Friday, November 25, 2022
ஆன்ம சொரூபமே
ஆன்ம சொரூபமே அன்றி வேறல்ல.அதையே வள்ளலாரும் ஆன்மாவின் பீடம் அக்கினி என்பார், அவ்வக்கினியோ தீர்த்தமாகிய சுக்கிலத்தில் உள்லது. அதுவே இறையாத தீர்த்தம். சுக்கிலம் புட்ப வடிவத்துடன் இருக்கிறது என்பார் வள்ளலார்.அதுவே புருவமத்தியில் பிரகாசிக்கின்றது
விந்து நிலை தனை அறிந்து
விந்து நிலை தனை அறிந்து விந்தைக்காண விதமான நாதமது குருவாய் போகும் என வகுத்தார்.அதாவது விந்துநிலையதாம் மெய்யறிவு பெற நாதநிலையே குருவதாம்.நாத நாதாந்த நிலையே இறையறிவு,அவ்வறிவு இரக்கமுற்று சீவர்கள்பால் கருணையுற்று நாதநிலை கொண்டு உயிரென விளங்கும்.மெய்யென்பது விந்து நிலையுடன் விளங்கும் ஆன்ம அறிவேயாம்,அவ்வான்ம அறிவிற்கு விளக்கம் உண்டாகும்பொருட்டே உயிராணி திருவசனம் நாதநிலையாய் பனிரெண்டு பிரிவாய் விளக்கமுறும்.உயிராணிநாதத்திருவசனத்தின் தூண்டுதலால் மெய்க்கு மெய்யறிவு தோன்றும் அவனருளாலே.அவ்வசனம் ஊடுருவுங்காலே விந்துநிலை விளக்கமுற்று ஒளிபெருகி ஒளிரும்,அவ்வொளியே மெய்யறிவு பகரவும் அமைத்து.மெய் பதினெட்டும் விந்துநிலையதாம்,ஆதலின் அதன்கண் விந்து பதிற்று.(விந்து-புள்ளி
உயிர் வேற மனம் வேற சார்..
உயிர் வேற மனம் வேற சார்... தூங்கி கிடக்கும் போதும் மனம் உடல் முழுக்க வியாபித்திருக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்.. .உயிர் வியாபித்திருப்பதினால் மனம் உணர்ந்த உடன் அந்த உயிரை பற்றி உடல் முழுக்க வியாபிக்கும்... தூக்கத்தில் கூட மனம் செயலாற்றாமல் உயிரை பற்றியே இருக்கும்.....
தூக்கத்தில் “நான்” என்பதுகூட உடல் முழுக்க வியாபிக்காது, ஆனால் உயிர் வியாபித்திருக்கும்... இரண்டும் நிற்பது செயலாற்றுவது வியாபிப்பது இரண்டு இடங்களில் நின்று... அதை தக்க குருமூலம் அறியவும்... பிராணன் உயிரில் நின்று கிளம்பும்... மனம் “நான்” என்பதில் நின்று கிளம்பும்... சரியாக புரியவில்லையெனில் வாழ்நால் முழுக்க குழப்பம் மாறாது. இதுக்குத்தான் சொன்னே படிப்பு பெருசு என
பிரம்மரந்திரம்
பிரம்மரந்திரம் என்பது சிறு துளை என்பதில் சந்தேகம் இல்லை, ஆனால் அதன் புரிதல் சற்று வித்யாசமானது. நமது தந்தை நமுக்கு தானமாக தந்த ஒரு துளி ஜீவ அணுவின் வாசலே பிரம்மரந்திரம். அந்த ஜீவ அணுவின் மெல்லிய வாசலில் இருந்து ஜீவ கலையாம் அக்கினி நமது சுவாசம் வழியாக வெளியேறி கொண்டிருக்கிறது. அப்படி வெளியேறாமல் அதை அக்கினியின் இருப்பிடத்தில் வைத்து பாதுகாப்பது தான் ஊர்த்வகதி.இதை தான் ‘சுக்கில துளியுளே சுரோணிதத்தின் வாசலுள் முச்சதுர பெட்டுளே மூலாதார வரையுளே அச்சமற்ற சவ்வுளே அரியரனுமொன்றுமாய் உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே’ என சிவவாக்கியர் சொல்லுகிறார். உன்னுடைய தந்தை வழங்கிய உயிர்துளியே உனது மூலாதாரம், அது நீ நினைக்கிற பிறப்பு உறுப்பின் அருகாமையில் இருப்பது அல்ல. உச்சரிக்கும் மந்திரத்தின் ஊடாக இயங்கி நிற்பது சுவாசத்தின் மூலமான அக்கினியே. அக்கினி அறுந்து போனால் மரணம். உன் உடல் குளிர்ந்து போகும்
ஆத்மா
ஆத்மா என்னப்பெற்றது இந்த பொய்த்தூலம் கடந்த ஜீவதேகத்திற்கு அப்பாலுள்ள காரண தேகதிலுள்ள ஒரு பொருள்.
தூல தேகத்திலுள்ளவர்களுக்கு செவிப்புலனில் அறிவிக்கிறதென்றால், ஜீவதேகத்திலுள்ள இருட்கோலமாக இருக்கும் “ அசைவற்ற னினைவை” அசைவிற்கு கொண்டு வரும் பொருளே ஆத்மா.
அதன் வல்லபம் கூறவென்றால் நூறு நூற்றைம்பது ஆண்டுகாலம் ஒருவன் உயிரோடு இருந்தாலும் அவன் உடலை நாற்றத்திற்க்கு விடாமல் பிடித்து வைத்திருக்கிறது , காரண தேகத்தில் நின்று நிலவும் அந்த ஆத்மாதான்
ஆன்ம ஸ்தானம்
“ஆறு பட்டையுடன் கூடிய மணி” இலங்கும் புருவமத்தியே ஆன்ம ஸ்தானம்,ஆதலினாலே வள்ளலார் ”ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி.” என்கிறார் . புருவமத்தியை விளக்குமிடத்து “இருதயத்திற்குமேல் இரண்டரை அங்குல இடமான கண்டத்தில் மகேசுவரனும், அதற்குமேல் இரண்டரை அங்குல அண்ணாக்கில் சதாசிவமும், அதற்குமேல் இரண்டரை அங்குல உயரத்தில் புருவமத்தியில் விந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் நாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரவிந்துவும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் பரநாதமும், அதற்குமேல் இரண்டரை அங்குலத்தில் திக்கிராந்தம் அதிக்கிராந்தம் துவாதசாந்தம் முதலானவைகளும், அதீதத்தில் சுத்தசிவமு முள” என்கிறார். அதாவது புருவமத்திக்கு கீழ் ரெண்டரை அங்குலத்தில்அண்ணாக்கும், புருவமத்திக்கு மேல் ரெண்டரை அங்குலத்தில் நாதமும் இருக்கும் .புருவமத்தி விந்துஸ்தானம். அந்த விந்துஸ்தானம் அக்கினி பீடமாகவும் அதன் மேல் ஆன்மாவும் விளங்கும். இதுவே “மணியாடும் மன்று” அல்லவா?.அப்படியெனில் கண்டிப்பாக இந்த புருவமத்திக்கு ரெண்டரை அங்குலத்திற்க்கு மேல் நாதஸ்தானம் வரவேண்டும், அப்படி வராத எந்த ஒருஇடமும் புருவமத்தி என சொல்லக்கூடது, ஏற்கவும் கூடாது அல்லவா?.
மேலும் , சோம சூரி யாக்கினி பிரம விஷ்ணுக்கள் இருக்குமிடம்: நேத்திரம் புருவமத்தி, அண்ணா, பிரமரந்திரம் என்றும் வள்ளலார் புருவமத்தியை குறிப்பிடுகின்றார் அல்லவா?...அதை விளக்கமாக பார்ப்போம். முதலில் மேலிருந்து கீழாக முதலில்பிரம்மரந்திரத்தில் யார் இருக்கிறார்கள் என பார்ப்போம். பிரம்மரந்திரத்தில் விஷ்ணு இருக்கிறார் என சொல்கிறார்., அடுத்து அண்ணாவில் பிரம்மாவும், அதற்க்கு கீழ் புருவமத்தியில் அக்கினியும், நேத்திரம் என்பதில் சோமசூரியனும் இருக்கிறார்கள். அப்படித்தானே? ரெண்டு கண்களிலும் சோம சூரியன் இருவரும், புருவமத்தியில் அக்கினியும் இருப்பதாகத்தானே சொல்கிறார்?..அப்படி அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று” எனப்படும் சிற்சபை.. இதற்க்கு ஆதாரமாக வள்ளலார் சொல்லுவதை பார்ப்போமா? அதாவது நெற்றியில் ரோமம் தோன்றியும் தோன்றாமலும் இருக்கிறதல்லவா? அது ஏன் என சொல்லும்கிறார் ,” இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.
நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது.’ ‘ இதிலிருந்து நாம் தீர்க்கமாக புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் புருவமத்தி என சொல்லப்படுகிற இடத்தினில் அக்கினியின் காரியத்தினால் ”ரோமம் தோன்றியும் தோன்றாமலும் அருகி இருக்கும்”. அப்படி ரோம அருகி இருக்கும் இடமே புருவமத்தி எனப்படும் விந்துஸ்தானமாகிய நெற்றிக்கண் என்ற சித்சபா அங்கமாகும் மஹாமேருவாகிய லலாடம்.
தகரவெளி சிற்றம்பலவாணர் துணை
ஆண் =பெண்
நாதம் உண்டான பிறகே மனிதப்பிறவியில் ஆண் பெண் என்ற வித்தியாசம் ஏற்படுகிறது.அது வரையில் ஒரே தன்மை தான்.ஆண் பெண் என்ற வேற்றுமை இல்லாமல் ஒன்றாகவே விளையாடுவார்கள்.
பெண் பருவமடைந்ததும் அவளது தேகத்தில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன.குணத்திலும் அப்படியே.
ஆணுக்கு பதினாறு வயது எட்டினதும் அவனது தேகத்தில் சுக்கிலம் உற்பத்தியாகி,பாலனின் தொனி மாறி,கம்பீரமான ஆண்மைகுரல் எழும்புகிறது.ஆக நாதம் தான் ஆண்.இந்த நாதமில்லையேல் ஞானமில்லை.னாதமே ஞானத்துக்கு மூலம்.
நாதன் உன்னை தொட வேண்டுமென்றால் உன்னிடத்தில் நாதம் இருக்கவேண்டும்.அப்போது தான் உனது நாதத்தை எழுப்பமுடியும்.ஆதலால் தான் இளமை ததும்பும் போதே ஞானத்தை அடைய வேண்டுமென்கிறோம்.ஆதலால் தாம் ’இளமையில் கல்’ என்று எழுதி வைத்தார்கள்.இளமையில் நாதம் னிரம்பி வழியும்.ஞானத்தை எளிதாக பற்றும்.அதை விட்டு விட்டு ஞானத்தை வயது முதிர்ந்து அடையலாம் என்று சொல்லுவது உதவாத பேச்சு. பதினாறு வயதுக்கு முன்னும் அறுபது வயதுக்கு பின்னும் ஞானதீபத்தை ஏற்ற முடியாது.
[புரிகிறவங்க புரிஞ்சுக்கிடுங்கோண்ணேன்.....ரியான் உள்விளி]
ஆதி புள்ளி
==== ஆதி புள்ளி ====
எழுத்தெல்லாம் புள்ளியிலிருந்து தானே தொடங்குது. ஆனால் புள்ளி வைச்சா முற்றும்னு சொல்றாங்க. என்ன ஒரு விந்தை?
எந்த எழுத்து புள்ளியால தொடங்குது?... ”ம்” னு எழுதுறோம் ,புள்ளி வெச்சா "ம்" என எழுதுறோம்? .. இல்லையே ..
பேனா காகிதத்தைத் தொட்டவுடன் நிகழ்கிறது.
பேனா காகிதத்தை தொடவில்லையெனில் எழுத்து இல்லை... புள்ளி இல்லை..அப்படியா?
பேனா காகிதத்தை தொட்ட உடன் இடம், வலமாக எழுத்து மலர்கிறது.. புள்ளியில் இருந்து...அதுபோல....
”இ” என்பதில் மட்டும் புள்ளியும் சுற்றி மூணு சுழியும்..., ”ஈ”க்கு மட்டும் ரெண்டு புள்ளி.
அ இடது பக்கம், உ வலது பக்கம், மத்தியில் இ, எல்லா உயிரெழுத்துக்கும் இவை மூணுமே ஆதாரம்.அல்லவா?
க் முதல் ன் வரை மெய்யை பார்த்தால், பேனா காகிதத்தை தொட ஆரம்பிக்கும் முதல் புள்ளி ஒன்று, அப்புறம் ம் மேலே வரும் கடை புள்ளி ஒன்று என இரண்டு புள்ளி.
இதுல ”ம” என்பது ஆரம்பித்து எழுதி முடியறது ஒரு சுழி புள்ளி... இது நடுபுள்ளி.
---🌺 திரு. ரியான் ஐயா அவர்கள்.🌺
ஆதியில் புள்ளி இருந்தது,அந்த புள்ளி ஆதியோடு இருந்தது, அந்த புள்ளி ஆதியாகவும் இருந்தது, அந்த புள்ளியின் உள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்குள் ஒளியாக இருந்தது. அந்த ஒளி மனிதனுக்குள் பிரகாசிக்கின்றது, ஆனால் மனிதனோ அந்த புள்ளியை பற்றி கொள்ளாமல் இருக்கின்றான். அந்த புள்ளியே தனது தந்தையாகிய பிதாவினிடத்தில் இருந்து கன்னியாகிய தாயின் சூலில் தங்கிய குமாரனாகிய நாம்.
ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன. அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம். ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம். மெய்யிடம் விளங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும், ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது. அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.
இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயாணம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.
அசபை ஹம்ச ஸோகம்
மன்னும் முக்கோணம் வயங்கும் நாப்பண்
இயங்கும் அசபை நயந்து இனிது உரைக்கில்
இருபத்து ஒராயிரத்து அறுநூறு
மருவிய வாயு வலம் இடமாக
மாறி மாறி வேறு பாடாகிப்
பூதம் ஐந்தினும் தோன்றும் நாழிகை
ஒன்றுக்கு ஒன்று குன்றாது எழுந்து
பன்னிரண்டு அங்குலம் முன்னி ஒடி
இருநாலு மீண்டங்கு ஒருநால் ஒழியும்
இந்தக் கருத்தைச் சிந்தித்து அறிவால்
அந்த ஆதாரம் அசைவுஓர் ஏழினும்
பற்றற நிற்கும் பவனம் அறுநூறு
மூன்றாயிரம் மூன்றிடம் மருவி
ஒன்றிட மூவாயிரம் என நிறுத்தி
மந்திரம் ஆம் எனத் தந்திரம் சொல்லும்
புள்ளி=
======புள்ளி====
எத்தனைக்கும்பெரியதவம் இறைனாமம் பிஸ்மில்- இதற்குள்ளே அடங்கும் பொருள் எடுத்துரைப்பதரிதே- அந்த பிஸ்மில் முதலான விதமேதால்- அணுப்போல கொண்டபுள்ளி அலிபாக நீண்டே- அந்த புள்ளி அலிபு மறைந்ததொரு பேயாம் - அந்தரத்திலானதினால் அதுநினைவு சிர்றாம்- இந்த சிர்றே மீமாம் இது நாலும் இஸ்மாம்- இது நாலும் அவனாம் இதுவிதம் வேறில்லை -அந்தரத்திலான சிர்றால் அமைந்த மீமுக்குள்ளே -அமைந்தவெளி நூறான பேருமஹ்மூதாம்- இந்த பிஸ்மிலுக்குள் உயிரெழுத்து மூன்று- எல்லா மறைகளுக்கும் மெத்த முள்ளதாமே -அந்தெழுத்தை இன்னதென்று அதனுடைய வளமும் -ஆரும் சொல்லார் சொன்னாலும் ஆரும் அறியாரே -அந்தெழுத்து மூன்றிலொன்று அது தானே தாத்து -அஹதயத்தும் அதுதானே அதிலுமதைபோல -வந்ததுதான் உஹதத்தென்று அமைந்தது சிபாத்து -அதிலுமதைப்போல அமைந்தது வாஹிதியத்தாமே- வாஹிதியாவதென்ன அனைத்தும் முடிந்ததுவாம்- வரமான தவநிலையின் வாழ்த்துக்குயர் மணியாம்- இந்தவகை அறியார்கள் முந்தவகையறியார் -அந்தவகையறியார்கள் அந்தரத்திலாவார் -இந்தவகை அறிந்தவர்கள் எந்தனுக்கும் குருவாம் -இவையறிந்த பேர்களெல்லாம் யாவும் அறிந்தவராம்=(பிஸுமில் குறம்)
Subscribe to:
Posts (Atom)