Wednesday, November 9, 2022

உடலில் இரு அவயங்கள்

 இச்சியாம் இடுப்பிடையில் கோசபீசம்

குச்சியாம் கோசபீச தண்டை தொட்டு

குரு நாடி நாக்கு வரை கயிறே போல

நச்சியே போய் பாரு நாக்கண்ணாக்கு

நடு மண்டை உச்சிவரை கபால நாடி 


உடலில் இரு அவயங்கள் எலும்பின்றி அமைக்கபட்டுள்ளன..நாக்கும் பிறப்பிறுப்பும்..இவை இரண்டினாலும் உங்களுக்கு நரகம் வருகிறது...


====== முஹம்மது சல்லல்லாஹு அலைஹிவசல்லம்

சீவகாருண்ணிய பரசியம்

 ====சீவகாருண்ணிய பரசியம் ==== 


என்ன தான் இந்த சீவகாருண்ணியம்?.. பசி்ப்பவர்கள் பசியாற்றுவதே சீவகாருண்ணியம், அப்படித்தானே?.. ஏம்பா யார் தான் பசி இல்லாம இருக்காங்க இந்த உலகத்துல!! எல்லோருக்கும் தான் பசி வருதே, அப்ப எல்லோருக்கும் பொங்கி அண்டா குண்டா நிறைய பரிமாறுவது தான் சீவகாருண்ணியமோ?? இப்போ பாருங்க சன்மார்க்கி சன்மார்க்கிண்ணு சொல்லிகிட்டு கும்பல் கும்பலா வெள்ளை வெள்ளையா துணி கட்டிகிட்டு சீவகாருண்ணியத்துக்கு என சொல்ல்கிட்டு வசூல் வேட்டை பண்ணி எங்காவது கோயில் குளம் சத்திரம் என பார்த்து சமைச்சு போட்டு தட்டுவாங்களே, அது தானா சீவகாருண்ணியம்?. பாருங்க பசியும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கொடுத்தது தானே, எல்லா சீவர்களுக்கும் ஆண்டவர் பசிய கொடுத்திருக்கானே.. அந்த ஆண்டவன் எவ்வளவு கொடுமைகாரனா இருப்பான் பாருங்க... பிறக்கிற போதே பசியையும் கொடுத்து அழுது துடிக்க வாயையும் கொடுத்திருக்கானே.. அப்படி வாய் நிறைய பசிக்கிற எல்லோருக்கும் உணவு கொடுத்தா அதுதான் சீவகாருண்ணியமா... இருக்கிறதெல்லாம் பசிக்கிறவனுக்கு கொடுத்துகிட்டே இருக்கிறது தான் சீவகாருண்ணியமா? என்னமோ சொல்றாங்க.. எனக்கு ஒண்ணும் புரியவே மாட்டேங்குதே..


=== திரு. ரியான் ஐயா அவர்கள்

மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்

 =====மூச்சாகும் தம்மாஹூ முயிரு ஹயாத்===== 


உலக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு சாதனைகளும் பிரயோசனமற்றவை என உணர்ந்தீர்களானால் அடுத்த வாசல் திறக்கும். 


சாலை ஆண்டவர் சொல்லுவது போன்ற "அகர வாசல்".   இல்லையெனில் பிராணாயாம தியான நிஷ்ட்டைகள் தான் பெரிய வித்தைகள் என ஏமாந்து வாழ்வையே இழந்து விடுவோம். 


சொல்லபடும் எந்த சாதனைகளும் உயிரை காட்டாது. இவை அனைத்தும் மனம் பிராணன் என்பனவற்றிலேயே முடிந்து விடும்.  ஜீவனை எட்டாது. ஏனெனில் ஜீவனை காட்டும் வித்தையானது உலக நடைமுறையில் கிடையாது.


உலக நடைமுறை என்பது எதாவது ஒரு வித்தையை செய்துகொண்டிரு நீ அங்கே இறைவனை அடைவாய் என சொல்லி விட்டு போய் விடுவார்கள். இதை தான் கூழ் முட்டைத்தனம் என்பது. 


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂


வெட்டவெளி "ஒன்றுமல்லாதது" என்பது மனதின் கற்பனை. ஆனால் அதை பிடிக்கும் உபாயமே வித்தை.


விளக்கினை யேற்றி வெளியை அறிமின்

விளக்கினின் முன்னே வேதனை மாறும்

விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்

விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே .-திருமந்திரம் 


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

மகா மந்திரம்

 ===== மகா மந்திரம் ====== 


தமிழ் தெரியாத ஒருவர் சீவகாருண்யத்தை கடைபிடிக்கிறார் என கொள்ளவோம்.. அவரும் கூட தமிழில் எழுதப்பட்டிருக்கும் “அருட் பெரும் ஜோதி.....” என சொல்லவேண்டுமா? அல்லது அவருடைய சொந்த மொழியில் சொல்ல வேண்டுமா இந்த மஹா மந்திரத்தை?...எப்படி தோன்றுகிறது உங்களுக்கு?


(657) கற்பம் பலபல கழியினு மழியாப் 

பொற்புற வளித்த புனிதமந் திரமே


(658) அகரமு முகரமு மழியாச் சிகரமும் 

வகரமு மாகிய வாய்மைமந் திரமே


(656) வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து 

நான்பெற வளித்த நாதமந் திரமே


இதுவே நாதாந்த திறவுகோல்.... நாதமந்திரமானது நாதாந்தத்திற்க்கு வழிகோலும்... இதுவே திருமூலர் கூறும் கருத்து... "காலை எழுந்து கருத்தறிந்தோதில் ஞாலம் அறிய நரை திரை மாறுமே” ....அந்த கருத்தே இதுவாம்...


இது ஏனையோர் ஜெபிப்பது போன்றதுவே.. "பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே....” எனவர்கள் முறயிடுவர்... அதேதான் உங்கள் முறையீடும்.... குரு இல்லாமல் அனுபவம் என்பது வராது.... ஒரு சிறு விளக்கை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும், அதை விட கொஞ்சம் பெரிய தீ பந்தத்தை நோக்கி பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது, கார்த்திகை சொக்கப்பனையை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பதும்... ஒரு காடே பற்றி எரியும் போது அதை பார்த்து அருட்பெரும் ஜொதீ என்பதும்... இந்த உலகத்தயே இரயாக்ககூடிய தீப்பிழம்பான சூரியனை பார்த்து அருட்பெரும் ஜோதீ என்பது ஒன்றாகுமா?


அப்போ உண்மையான ஜோதியை வணங்க வேண்டுமா.. அல்லது பாவிக்கப்படும் ஒரு ஜோதியை வணங்க வேண்டுமா... அதற்க்கு “பக்தி” எனும் ஒரு புனை பெயருடன்?.... பொய்யான ஒன்று பக்தியினால் மெய்யாகுமா... மெய்யான ஜோதியை வணங்குவது தானே முறையும் அழகும்?


அந்த நாதாந்த மந்திரத்தை பெற்று கொள்வது தானே விவேகமான செயல்??


மந்திரங்கள் உச்சரிப்பதனால் மூடத்துவம் உண்டாகும் என்று சொன்னவர் வள்ளலார்.... அவரே பிற்பாடு இப்படி ஒரு மந்திரத்தை சொன்னார் எனில் அதன் தன்மை எதுவோ.... மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினரும் இதை கற்று கொள்ளவும் வேண்டுமே... ஆனால் "நாத மந்திரைத்தை" அறியும் நாள் எந்நாளோ..??

எல்லோரும் மனசு

 எல்லோரும் மனசு ஒரு நிலையா இல்லைன்னு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்லே.... மனசை, அது என்னனு கண்டுபிடிச்சா அவர்களுக்கு தெரியும். 


உண்மைதான். தியானத்துக்கு உக்காந்தா நினைப்பு டஜன் கணக்குலே வர்றது.  மனசு நினைப்பு மூட்டை தானே! 


நினைப்புகளை ஒழிச்சுக் கட்டறதுதான் முயற்சி பலிக்க மாட்டேங்குது. 


ஒருத்தன் எந்த வழியிலேயோ, ஆத்மாவிலே ஓய்ஞ்சு இருந்தா சரிதான்.  ஆத்மா விசாரத்திலே முடியலேன்னா... ஜபமோ, தியானமோ பண்ணனும்....


யானை துதிக்கைக்கு சங்கிலியைப் பிடிசுக்கக் கொடுக்கிறது மாதிரிதான்.  ஜபமோ, தியானமோ பண்ணினா பிற நினைப்புகள் போகும்.  ஏகாக்கிரம் ஏற்படும். மனசு அமைதி அடையும்.  அதுக்காக, பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் அமைதி வரும்னு அர்த்தம் இல்லை.  அமைதி எப்பவும் இருக்கு. நினைப்பை போக்கிறதுக்குதான் இந்தப் போராட்டம் எல்லாம். 


மாடு பிறர் கொல்லையிலே போய் மேயறது.  மாட்டை இழுத்து வந்து கொட்டத்திலே கட்டினாலும் ... அவிழ்த்துக் கொண்டு ஓடிடும்.  இப்போ... நல்ல புல்லைக் கொட்டத்திலேயே கொடுத்தோம்னா... முதல்லே ஒரு வாய் சாப்பிடும்.. பழைய பழக்கத்தினாலே, அடுத்த கொல்லைக்கு ஓடிடும்.  அடுத்த நாள் இரண்டு வாய் சாப்பிடும்.. பழகப் பழக நிறைய புல்லைச் சாப்பிடும்.  கடைசிலே பிறர் கொல்லைக்கு ஓடறதை விட்டுடும்.  அந்தப் பழக்கம் சுத்தமா போச்சுனா... அதைக் கட்டத் தேவையில்லை...  அவிழ்த்து விட்டுடலாம்.  பக்கத்துக் கொல்லைக்குப் போகாது.  கொட்டதிலே அதை அடிச்சாக்கூட கொட்டத்தை விட்டுப் போகாது. 


இப்படிதான் மனசும், வாசனைகள் இருக்கற வரைக்கும் ஒரு நிலையிலே இருக்காது. வாசனை எல்லாம் வெளியே வரணும்.  வந்துதான் அழியும். 


மனம்னா என்னனு பாத்தா.... நினைப்பு எல்லாம் போய் அது ஆத்மான்னே முடிஞ்சிடும்.  எண்ணங்களின் மொத்த தொகுதியைத் தான் மனம்கறோம். 


எண்ணங்கள் ஆத்மாவிலே இருந்துதான் வர்றதுன்னு தெரிஞ்சு ... ஆத்மாவிலே இருந்தா மனம் மறைஞ்சுடும்.  அமைதி நிலைச்சிடும்... நினைக்கிறது கஷ்டமாகியிருக்கும்... இப்போ நினைப்பு இல்லாம இருக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கோ ... அப்படி அப்போ நினைக்கிறது கஷ்டமாயிருக்கும் ... இங்கே மனம்தான் மாடு; நினைப்புகள் தான் அடுத்தவா கொல்லை; கொட்டம் தான் நம்மளோட சொருபம். 


தூங்கறவனை வேலையைப் பாருன்னு எழுப்பினா எப்படி இருக்கும்? தூக்க சுகத்தை வேலைக்காக தியாகம் பண்ண சிரமாமாயிருக்கும்.  அப்படித்தான் மனமற்ற நம்மளோட நிலை. 


சுகஸ்வருபம்.  அதை விட்டுட்டு சிந்திச்சுக்கொண்டு துக்கப்படறது ரொம்ப கஷ்டம்.  நம்மளோட சொருபத்தோட ஆனந்தத்தைத் தொந்தரவு பண்ணவே சம்மதிக்க மாட்டோம். 


மனமற்ற நிலையிலே நிக்கணும்னா..... பெரிய போராட்டந்தான்.  போராடித்தான் நம்மளோட சொருபத்தைப் பெற வேண்டியதிருக்கு.  போராட்டத்தை ஜெயிச்சு லக்ஷியத்தை அடைஞ்சா, எதிரி ஆத்மாவிலேயே அடங்கி இல்லாம போயிடுவான்.  மனந்தான் எதிரி.  நினைப்புதான் எதிரி.  நினைவுகள் தான் உலகம்.  நினைப்பு இல்லேன்னா... உலகமும் இல்லை... கடவுள் இல்லை.  ஆத்மா மட்டும் தனியிருப்பா விளங்கும்.

சன்மார்க்கத்தில் உருவ வழிபாடு கொள்லலாமா?

 == சன்மார்க்கத்தில் உருவ வழிபாடு கொள்லலாமா? ===


உருவ வழிபாடு கொள்ளுவோருக்கு ஒரு எச்சரிக்கை........... நீங்கள் எத்தனை பேர் “அலகை” என்பதனை தெரிந்து வைத்திருக்கின்றீர்கள்?... "அலகை"  என்பது என்ன?.. வள்ளலார் “அலகை” என்பதனை குறிப்பிட்டுள்ளார்கள், அது என்ன என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...ப்ளீஸ்.


ஐயாமார்களே... மனிதன் தவிர ஏனைய ஜீவஜெந்துக்கள் செத்து போனால் நரகத்துக்கு போகுமாண்னு யாருக்காவது ஒரு பதில் இருக்குதா?.. அல்லது சொர்க்கத்துக்கு போகுமா?...நீங்க எல்லாம் சன்மார்க்கிகள் தானே?...அதுக்கு அப்புறம் இந்த விக்கிரக ஆராதனைகாரர்கள் எங்க போவாங்க என சொல்லுகிறேன்


“அலகை” என்பதை தெரிந்தவர்கள் கொஞ்சம் பெர்தான் இருக்கிறார்கள்... தெரியாதவர்கள் தான் உருவ வழிபாடு செய்கிறார்கள்.


பெரும் ஆண்டவர் ”மனிதர்களுக்கு மட்டும்”கொடுக்கும் இரு பொருள்களே “வித்தியா தத்துவம்” எனும் அமானிதம், ரெண்டாவது என்பது “அலகை”... வித்யா தத்துவம் விளங்கினவனுக்கு அலகை இருக்காது... விளங்காதவன் அலகை பொருந்தும்.... உயிர் உள்ளவனுக்கு கொடுக்கப்படுவது வித்தியா தத்துவம், எனில் செத்தவனுக்கு கொடுக்கபடுவது “அலகை”..இதை ஆண்டவனால் அல்லாது மற்றமுடியாது.... இதுவே “செத்தாரை எழுப்புதல்”.


வித்தியா தத்துவம் விளங்காத ஒருவனும் அலகையை தவிர்க்க முடியவே முடியாது.


அலகை பொருந்தினவன் எக்கோடி காலத்துக்கும் பிறக்கவே மாட்டான்.. அவன் கதை அவ்வளவு தான்..... இது தான் அலகையின் ரகசியம்.


வித்தியா தத்துவம் பொருந்தினவன் மீண்டும் பிறப்பான்... மேல்நிலை அறிவுடன்.


எத்தனை பெரிய அந்தஸ்தை உடையவனாலும் சரி, எத்தனை பெரிய விஞ்ஞானியானாலும் சரி. எத்தனை பெரிய ஆன்மீகவாதியானாலும் சரி, எத்தனை பெரிய அரசனானாலும் சரி, அலகையை தவிர்க்க வித்தியா தத்துவம் பொருந்துவது அவசியம். அல்லாவிடில் அலகை தேகம் பொருந்தியே தீரும்.


சன்மார்க்கி என சொல்லிகொண்டாலும் ஒருவன் உருவத்தை வழிபடுவானாகில் அவன் அலகையை அன்றி எதை பொருந்த முடியும்?... பொருந்தியே தீரும்.அதனாலேஎயே வள்ளலார் தன் உருவம் உருவாக்கபட்டது கண்டவுடனேயே அதை தகர்த்தெறிந்தார்.... ஆனால் சன்மார்க்கம் என சொல்லிகொண்டு அலகையை பூஜிக்கின்றனர். இறைவனின் சொரூபத்தை அன்றி வேறெந்த சொரூபத்தை பூஜிக்கிறவனும் அலகையை தான் பூஜிக்கிறான் என அறிந்துகொள்ளுவதில்லை. இறைவனின் சொருபமோ தயவே வடிவமான அருள்.... அதை சடமான உருவத்தில் காணமுற்படுபவன் அலகையின் தீவிர பக்தன் தான் என்பதில் ஐயம் வேண்டாம்.... விஜயகுமார் ஐயாவிடம் கேட்டு பாருங்கள் மேலும் விளக்குவார்.


 பஞ்சபூத்த்தையும் ஏவலாக்கி கொண்டவர்களுக்கு மரணம் ஏது?. அருட்பெருஞ்சோதி என்ற மெய்பொருளை உணர்ந்து தன்தேகத்தை காயசித்தி செய்து அதன்மூலம் பனிரெண்டு வருடம் யோகம் முயன்று அதன மூலம் சொரூப சித்தியை அடைந்து இறையோடு இறை ஆகன்றனர். அந்த யோகத்தை கை கொள்ளவே சமாதி நிலையை மேற்கொள்கின்றனர். யோக சித்தியின் முடிவில் பஞ்சபூதங்களில் ஒன்றை தேர்வு செய்து உருவத்தை அருவமாக்கி சொரூப யிலையை அடைகின்றனர்.


 நாம் சிலாகித்து பேசும் யோகம் பிரணாயாம்ம இது போன்ற நிலையில் நம் உடலில் நடப்பதில்லை. அதை தான் ஞானிகள் உளவு என்கின்றனர். அது எங்கே நடக்கிறது என்பதே நாம் அறிய வேண்டிய உளவு


 அந்த வாசி ஒடுங்கும் இடமான ஆதம்பாதத்தை அறியா தொழுகை ஆற்றில் கரைத்த புளி என ஞானிகள் கூறுவதும் இதனாலே.


 வாசி எனப்படும் அது அமுதமாய் உள்ளது என உணராமல் மோசம் போனோர் கோடி என சிவவாக்கியர் குறிப்பிடும் அந்த வாசியே அருட்பெருஞ்சோதி.


 இதை தான் வள்ளுவர் பெருந்தகையோ "அறிவுடயார் ஆவது அறிவர் அறிவிளார் அஃதறி கல்லாதார்" எள உணர்த்தினார்


ஆ என்பது என்னவென்றும் அஃதறி எளப்படுவது என்னவென்று உணர்வதே ஞானம்.


சிவலிங்க ரூபத்தை விளக்கும் போது "தாயும் தந்தையும் மருவியது போலவே காணும் அந்த விந்து நாதம் என மனதில் நிலை நாட்டல் நலம்


ஒரு சின்ன திருத்தல், லிங்கமானது ஆவுடையில் சேரும் நிலையில் இருப்பதில்லை.... ஆவுடையில் இருந்து வெளிப்படு நிலையில் இருக்கும்...அதாவது லிங்கத்தின் முகப்பு வெளிபட்டுவரும் நிலை..உட்செல்லும் நிலை இல்லை என்பதை கவனிக்கவும்


வித்தியா தத்துவத்தை தான் அறிவு என்கின்றனர்..... ஆனால் அந்த அறிவு நமக்கு காரியப்படாமல் உள்ளது , அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கிறோம்... அந்த அறிவினாலேயே ஆன்மாவை அறியகூடும்.. அல்லாது மனமோ, பிரானனோ ஆன்மாவை சென்று அடையாது... அதனாலேயே அறிவு விளக்கம் பெறவேண்டும் என வள்ளலாரும் சொல்லுகின்றார்... அதற்காகவே பல பயிற்ச்சிகளும் உள்ளது... ஆனால் விளக்கம் பெறுவதற்க்கு தயவே உத்தம வழி... தயவு வர்த்திக்க அறிவு விளக்கம் உண்டாகும்.... இது பொருந்தினவன் அலகையை கடப்பான்...


வள்ளலார் “அற்ப அறிவு” உடைய காலத்தில் நடந்தது வேறு... "பெரிய அறிவு” கொண்டபோது நடந்தவை வேறு... அதை அவரே ஒத்துகொள்கிறார் அல்லவா?


ஆதலால் பெரிய அறிவு கொள்ளுதலே முக்கியம்,,அதை விடுத்து சிறிய அறிவினால் சிறிய நிலைகளின் தன்மைகளை மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என நினைக்கிறேன்...


 அந்த வித்தியா தத்துவமெனும் அறிவே விளக்கு... விளக்கு என்றால் மறைந்திருப்பதை, அஞ்ஞானமாகிய பெரு இருளை அகற்றும் பொருள்.... அப்படி ஆன்ம விளக்கம் உண்டாகும் என கணிப்பு


உருவ வழிபாடில் இருந்து வந்தார் என்பதற்க்கு அதையே கொண்டு நடப்பது எதற்க்கு?... மேல் நிலைகளில் ஏற ஏணி அத்தியாவசியம்... அதற்க்காக மேல் நிலை அடைந்த பிற்பாடும் யாராவது ஏணியையும் சுமந்துகொண்டு திரிவார்களா என்ன?


அந்த ஏணிக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு எங்காவது வைத்துவிடுங்கள்.. அதையே சுமந்து திரிந்தால் தோள்களுக்கு கொடுையான வலிகள் ஏற்படும்.

எந்த வித்தை மெய்யானது?

 ===எந்த வித்தை மெய்யானது?===


ஆன்மீகவாதிகள் பொதுவாக பார்த்தால் எதையாவது ஒரு சம்பிரதாயத்தை முன்னிறுத்தியே முன்னேறுவதை பார்க்கிறோம், அந்த சம்பிரதாயம் தான் பெரிய வித்தைண்ணு சொல்லிகிட்டு இருப்பதையும் பார்த்திருக்கிறோம்.பக்தியில் திளைக்கிறவன் சிவன் தான் பெரிசு அல்லது விஷ்ணு தான் பெருசு அல்லது அம்மன் தான் பெரிசுண்ணு கோஷம் போட்டுகிட்டு இருப்பாங்க.மனம் அவங்களை மயக்கி வெச்சிருக்கும்.ஒருவித போதை போன்றது இது,அவர்களின் இஷ்ட்ட தெய்வ சங்கல்பத்தால் போதை கொண்டு இருப்பார்கள், இதையே பக்தி என்கிறோம்.இதில் தான் மிதம் தீவிரம் என இருவகை.இந்த பிரிவு எல்லா மதங்களிலும் உண்டு.ஒருத்தன் சண்டைக்கு போவான் ,மற்றவன் தான் உண்டு தன்பாடு உண்டு என இருப்பார்கள்.இவர்களுக்கு ஆராதனை செபம் தோத்திரம் இவையே போதும், இவற்றில் அடிமுட்டாளாக இருப்பான், ஞானம் சொன்னாலும் காதுக்கு ஏறாது.இப்படியானவர்களை சமீபிக்காமல் இருப்பது நலம்.


இரண்டாவது குரூப்பு என்பது சற்று உயர்ந்தவர்கள், கொஞ்சம் கேள்விஞானம் கொண்டவர்கள்.பலவிதமான ஆன்மீக கேள்விகளை தன்னகத்தே கொண்டவர்கள்,ஆனாலும் ஞானம் என்ன என விளங்கி கொள்ள முடியாதவர்கள்,இவர்களிடமும் பக்தி நிறைந்திருக்கும்,ஆனால் நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள்.அரைவேக்காடுகள் என சொல்லலாம்.இவர்களை சொல்லி புரியவைப்பது கடினம்.அதனால் இவர்களிடமும் சமீபிக்காமல் இருப்பது நலம்.


மூன்றாவது வகையறா என்பது ஏராளம் படித்தவன்,இவன் ஒன்றையும் ஆழமாக செல்லமாட்டான், எல்லாத்தையும் படிப்பான்,பெரிய குப்பைதொட்டியாக இருப்பான்.எல்லா குருமார்கள் கிட்டயும் போவான்,எல்லா சடங்கு சம்பிரதாயம் நம்பிக்கை என எல்லாம் இருக்கும்,ஆனால் தெளிவு இருக்காது.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம்.


நான்காவது வகை போலிகுரு.ஒண்ணும் தெரியாது,நெறைய வித்தை வகையறாக்கள் இவனிடம் இருக்கும்,எல்லாத்தையும் கூவி கூவி அழைத்து வார் வாரி வித்தைகள் வழங்குவான்.எதுக்கு கொடுக்குறோம், யாருக்கு கொடுக்கிறோம் என கூட அவனுக்கே தெரியாது, ஆனால் குருவாக இருக்க ஆசைபட்டு இப்படியெல்லாம் செய்துகிட்டு இருப்பான்,பனத்துக்கு ஆசைபடுகிரவனும் உண்டு, பணம் வாங்காமலேயே கிடைக்கிறவங்கலை எல்லாம் குட்டிசுவராக்கி கிட்டு இருப்பான். இவனும் சமீபிக்க தகுதியற்றவன்.


ஐந்தவது வகையானவன் எல்லாம் கற்றவனாக இருந்தாலும் ஒன்றும் புரியாதவனாக இருப்பான், இவனிடம் இருக்கும் அருமையான குணம் என்பது தனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை உணர்ந்திருப்பான்.அதனால் தன்னடக்கம் இவனிடம் இருக்கும்,ஆனாலும் குருமார்கள் முன் மண்டியிட இவன் ஆணவம் இடம் கொடுக்காது.ஆகையினால் இவன் நுணுக்கங்களை அறியாமலேயே போய்விடுவான்.இவனும் சமீபிக்க தகுதி அற்றவன்.


ஆறாவது வகையானவன் கற்றதெல்லாம் மெய்யல்ல என உணர்வு கொண்டவன், அனைத்து வேத ஆகம சாத்திரங்களுக்கும் மேலாக அறிந்து கொள்ள வேண்டிய அறிவு இருக்கிறது என புரிந்து கொண்டவன்,ஆனால் ஆன்ம விளக்கம் இன்றி அலைந்து கொண்டிருப்பான். எதை தான் இவனிடம் போய் சொன்னாலும் ஏற்றுகொள்ளமாட்டான்,அலைவதே அவன் கர்மம்.இவனையும் சமீபிக்க தகுந்தவன் அல்ல.


ஏழாவது வருகிறவன்,சாதனையாளன்.யராவது சொல்லியோ,அல்லது எங்கிருந்தாவது கேட்டோ,அல்லது எதாவது நூல்கலை கிளறியோ கொண்ட அறிவால் கடினமான சாதனை செய்பவன்,தீவிர வைராக்கியம் கொண்டவனாக இருப்பான், ஆனால் தான் செய்வதை மனைவிக்கு கூட சொல்லமாட்டான்,அப்படி ரகசியம் காப்பவன்.அவன் செய்ய்ம் வித்தையே பெரிசு எனும் எண்ணம் இவனுக்குள் இருப்பதால் மற்றவர்களை பொருட்படுத்தமாட்டான்.எப்போதும் தனிமையில் இருப்பான்,சாதனையில் கண்ணும் கருத்துமாக இருப்பான்.இவனுக்கும் ஆன்ம விளக்கம் இருக்காது,ஆகையினால் சமீபிக்க தகுந்தவன் அல்ல.


எட்டாவது வருகிறவன் ஞானமுட்டாள் என வகைபடுத்தலாம்.தான் செய்யும் வித்தை பரமோன்னதமானது,வித்தையினால் சொர்க்கம் போகலாம், பரமண்டலத்தில் ஏறிவிடுவேன் என பெருமையினால் இருப்பவன்.சிறந்த சாதனையாளனாக இருந்தாலும் இவன் தேடுதலை நிறுத்திகொண்டவனாகையினால் இவனுக்கும் ஞான விளக்கம் இருக்காது.எது சொன்னாலும் உறைக்காது,சாகும் தருவாயில் கூட உபதேசம் ஏற்றுகொள்ள தயங்குவான்.அவன் வித்தையே பரமமானது என முட்டாள்தனமாக இருப்பவன்.இவனையும் சமீபிக்காமல் இருப்பது நலம்.


ஒன்பதாவது வருபவன் வித்தையை நம்புவான் ஆனால் குருவை நம்பமாட்டான். வித்தை மட்டும் போது ஆன்மவிளக்கம் உண்டாகும் என இருப்பவன்.வித்தையின் நுணுக்கம் ஆழ்ந்த அனுபவம் கொண்ட குருவிடம் இருக்கின்றது என விளங்கிகொள்ள மாட்டான்.குருவை மனுஷதூலம் என கருதி மரியாதை செய்யமாட்டான்.குருவிடம் மறைவான ஞானவிளக்கம் குடிகொள்கின்றது என புரிந்துகொள்ளாமல் வித்தையை மட்டும் வாங்கிகொண்டு ஓடிவிடுவான்.இவனும் கதைக்கு ஆகாதவன்.


===(தொடரும்)

வள்ளலார் அருளிய நித்திய கரும விதி இன்றைய சிந்தனைக்கு*

 *வள்ளலார் அருளிய நித்திய கரும விதி இன்றைய சிந்தனைக்கு*


1) எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல்(BAD WORD) முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல்(ARGUMENT), சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.


2)இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி என்னும் மகா மந்தரம் ஞாபகஞ்செய்தல் வேண்டும்.


*Hseija Ed Rian:* அப்போ பயம் பூஜ்ஜியம் என வள்ளலார் கூறுவதின் அர்த்தம் என்ன?


*Hseija Ed Rian:* பிராணவாயு எந்தவிதத்திலும் செலவாகாமல் இருக்கவேண்டுமெனில் எப்போது பிரானவாயுவை அதிகமாக பிரயானம் செய்யாமல் வைத்திருக்கவேண்டும், அப்படி வைத்திருக்க பிராணனை கட்டுக்குள் வைத்திருக்கும் கலை பயிலவேண்டும் அல்லவா?


*Pothigaipriyan Vallalar:* பயம் சுத்தமாக இருக்க கூடாது என்பதே பயம் பூஜ்யம் என்கிறார் நண்பரே இது இச்சிறியேன் சிற்றிவுக்கு விளங்கியது ,மேலும் விளக்கம் இருந்தால் கூறலாம் .நன்றி வணக்கம்


*Hseija Ed Rian:* விசேடமாக பார்க்கில், வல்லலார் சொல்வது அப்படி “ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்”...அப்படியாயின் அது ஒரு பழக்கம் தானே அல்லவா?...சகஜமானது இல்லை....பிராணனை பழகவேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா?...


*Hseija Ed Rian:* “பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கபடாது “ என்கிறார்...அப்படியாயின் கொஞ்சம் பயம் வேண்டும் என்கிறார் அல்லவா?...இது ரெண்டு விதமான பயம் என தோன்றுகிறதல்லவா...?


*Pothigaipriyan Vallalar:* பிராணன் அதிக செலவு செய்ய கூடாது என்கிறார் ,ஆனால் அது கலை இயக்கம் என்பதை அவர் கூறியதாக தெரியவில்லை ,ஏன் என்றால் பிராணயாம பயிற்சியை அவர் எந்த இடத்திலும் வலியுறுத்தியதாக தெரிய வில்லை ,ஆதாரம் இருந்தால் கூறுங்கள் .தெரிந்து கொள்ளலாம்


*Hseija Ed Rian:* மட்டுமல்ல, புருவமத்தியில் நாடி வழி ஏறுவதும் இறங்குவதும் பிராணாயாமமே....சூட்ச்சுமமானது....தூல பிராணன் அல்ல...


*Hseija Ed Rian:* அப்படியாயின், சன்மார்க்க கொடி கட்டிக்கொண்டு அவர் உரையாற்றியபோது, சித்தர்கள் மறைத்த உண்மையை குறிப்பிட்டு , மேலும் புருவமத்தியின் உள் நாடிகளை நுணுக்கமாக வெளிப்படுத்தி அதி ஏறவும் இறங்கவும் அருள் புரிகிறாரே...அது எதற்க்கு?


*Hseija Ed Rian:* கொடிகட்டிக்கொண்டது சன்மார்க்கம் பூரனப்படு அவர் கடிசி காலத்தில் வெளிப்படுத்தியதே...அல்லாமல் அவர் சைவ சமயத்தில் பற்றுதல் கொண்டிருந்தபோது அல்ல என்பதையும் கருத்தில் கொள்வது நலம்...


*Hseija Ed Rian:* அதனாலேயே அந்த உபதேசம் “பேருபதேசம்” எனப்படுகிறது....பெரிய ஒரு விஷயம் சொல்ல்ப்பட்டிருக்கிறது.அதனாலேயே பேருபதேசம்...அல்லாது நிறைய கருத்துக்களை கூறியதனால் அல்ல...


*Pothigaipriyan Vallalar:* அது அனுபவ கண் விளங்கும் என்கிறார் நண்பரே ,இந்த சிறியேனுக்கு அனுபவம் இன்னும் இறைவன் அளிக்கவில்லை ,தங்களுக்கு அனுபவம் இருந்தால் கூறுங்களேன் !


*Hseija Ed Rian:* நான் இங்கு விசாரிப்பது மேலும் மேலும் நாம் சத்விசாரத்தில் முன்னேறவேண்டும் எனுமவாலால்


*Lalitha Arutperum Jothi:* அப்போ இங்கே வள்ளலார் வாசியை பற்றி கூறுகிறாரா?


*Hseija Ed Rian:* வள்ளலார் வாசியை பற்றி கூறினார் என யாரும் கூறவில்லையே....”பிராணவாயுவை அதிகம் செலவாகாமல் படி ஜாக்கிரதையாக பழகுதல் வேண்டும்” என்று தான் வள்ளலார் கூறுகிரார்....அப்படி பழகுவது வாசி அல்ல....சற்று விளக்குகிறேன் புரிந்து கொள்வது நலம்.....


*Hseija Ed Rian:* அதாவது, அருட்பெரும் ஜோதியெனும் மகாமந்திரத்தை மெல்லன தோத்திரம் செய்தல் வேண்டும்....அதே மந்திரத்தை நாம் 60 டெசிபெல் அளவுக்கு மேலெயும் உரக்க தோத்திரம் செய்யலாம்....அப்படி செய்வதினால் பிராணவாயு நஷ்ட்டம் செய்கிறது...அப்படி செய்யாது அங்கு ஒரு “மெல்லன” எனும் உபயோகம் உருவாக்கப்பட்டுள்ளது....அது போல பிராணவாயுவை அதிகம் நஷ்டம் செய்யாது ஜாக்கிரதையாக பழகும் முறை உண்டு....அது குரு முறை...ஆனால் தக்க முறையில் பெற்று கொள்ல தடையில்லை...


*Hseija Ed Rian:* அந்த முறையை வாசி யோகம் என தவறாக உருத்திரித்து கொள்ளவேண்டாம்....”மெல்லன” தோத்தரித்தலே ஒரு பிராண பழக்கமே...அது கொஞ்ச கொஞ்சமாக நீண்ட மூச்சை கொடுக்கும்...முதலில் தோத்திரம் செய்பவர்களுக்கு மூச்சு உள்வாங்கி வலிக்கும்...போக பொக மூச்சு நடை குறையும் ...நீண்ட மூச்சு உருவாகும்....ஓடிக்கொண்டு தோத்திரம் செய்தால் கூட மூச்சு வாங்காது...அப்படி மூசு பரிணமிக்கும்....தோத்திரத்தின் இனிமை அலாதியாகும்....


*Hseija Ed Rian:* எங்க ஊரிலே ஒரு பழக்கம் உண்டு...சிவாலய ஓட்டம் என்பார்கள்...எல்லா சிவராத்திரிக்கும் சிவனடியார்கள் 120 கிமீ தூரம் உள்ள 12 சிவ ஆலங்களை ஓடி வலம் வருவார்கள்..இந்த நடைமுறை அனாதிகாலம் முதல் நிலுவையில் உள்ளது...அந்று குமரிமாவட்டத்திற்க்கு லோக்கல் விடுமுறை...ஏனெனில் அந்த அளவிற்க்கு சிவனடியார்கள் நெடுஞ்சாலைகளில் ஓடிக்கொண்டிருப்பார்கல், கூடவே ஒரு தோத்திரமும் உண்டு....”கோபாலா..கோவிந்தா...சிவனே வல்லபோ....” என்பதாஅகும்....24 மணி நேரம் ஓடி 12வது ஆலயத்தில் சரணடைவர்....இப்படி நீண்ட தூரம் ஓடினாலும் தோத்திரம் நடந்துகொண்டே இருக்கும்....அப்படி ஓடி எங்களுக்கு சஹஜம்...


*Hseija Ed Rian:* இப்படி வாய் வழியாக மூச்சு 24 மணி நேரெம் நடந்து கொண்டிருக்கும்....இதுவே ” தோத்திரத்தின் ரகசியம்...இது வாசி கிடையாது....இதன் நுணுக்கமெ “பாகவத பாராயணம்” மற்ரும் “ராமாயண பாராயணத்திலும் உ்ண்டு


*Hseija Ed Rian:* இது வாசி வித்தை கிடையாது.


*Hseija Ed Rian:* திருமூலர் சொல்வார் “வள்ளல் பிரினோர்க்கு வாய் கோபுர வாசல் “ என்று...இதையே கண்ணபிரான் யசோதாதேவியாருக்கு வாயை திறந்து காட்ட 14 உலகங்களும் தெரிந்த கதை.

சிந்தனைக்கு மனம்

 ம்முடைய மனதின் இயக்கமானது பிரானனினூடே இருக்கிறது...பிராணனானது ஜீவனோடே ஐக்கியத்திலும், மனமானது அறிவினோடே ஐக்கியத்திலும் இருக்கிறது...அறிவானது ஆன்மாவுடன் ஐக்கியத்திலும் , அது போல ஜீவனானது உடம்புடன் ஐக்கியத்திலும் இருக்கிறது. இதில் உடலுடன் இயங்கும் ஜீவன் கண்டத்தில் இருந்து கீழ்முகமாக இயங்குகிறது...இதையே ஜீவான்மா என்கிறோம்...அது போல அறிவு ஆன்மாவுடன் இருக்கிறது என்பது சொன்னேன் அல்லவா/..பர ஜீவன்....புருவமத்தியில் இருப்பிடம்...அது சாகாது, ஆன்மாவுடன் செல்லும்..கண்டத்தில் இருப்பது சாகும் ஜீவன்//

 படிப்பதாயின் எல்லா அங்ஙங்களும் தோய படிக்கவேண்டும்.வாயிற் சொல்லும் ராக ஞானம் செவி கேட்க வேண்டும்.செவி கேட்ட பின்னரே மனம் அதை தெரிந்துகொள்ளும்.அதன் பிறகுதான் அறிவு உணரமுடியும்.வாய் மூடிகொண்டு படிக்கிற பழக்கம்-கிரகிக்கிற பழக்கம் இந்த மெய்ஞான கல்விக்கு ஆகவே ஆகாது.

வேதத்திலிருக்கும் முத்துக்களை வரிசையாக எடுத்துவிட முடியாது.ஒரு முத்து இங்கிருக்கும்,மற்றொரு முத்து மற்றொரு அள்ளையிலிருக்கும்,மற்றொன்று எட்ட முடியாத ஆழத்தில் இருக்கும்.இவ்வாறு பாராதூரமாகிய மறைப்பு ஒளிப்புகளுக்கிடையில் சிதறியிருந்தவற்றை தருமமாக ஞானிகள் திரட்டி சேர்த்து,வேதாந்தமென்று ஓதி வைத்திருப்பார்கள்.அதை வாய்விட்டு படிப்பதால்,கருவி குலங்ஙள் ஒவ்வொன்றும் அதை பருகுகின்றன.அதில் சாந்தியாகிய ஒரு சலாமத் இருக்கின்றது.

நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை

 

  நீங்கள் என் பிதாவை அறிந்ததுமில்லை , அவர் சத்தத்தை கேடதுமில்லை என அவர் சொல்லுவார்... ஆனால் பைபிளில் எங்குமே அவருடைய பிதா யார் எனவோ, அவரின் நாமம் இன்னது எனவோ சொல்லபட்டிருக்காது....


நானும் பிதாவும், பிதாவுக்கு இஷ்ட்டமானவர்களும் தவிர வேறொருவனும் பிதாவை அறியான் என சொல்லுவதன் மூலம் அந்த விஷயத்தின் ஆழமும் மறை பொருளும் ஒருவாறு விளங்கி கொள்ளலாம்?


அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்" 


அவரது நாமம்தான் அந்த வார்த்தையா ஐயா?


அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்பது இதுவே, அதனாலேயே பைபிளில் எங்குமே பிதாவின் நாமம் இன்னது என சொல்லப்படவில்லை.


அந்த வார்த்தையை அறிந்து கொண்டவன் பிதாவை பிதாவின் சொந்த நாமத்திலே அழைக்கிறான்... அவனுக்கு அவர் மறு உத்தரவு கொடுக்கிறார்.... அறியாதவனோ யாரிடம் பேசுகிறோம் என அறியாமல் பேசிக்கொண்டே இருப்பான்... யாரும் மறு உத்தரவு கொடுப்பதில்லை


அவருடைய மாமிசத்தை போஜனம் பண்ணி அவருடைய இரத்தத்தை பானம் பண்ணுவதே நித்திய ஜீவனுக்கு மார்க்கம்


 அதை தெரியாமல் பிரெட்டும் வைனும் பக்தர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறர்கள்...எங்கே நித்திய ஜீவன் வரபோகிறது?


 மாமிசம் என்பது அந்த வார்த்தையில் இருக்கும் “மெய்” எழுத்து.. இரத்தம் என்பது “உயிர்” எழுத்து.


மாமிசமும் இரத்தமும் இன்னதென்று அறிந்து கொள்வது எவ்வாறு?


ஹ..ஹ..ஹ...கடந்த 2000 வருடமாக இதைத்தான் தேடிகொண்டிருக்கிறார்கள்... வாத்திகன் உட்பட யாரும் அறியவில்லை


ஆனால் அவரோ அவருடைய கடைசி போஜனத்தின் போது சீடர்கலுக்கு அதை பிய்த்து காட்டிகொடுத்தார்


அதாவது அந்த வார்த்தையை பிரித்து காட்டி அதை சாப்பிட்டு அருந்த சொன்னார்.. அவர்கள் புரிந்துகொண்டார்கலோ என தெரியவில்லை


ஆனால் ஒருவர் அதை அறிந்திருந்தார் என்பது நிச்சயம்... "லாசரஸ்"...


இன்னதென்று சுட்டி காட்டியும் மற்றவர்கள் விளங்காதிருக்க காரணம் என்ன?


சிலபோது சீடர்கள் அதிக பண்டிதர்களாக இருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்...மீன் பிடித்துக்கொண்டும் வயலில் ஆடுமேய்த்துகொண்டும் கிடந்தவர்கலை அல்லவா சொர்க்க ராஜ்ஜியத்திற்க்கு வரும் படி அழைப்பு விடுத்தார்...


தேவனுடைய வார்த்தையால் பிறப்பது எதுவோ அது தேவனுடைய சாயலில் இருக்கும்


அந்த வார்த்தையானது தூலத்தை கடந்த சூட்சுமத்தில் அவனுக்குள் வைக்கபடுகிறது...சூட்சும தேகத்தில் பிறக்காதவன் அதை புரிந்துகொள்ளவும் மாட்டான்


ஆனால் மனிதர்கள் அவருடைய சாயலிலும் அவருடைய ரூபத்திலும் இருக்க காணோமே!..அந்த சாயல் எங்கே?..அந்த ரூபம் எங்கே? ...அதை குரு தான் காட்டவேண்டும்


அந்த வார்த்தை மாமிசமாகி கிருபையும் சத்தியமும் நிறைந்தவராக நம்மில் வாசம் பண்ணினார் என்பது இதுவே..கிருபையும் சத்தியமுமே தேவனுடைய ரூபமும் சாயலும்.....அவர் உடுத்தியிருந்த வஸ்த்திரத்தின் நுனி நூலை தொட்ட பெண்ணுக்கு அக்கணமே ரோகம் சாந்தமானது அந்த வல்லபமே


நடந்து போகையில் அவர் காலடியின் கீழே பல்லாயிரம் கோடி வருடங்கலாக மண்ணறையில் துயிபவர்கள் கூட உயிர் பெற்று எழும்பும் வல்லமை கொண்டது அந்த ஜீவவார்த்தை.


❣ நன்றி: திரு. ரியான் ஐயா ❣