையும், நாம் என அனைத்தையும் அறிபவனாக இருக்கிறான் என்பதேயாகும். இதனையே “திருவிளங்குதல்” என்பார்கள்...
அப்படி நாம் தோத்தரிப்பது திருச்செவிக்கு ஏறும் படியாக , நாம் சொல்லுவதை “அவர்” கேட்க்கின்றார் எனும் “உண்மை நிலை” உடையவர்களுக்கு “அருள் விளக்கம்” உண்டாகும்
அப்படி நாம் சொல்லி கேட்கின்றவரிடம் அன்பு மலர்கிறது...எப்போதும் நம் சொல்லுவதை கேட்கின்றவராக அவர் இருக்கிறார் என்பதனை உணரும் போது அந்த அன்பு மேலும் மலர்கிறது.....இதை தான் “தெய்வத்தை கண்டாலொழிய தெய்வத்தின் மேல் அன்பு வராது” என பெருமானார் சொல்லுகிரார்
கடவுள்”இயற்க்கை உண்மையாக” இருக்கின்றார்...ஆதலினால் அவரிடம் “இயற்கை உண்மை அன்பு வைத்தல் அவசியம்”.....
இதையே, இப்படி “திரு விளங்குதலையே” “பெரும் திறவுகோல்”...என்கிறார் பெருமானார்.....அதை எட்டும் இரண்டு கூட அறிந்து கொள்ள இயலாத நாயிற்கடையேனாகிய தன்னிடம் இறைவன் தந்தனம் என்கிறார்...இது அவருடைய அடிமைபேறு என்பதனை சுட்டுகிறார்....இதை பக்குவம் இல்லாதவர் எட்டும் இரண்டும் தான் பெரும் திறவுகோல் என வள்ளலார் சொல்லி இருப்பதாக பொருள் கொள்கின்றனர்
உண்மை அவர் எல்லாம் கேட்ப்பவராக இருக்கிறார் என்பது உண்மை....நம் தோத்திரம் கேட்க்கும் என்பதில் ஐயம் இல்லை....ஆனாஅல் அவர் கேட்க்கிறார் என நாம் உணர்தலே ஆரம்பம்....அந்த உணர்தல் நமக்கு வரவேண்டும்...அவர் பார்க்கிறார் என உணர வேண்டும்...அவர் கேட்க்கிறார் என உணர வேண்டும்.....இதனையே “வெளிச்சத்திற்க்கு வருதல்” எனபடுகிறது....ஏனையவை இருளில் செய்யபடுபவை
நாம் ஜெபிப்பதும் அவர் காண்கிறார் , அவர் கேட்க்கிரார் எனும் உனருதல் வரும் போது அது ஆன்ம உணர்தல் ஆகிறது...அப்படி வராது போனால் அவையெல்லாம் இந்திரிய ,மன செயல்களாகவே இருக்கும்...
இதையே சித்த வித்தையிலும் சாட்சி என கொள்ளபடுகிறது....சில சம்பிரதாயங்களில் அக்கினி சாட்ச்சி என இதை சொல்லுகிறார்கள்.....இவை எல்லாம் “திரு நிலை விளக்கங்களே”....மறைவாக சொல்லியவற்றை இங்கு தெளிவாக்கி விடுகிறேன்...அவ்வளவுதான் என் வேலை...
ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.
நான் என்பதும் இல்லை
நான் என்பதும் இல்லை இறை என்பதும் இல்லை, இரண்டும் கானல் நீரே. நானும் அவனும் அற்றதே வெட்டவெளியாம் இரண்டற்ற மெய்மை
வெங்காயம் தானுரிக்க வந்திருந்த கதை போல் வந்தாயிங்குனுது இறையென்று கண்டாயோ-கண்டார் கண்ணிருந்தும் காணா கனவினுக்கோர் கண்ணுண்டே வம்பாய் வந்திருப்பார் கண்
தன்னை விட்டு தானல்லாமல் மற்றொன்று இல்லை, எல்லாம் தானே த்ன்மயமே தான்.மற்றை எல்லாம் கற்பனை மனம் தானன்றி பலதாய் கற்பித்து தன்னையே தான் ஏமாற்றி திரிகிறது பொய் மனம்
நான்’ .’நான்’ என ஏதொன்று சதா மனம் கற்பித்துகொண்டிருக்கின்றதோ அது உண்மையில் தானல்ல, அது மனதின் கற்பிதம். நான் இங்கு இல்லவே இல்லை என்பதே மெய்மை.
இரு வேறு கூறு பட்ட மனம் ஒரு கூறை ‘நான்’ எனவும் மற்றைய கூறை எண்ணம்’ எனவும் கற்பித்து எண்ணத்தை காட்டி ‘நான்’ என்பதை வலை பின்னி சிக்க வைத்து தன்னையே தானாக ஏமாற்றிகொண்டிருக்கின்ரது. இதில் இறை என்பதும் இரட்சிப்பு என்பதும் கூட மனதின் கற்பனையே தான்.
அறிவு அறிவு என தமிழ் மொழியிலும்,ஞானம் ஞானம் என வடமொழியாலும் சொல்லபடும் உபாயம் தான் சுத்தவித்தை எனும் ஆறாம் அறிவு. அந்த ‘விளக்கு’ முன் இல்லாமல் பிரயாணம் கூட பொய்
விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.-திருமந்திரம்
ஜீவன்
ஐந்து இந்திரியங்களின் ஊடாக செய்யாத ஒரு அறிவு இருக்கின்றது ஜீ.அதை தான் ஆறாம் அறிவு என்பார்கள் ஞானிகள். பஞ்ச இந்திரிய அறிவுகள் பாழானவை. பிரயோஜன படாதவை.. பஞ்ச இந்திரியங்கள் கொண்டு செய்யும் எந்த செயலை ஞானத்தை காட்டாது.ஆகையினால் பஞ்ச இந்திரியம் கடந்து மனிதன் மட்டும் செயலாற்றகூடிய வித்தையினை கண்டுனருங்கள். அதுவே மெய் சாதனம்.
ஜீவனின் வழி செயலாற்ற வேண்டும் எனில் முதலில் நீங்கள் ஜீவனை அறிந்திருக்க வேண்டும். ஜீவனை தெரியாமல், இருப்பதை அறியாமல் இருப்புக்கு அப்பால் உள்ள பிரம்மத்தை விலக்கி பயனென்னவாம்
ஜீவனை கண்டுவிட்டால், அது நாம் சொல்வது அவன் சொல்வது என பேதம் இருக்காது. உங்களில் என்னில் அனைவரிடத்திலும் இருக்கும் ஜீவனை காட்டித்டருபவரே உண்மையான குரு. அப்படி காணவில்லையெனில் இந்த சென்மத்தில் ஜீவன் தரிசனைக்கு வராது.எந்த பிராணாயாமம் பண்ணினாலும் ஜீவன் அறிவுக்கு வராது. குருவின் திருப்பாதமே சரனாகதி
பெரிய வித்தை எது தெரியுமா?
பெரிய வித்தை எது தெரியுமா?
ஆன்மீக வாழ்கையில் பல படிகள் கடந்து எங்குமே அடையாமல் வீணாக செத்து தொலையும் மக்களை அனேகம் காண்கிறோம். வள்ளலார் சில இடங்களில் சொல்லி வருகிறார், சின்ன ஒளியை கண்டு ஏமாந்து பெரிய ஞனிகளாக வலம் வருபவர்கள் ஏராளமாக காண்கிறோம்.ஆனால் பெரியதாக இருக்கிற வித்தையை நாம் நிச்சயம் கண்டிருக்க வேண்டும். நிச்சயம் நமுக்கு அது பெருந்துணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
வித்தைகளுக்கு எல்லாம் ராஜ வித்தை என்பது தன்னை காப்பதுவாகும். தன்னை காப்பது என்பது தன்னை வெளிக்காட்டாமல் இருப்பது ஆகும். தன்னை வெளிகாட்டாமல் இருப்பது என்பது தன்னடக்கம் ஆகும். தன்னடக்கம் என்பது வீண் கர்வம் கொள்ளாதிருத்தலே ஆகும்.
உலகத்தில் பெரிய வித்தை என்பது நான் பிரம்மாண்டமான ஏதோ வித்தையை பண்ணி கொண்டிருக்கிரேன், மற்று எல்லா வித்தைகளும் என் வித்தைக்கு மட்டமானது எனும் "வித்தை பெருமை", அது எல்லா வித்தை பண்ணுபவர்களுக்கும் வர வாய்ப்பு அதிகம்.
யார் ஒருவருக்கு இப்படியான வித்தை கர்வம் இருக்கிரதோ நிச்சயம் அவர்கள் தனக்கு தானே வேலி கட்டி கொண்டு தன்னந்தனியாக கம்பு சுற்றுபவர்கலே ஆம். அவர்கள் மற்றவர்களை, ஏனைய வித்தைகளை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்லாமலேயே அவை அனைத்தும் தவறு என கங்கணம் கொண்டுவிடுவர். அவர்கள் தன்னை சுற்றி வேலி கட்டி உட்கார்ந்து விடுவதனால் அவர்கள் அந்த வேலிக்கு வெளியே வந்து வெளியில் உலாவி வரும் வித்தைகள் என்னன்ன என்பதை கற்க்க இயலாமல் தனித்து விடுவர். இதன் பரிணாமம் தான் "தன் வித்தை தான் பிரம்மாண்டம்", இதுவே பெரிய வித்தை எனும் தற்பெருமை.இதை வெற்றி கொள்வதே பெரிய வித்தைகளுக்கு எல்லாம் பெரிய வித்தை
பிரம்ம வித்தை எனும் உஜூது
பிரம்ம வித்தை எனும் உஜூது
“பாய்மன வீட்டிற் பேய்குடி யிருக்கும்
பேரறி வடிமையங் ஙாகும்
வாயினில் னாயும் னாசியில் வண்டும்
மதுசெவி தனில்விஷப் பாம்பும்
ஈயணைந் நிடும்கண் ணீபுலீசன் வீடா
மிப்படிக் கென்றுனீ தெளிந்து
பாய்வாசி முனைகால் வழிகண்டு செவ்வேட்
பதிபுரு வத்திடை யடிகீழ்
வாசிகா லுச்சி கண்டத்தின் வழியாய்
ஊசியின் தமர்வழி யோடிப்
பேசரு மூளை மண்டலக் குகைமேல்
பெலஞானக் கண்ணொன் றங்கிருந்நு
வாசனை கேள்வி யிருகண்வா யெவைக்கும்
வல்லமை யளிக்குமக் கண்ணே
ஈசன்றன் னிருப்பும் ரவிகோடி வீசும்
இருதய மலர்விரிந் தெழும்பும்“”
(ஸ்ரீ வித்துனாயகம் பிரம்மபிரகாச சாலை ”ஆண்”தவர்கள் அவர்கள்)
ஆண்குரு அவர்களே இதை மெய்வழியென இயம்ப நீயோ எங்கே சென்றுகொண்டிருக்கிறாய் மகனே?
பார்! உனை சுற்றி!!
பிரம்மபிரகாசத்தின் கிரணவீச்சு தெளிய மெய்யை விளம்புவர்களை காண்கிறாயா என்ன?
பார்!உனை சுற்றி!!
உன் பாய்மன வீட்டில் பேயலவோ குடியேறி நிற்கிறது என அறியிலயோ?
பார்!உனை சுற்றி!!
உன் வாயினில் நாயல்லாவோ குரைக்கிறது என தெளிவதெப்போது?
பார்!உனை சுற்றி!!
உன் அறிவு பன்றியை பற்றி நிற்கின்றதே அறிவு எதை தின்னும்?
பார்!உனை சுற்றி!!
உஜூது நடைகாண ஈயில்லா கண் தேடே கண்டம் கரயேறாயோ?
பார்!உனை சுற்றி!!
நாதனாதாந்த தொனி கேட்க உன் செவியில் விஷபாம்பு அறியாயோ?
பார்!உனை சுற்றி!!
பார்க்க பார்க்க ஈயெல்லாம் போயே வண்டது தான் மடியுமே!
Subscribe to:
Posts (Atom)