Friday, November 11, 2022
தியானம்
வணக்கம்; ஏதோ தியானம் ஆரம்பிக்கபோறோம்ணு பெரிய விஷயம்ணு நெனைக்காதீங்க, தியானம் ஒண்ணும் பெரியசங்கதி ஒண்ணுமில்லே, ஆனா பெரிய விஷயத்துக்கு ஆரம்பம் தான்.
எல்லோரும் ரெம்பவும் தான் தியானம்ணு அலட்டிக்கிறாங்க, அப்படி இருக்கணும், இப்படி இருக்கபடாது, அந்த நெனைப்பு வரகூடாது, இப்படித்தான் இருந்து செய்யணும்ணு ஏராலமான கட்டுப்பாடுகளை தியானத்துக்கு விதிச்சுருவாங்க, அதனால தியானம் சரியாக எப்பவுமே அமையறதுல்லை. இது தான் தியானத்துக்கு வரும் குறுக்கீடு. தியானத்துக்கு எந்த கட்டுபாடுகளும் தேவையில்லை, கட்டுபாடுகளை களைந்து இருப்பதே தியானம், அது அருமையானது.
உருவதியானம் அருவதியானம்ணு ரெண்டு இருக்கு, அதுல உருவதியானம்ங்கிறது சும்மா எதாவது ஒரு பொருள்மேலயோ அல்லது நமக்கு மனதுக்க் பிடிச்ச சிலை விக்கிரகம் சக்கரம் முதலியவற்றின் மீது மனம் செலுத்தி இருப்பது.மற்றொண்ணு அருவதியானம், அது இறை கலப்பில் மனம் இருப்பது, சிலை விக்கிரகம் என ஒண்ணும் இருக்காது, மனம் எப்பவும் இறைநினைப்பிலேயே ஆழ்ந்து இருக்கும். இந்த ரெண்டுவித தியானத்துமேலயும் கட்டுபாடுகள் விதிச்சுகிட்டு ஏதோ சாதிக்கபோறோம்ங்கிற நெனைப்புல இருந்துகிட்டீங்கண்ணா நீங்க சத்தியமா தியானத்துக்கு வரமாட்டீங்க. இந்த புரிதல் இல்லாம தியானம் கைகூடாது. அதுனால சிம்பிளாக தாகத்துக்கு தண்ணிகுடிக்கிறமாதிரி தியானம் பண்ண புரிஞ்சுக்குங்க. தாகத்துக்கு தண்ணிகுடிக்கிறது ரெம்ப கேசுவலானது, தியானமும் அப்படித்தான் இருக்கணும். ஆன்மதாகத்துக்கு குடிக்கிற தியான தண்னீர். அதை சும்மா குடியுங்க, கட்டுபாடு்களை களையுங்க
எப்பொருள் யார்யார்
எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு...எவன் என்ன சொல்லட்டும், அவன் எந்த ஜீயோ ஸ்ரீ யோ ஆகட்டும், நமுக்கு அவன் யாருண்ணே தேவையில்லை...அவன் சொல்றது என்னாண்ணு மட்டும் தான் கவனிக்கணும், அவன் கூறும் விஷயங்களில் மெய்பொருலான விஷயங்கள் இருக்கின்றதா, அவ்விஷயங்கள் உன்னதமான ஒரு பொருளுக்கு சிறிதேனும் வெளிச்சம் காட்டுகிறதா என காண்போம்.தூலமான சரீரங்கல் அழிந்து போவன தான்,ஆனால் சூட்சுமமான அறிவுகள் அழிந்தௌ போகாதவை, ஒருவர் சொன்ன அறிவு மற்றொருவரிடத்தில் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும் என்பதே உண்மை
சத்சங்கம்
சத்சங்கம்
எந்த வித்தைகளும் ஞானத்தை நேரடியாக தராது.. அதுக்காக அவையெல்லாம் அர்த்தமற்றவை அல்ல... ஒவ்வொரு வித்தைகளையும் எந்த எதிர்ப்புமின்றி உள்வாங்கி செயலாற்றும் போது அவை நமக்கு தனியான ஒரு வித புரிதலை சன்மானமாக தருகின்றன.. அந்த புரிதலாகிய சன்மானம் நம் உயிரோடு ஒட்டிகொள்கின்றது.... அது நம்மை அடுத்த நிலைகளுக்கான படிகலை அடையாளம் காட்டுகின்றது... முதல் படியே பயனற்றது என ஒருவன் நினைத்து கொண்டிருந்தால் அவனுக்கு புரிதல் வருதல் எங்ஙனம்?.. அடுத்த படியை அடையாளம் காண்பது எங்ஙனம்... அதனால் சரியான வளர்ச்சியில் இருப்பவனுக்கு என ஒரு வித்தை நிரந்தரமாக இருக்காது... அவன் வித்தைகளின் ஊடாக பயணித்து கொண்டிருப்பான்.. அவன் எந்த வித்தைக்கும் அடிமைபட்டு கிடப்பதில்லை.. அவன் புரிதலே அவன் நிரந்தர வித்தையாக மலரும்....ஒருவரை பார்த்த உடனேயே..அல்லது வித்தையை பெற்ற உடனேயே அதை தீர்மானம் பண்ணி விடுகிறார்.. இது இவ்வளவுதான்ணு...அதில் அவர் நுழைவதில்லை.. அதை நுழைந்து பரிசோதனை பண்ணுவதில்லை... அதை கொடுத்த குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பார்...... இது தவறான அணுகுமுறை... ஏற்றுகொள்ளும் மன பக்குவம் இருப்பவன் குருவை அல்ல ஏற்று கொள்ளுவது.. அவர் கொடுத்த வித்தையை... வித்தையை ஏற்றுகொள்ளுகிறவன் குருவை ஏற்பவனாகிறான்... ஆனல் அவன் குருவுக்கு அடிமையாக இருப்பதில்லை.. குருவை பரிசோதனை பண்ணிகொண்டிருப்பதில்லை... வித்தை பெற்று விட்ட உடனேயே குரு காணாமல் போகிறார்.. அங்கு வித்தை தான் இருக்கும், குரு எனும் தூலம் போய் விடுகின்றது... அது அந்த வித்தை ஒளியாக மலர்கிறது... வித்தையே குருவாகின்றது... இதை விட்டு குருவின் தூலத்தோடு ஒட்டி அவரின் அங்க அடையாலங்களை நோண்டிகிட்டு அவர் நல்லா பிகேவ் பண்ணுகிறார் என்றால் வித்தையும் நல்லது என நினைப்பவர்களுக்கு ஒன்றும் நடப்பதில்லை.....
இவ்வண்ணம் ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் எனும் அலாதியான ஆவலோடு ஆழ்மன தேடுதலோடு உண்மை சிறக்க உள்ளன்போடு எதிர்பார்த்து இருக்க, அவரின் முகம் நோக்கி ஆன்ம வாஞ்ஞையோடு அப்படியான சுத்த இருதயம் படைத்தவருக்கு புரியபடுத்தி கொடுக்கவேண்டும் எனும் உள்ளன்பு பொங்கும் நேரம் அது அந்த அருமையான தருணம் சீடன் புரியவேண்டியதை ஆழமாக புரிய தொடங்குகிறான்...இதுவே சத் சங்கம்.
ஆதி நாதம் அல்லது ஆதி வார்த்தை
ஆதி நாதம் அல்லது ஆதி வார்த்தை
ஆதியில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது, அவர் ஆதியில் தேவனோடிருந்தார், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயன்றி உண்டாகவில்லை, அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாய் இருந்தது, அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கின்றது, இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை, ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும் எங்கள் கண்களினால் கண்டதும், நாங்கள் நோக்கி பார்த்ததும், எங்கள் கைகளினால் தொட்டதுமாயிருக்கிற ஜீவ வார்த்தையை குறித்து அறிவிக்கின்றோம், அந்த ஜீவன் வெளிப்பட்டது, பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமான அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதை குறித்து அறிவிக்கின்றோம். உலகத்திலே வந்த எந்த மனுஷனேயும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகமோ அவர் மூலமாய் உண்டாயிற்று, ஆனால் உலகமோ அவரை அறியவில்லை. எத்தனை பேர்கள் அந்த வார்த்தையை பெற்றுக்கொண்டார்களோ அத்தனை பேரும் தேவனுடைய பிள்ளைகள் ஆவார்கள்.
----பைபிள்
இந்த எக்ஸ்னா "X" என்னவாம்?
பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம்
பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - ஞானஸ்நானம்
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,தேவன் கட்டளைப்படியே தாங்கள் அறிந்திருக்க வேண்டியதான இந்த மூன்று திருநாமங்களை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்?தெரியவில்லையா? கவலை வேண்டாம். நீங்கள் இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை என்பதே மெய்.
ததா + கதா
ததா + கதா
"ததா+கதா’’ என்பது இரு வேர் சொல் கூட்டு, "ததா" என்றால் அவ்வண்ணம், அங்ஙனம், அதன்படி என பொருள்படும், "கதா" என்பது அசைவு,நடத்தல், முன்னேறுதல், வெளிப்படுதல் என பொருள். இதில் ‘ததா’ என்பதில் அவ்வண்னம் என சொல்வதில் இருந்து மற்றொன்றை புரிந்து அதன் படி நடப்பவர் என பொருள். “அந்த" மற்றொன்று எதுவெனில்....”””””இவ்வுலகத்திலும், இது போன்று அனேகம் கோடி பிரபஞ்ச கூட்டத்து விண்கூட்ட சங்கமத்துள் திகழும் அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வனைத்திலும் பிறந்து மறைந்து போன அனைத்து சீவசாலங்களும், மற்றும் இவ்வுலகத்திலும் மற்றை இவ்வனைத்திலும் பிறக்க இருக்கும் அனைத்து சீவசாலங்களும் ”பரநிர்வாணம்” அடையும் பொருட்டு வர்த்திப்பவர்,என பொருள்.நம்முடைய சாதனை, தியானம், யோகம்,பிரார்த்தனை, செயல் ,கர்மம், வினை போக்கு, வேள்வி, தானம்,தர்மம் என அனைத்தும் இவ்வனைத்து சீவசாலங்கள் உய்யும் பொருட்டு சதா "வழங்கி கொண்டு” இருக்க ‘தான்" அற்று பரநிர்வாணம் சித்திக்கும்
மனம்
மனம் ஆசை கொள்ளுவது ஒன்றே..அதன் அதீத காதல்...உடலுடனும் உயிருடனும்...உடலையும் மனம் காதலிக்கிறது, உயிரையும் மனம் காதலிக்கிறது...இவற்றை இழக்க விரும்பவில்லை...ஆனால் மனத்துக்கு வழிதுறை தெரியாது..சிக்னல் ரேன்ச் விட்டு போகிறது...உண்மையில் மனமே விட்டு போகிறது..உடலையும் உயிரையும்...மனம் தொடர்பு எல்லைக்கு அதிதூரம் போகிறது..தினம் தினம் போய் கொண்டே இருக்கிறது..அதுவே அதன் நிரந்த பயத்தின் காரணம்.
ஏனெனில் மனமானது இவற்றை நிர்மாணிக்கவோ நிர்வகிக்கவோ நிலை நிறுத்திகொள்லவோ ஏற்ற அறிவையோ அனுபவத்தையோ கொண்டதுவல்ல...மனதிற்க்கு இவை ஒன்றும் தெரியாது...காக்கை கூட்டினில் குயிலாக முட்டை போட்டு அடை காக்கிறது
பாருங்க!
பாருங்க..நாம் மாதாவின் கருவில் நெல்லிக்கனியளவு என இருக்கையிலே நம்முள் ஒரு அமைப்பு உண்டு...அதுவே கருவுக்கு எல்லா உறுப்புகளையும் அங்ககுலங்களையும் விரித்து உடலாக மலர செய்கிறது..தோன்றா நிலையில் இருக்கும் அது தூலத்துக்கு உரு கொடுக்கிறது...அல்லவா..அது எது?
நான்.. நான்
நான்.. நான்” என கொண்டாடி அபிமானிக்கும் இந்த உடல் உயிர் இரண்டும் ”‘நான் அல்ல”.
“நான் அல்ல” என மறுக்கும் பொருளாக இருக்கும் இவை இரண்டும் மெய்யாகவே மெய்யாகவே சிவசக்தி சொரூபமான மெய்மை கோலம். ஆதி அனாதியான சொரூபம். அறிவு கெட்டு “நான்” என சொல்கிறோம். இருப்பது “அச்சொரூபமே”.
என்னை கண்டவன் என் பிதாவையும் கண்டிருக்கிறான்.,நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம
ஞானம்=ஞா+னம்,
ஞானம்=ஞா+னம், அதாவது "னான்..னாம்" என்று ஆகி கொள்ளுவது.
இதுவே வேதத்தின் உட்பொருள். "னான்..னான்.." என்று உன்னுள் இருந்து சதா சொல்லிக்கொண்டிருக்கும் வஸ்து, 'வந்தவேதமாக' திருவுரு தாங்கி, முன்னிலை குருவாக வெளியாகி நின்று தன்னை அறிவிக்க, அதாவது உன்னுள் அறியபடாததாய் இருக்கும் ஆத்மாவே குருவுருவாக வந்து தன்னை அறிவிக்க, உன்னை நீ அறிகிறாய்.
அதோடு காலமெல்லாம் “ஓட்டி பழகி” அறிவு விளைவேற்றம் ஏற ஏற, "னான் நாமாகுதல்" கைவரவாகும். அதனால் மெய் அறிவு சித்திக்கும்.
-- சாலை ஆண்டவர்கள்